Shadow

Tag: Circle Box Entertainment

குலுகுலு விமர்சனம்

குலுகுலு விமர்சனம்

இசை விமர்சனம், இது புதிது, சினிமா
மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படைப்பு. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட ஜானராகவே தன் படங்களைக் கொடுத்து வருகிறார். இம்முறை, மிகவும் மாறுபட்ட நகைச்சுவைப் படத்தை இயக்கி அசத்தியுள்ளார். அமேசான காடுகளில் வசிக்கும் ஓர் இனக்குழுவில் பிறந்த மாரியோ, பல நாடுகள் பயணித்து, பதிமூன்று மொழிகள் கற்று தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கை முழுவதும் பயணமும், அதனால பலவற்றைப் பற்றிய ஞானத்தினையுடைய மாரியோ, அனைத்தும் தெரிந்தவர் என்ற பெயரில் கூகுள் என அழைக்கப்படுகிறார். அதுவும் மழுவி குலுபாய் என்றும் அழைக்கப்படுகிறார். யாரெந்த உதவி கேட்டாலும் செய்யக் கூடியவரான குலுபாயிடம், கடத்தப்படும் தன் நண்பனைக் கண்டுபிடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார்கள் மூன்று இளைஞர்கள். பிரான்ஸில் இருந்து வரும் மதில்டா எனும் இளம்பெண்ணை, அவளது அண்ணன்மார் இருவர் கொலை செய்யத் துரத்துகின்றனர். தன் தம்பியை விடுவிக்க, க...
நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

சினிமா, திரைச் செய்தி
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், மேயாத மான் படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. ஜூலை 29 அன்று படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு, ஜூலை 22 அன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “நான் வேலை பார்த்த படங்களில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்தப் படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்த உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் எனது இண்டிபெண்ட...
A1 விமர்சனம்

A1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐயங்கார் பெண்ணான திவ்யா, சரவணனை ஐயங்கார் பையனென நினைத்துக் காதலிக்கிறார். சரவணனோ லோக்கல் பையன். திவ்யாவின் அப்பாவோ இக்காதலை ஒத்துக் கொள்ளவில்லை. நாயகனின் நண்பர்கள் இணைந்து நாயகியின் தந்தையைக் கொன்றுவிடுகின்றனர். பின், சரவணன் - திவ்யா காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. என்ன தான் நகைச்சுவைப் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது அடிப்படை விதி என்றாலும், காதல் வர இவ்வளவு மொக்கையான காரணத்தை வைத்திருக்கவேண்டாம் இயக்குநர் K.ஜான்சன். சண்டை போடும் ஐயங்கார் பையன் என்பதால் நாயகிக்கும்; முதல் முறை பார்த்ததுமே காதலைச் சொல்லி, அதை உறுதிபடுத்த உதட்டில் முத்தமே கொடுத்துவிடுவதால் நாயகனுக்கும் காதல் வந்துவிடுகிறதாம். ஷ்ஷ்ப்ப்பாஆஆ.. நாயகனின் தந்தை லோகுவாக எம்.எஸ்.பாஸ்கர் செமயாக நடித்துள்ளார். கதாபாத்திரங்களின் டைமிங் டயலாக்கால், காமெடியில் ஸ்கோர் செய்யும் படம் இது. ஆனால் தேர்ந்த நடிப்பையும், உடற்ம...
A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

சினிமா, திரைச் செய்தி
சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் ஜுலை 26 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி.செளத்ரி வெளியிடுகிறார். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், "சூது கவ்வும் படத்திற்குப் பிறகு எனக்கு மிகப் பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் எப்பவாவது வரும். இந்தப் படமும் சமத்துவத்தை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்துக் கொண்டு மக்களை என்டெர்டெய்ன் பண்றது ரொம்பக் கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். இந்தப் படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம் இந்தப் படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் இந்தப் படம் நல்லா இருக்கும் என்று நம்பிக...