Shadow

Tag: Corona

ஜெ. அன்பழகன் – கொரோனா காலத்து வரலாற்று நாயகன்

ஜெ. அன்பழகன் – கொரோனா காலத்து வரலாற்று நாயகன்

சமூகம்
தன்னுடைய தந்தை பழக்கடை ஜெயராமனைப் போலவே சென்னை மாநகரில் திராவிட முன்னேற்ற கழகத்திற்குக் கிடைத்த பெரும் செயல் வீரர் மறைந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன். தென்சென்னையில் கிட்டு சிட்டாகப் பறந்து கொண்டிருந்த காலம் வரையிலும், அடக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர் கிட்டுவின் மரணத்திற்குப் பிறகே லைம்லைட்டுக்கு வந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தவரை ஓய்விலேயே சில வருடங்கள் இருக்கும்படி பணித்து, பின்பு, ‘மருத்துவர் சான்றிதழ் கொடுத்தால்தான் களப்பணியில் உன்னை இறக்குவேன்’ என்று பாசத்துடன் சொல்லி இவரை அரவணைத்தவர் கருணாநிதி. சென்னையில் இருக்கும் அ.தி.மு.க. செயல் வீரர்களுக்கு ஈடு கொடுக்கும்வகையில் அவர்களுடைய 'அனைத்து வகை விளையாட்டு'க்களுக்கும் எதிர் விளையாட்டை நடத்திக் காட்டி கடந்த 15 ஆண்டுகளாகச் சென்னையில் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றியவர். கருணாநிதிய...
அம்மா மூவி அசோசியேஷனின் கொரோனா நிவாரண உதவி

அம்மா மூவி அசோசியேஷனின் கொரோனா நிவாரண உதவி

மற்றவை
கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமுலுக்கு வந்து எண்பது நாட்களைக் கடந்துவிட்டது. இதன் காரணமாகத் திரைப்படத்துறை வேலைவாய்ப்பை நம்பி உள்ள தொழிலாளர்கள் வருவாய் இன்றித் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்புப் பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்குக் காரணமாக உள்ள மீடியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ள அம்மா மூவி அசோசியேசன் தங்கள் உறுப்பினர்களைப் பாதுகாக்கும் பொருட்டு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்களை வழங்கிவந்தனர். மக்களை ஆளும் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்புகள், அதனை அமுல்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துவருகிறது மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நிவார...
புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை

புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை

சமூகம்
பா.ஜ.க.வின் மருத்துவக் கிளை உறுப்பினரான புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், வட சென்னை கிழக்கு பகுதியின் தலைவர் திரு. கிருஷ்ண குமார் மற்றும் மத்திய சென்னை மேற்கு பகுதியின் தலைவர் திரு. தனசேகரன் மூலமாக, ஏழ்மையில் வாடும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு, மளிகைப் பொருட்களை (Modi kit) வழங்கினார். இந்நிவாரணப் பணியை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் டாக்டர் L. முருகன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சென்னை மண்டலத்தின் பொறுப்பாளரான திரு. காளிதாஸ் முன்னின்று ஒருங்கிணத்தார். நிவாரணப் பொருட்கள்: 1. 10 கிலோ அரிசி 2. 400 கிராம் சத்து மாவு பொடி 3. ½ கிலோ சர்க்கரை 4. ½ கிலோ துவரம் பருப்பு 5. ½ லிட்டர் எண்ணெய் 6. ½ கிலோ ரவா 7. 100 கிராம் சீரகம் 8. 100 கிராம் மஞ்சள் பொடி 9. 100 கிராம் மிளகாய் தூள் 10. 1 கிலோ உப்பு பேராசிரியரும் மருத்துவருமான அனிதா ரமேஷ், லாக்டவுன் தொடங்கிய காலகட்டத்திலேயே ஏழைகளுக்...