
ட்ரீம் வாரியர் பிக்சர்சின் 21வது படத்தில் ஜோதிகா
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இரண்டாவது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு அவர் நடித்த '36 வயதினிலே' படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படமும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றிப் போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டுமெனக் கவனமாக இருக்கிறார். இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களைத் தன்வசப்படுத்தி வருகிறார். அதற்குச் சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம். இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பைக் குறிப்பாக பெண்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ஜோதிகாவை வைத்த...