
மாயோன் – 25 நாட்களைக் கடந்த திரைமாயம்
புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக வெளியான “மாயோன்” ரசிர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது.
ஒரு திரைப்படம் ஒரு வாரம் முழுதாக ஓடினாலே மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடப்படும் தற்போதைய தமிழ் சினிமாவில், மாயோன் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, ரசிகர்களின் பேராதரவில் 4 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்து, வெற்றிகரமாகத் திரையரங்குளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது.
அறிவியலும் புராதனமும் கலந்து கட்டிய திரைக்கதை, அட்டகாசமான இசை, கண்ணைக் கவரும் பிரம்மாண்ட கலையமைப்பு முதலியன மாயோன் படத்தின் சிறப்புகள்.
மாமனிதன், வேழம் படங்களுடன் “மாயோன்” திரைப்படம் வெளியானது. மற்ற படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், இப்படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்து...