Shadow

Tag: Hugh Jackman

Deadpool & Wolverine | ரூ. 3650 கோடி வசூல் சாதனை

Deadpool & Wolverine | ரூ. 3650 கோடி வசூல் சாதனை

அயல் சினிமா, இது புதிது, திரைத் துளி
உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் டெட்பூல் & வுல்வெரின் படத்தைத் திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்தப் படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது. இந்தியாவில் 'டெட்பூல் 1' (40.79 கோடி GBOC) மற்றும் 'டெட்பூல் 2' (69.94 கோடி GBOC) ஆகிய இரண்டின் வாழ்நாள் வசூலை, 'டெட்பூல் & வுல்வெரின்' திரைப்படத்தின் முதல் வார இறுதி வசூல் முறியடித்துள்ளது. அதாவது, ரூ. 83.28 கோடி வசூலித்துள்ளது. இது வரவிருக்கும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்பார்க்கலாம். சிறந்த கேமியோஸ், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் பல கமர்ஷியல் பொழுதுபோக்கு விஷயங்களுடன் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது. மார்வெல் ஸ்டுடியோவின் '...
Deadpool & Wolverine விமர்சனம்

Deadpool & Wolverine விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வானத்தின் கீழ் இருக்கும் எதுவுமே புனிதமில்லை என சகலத்தையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கும் டெட் பூல், இம்முறை பன்னண்டத்தில் (Multi-verse) இருக்கும் அத்தனையையுமே கேலிக்கும் கேள்விக்கும் கிண்டலுக்கும் உரியவை தான் என டாப் கியரில் கலாய்த்துள்ளார். முத்தாய்ப்பாக டெட்பூல் படத்தின் முன்னாள் உரிமையாளரான '21st Century Fox'-ஐ சகட்டுமேனிக்குக் கலாய்த்துத் தள்ளுகிறார் டெட்பூல். ஆங்கில வசனங்களின் சாறு குறையாதவண்ணம் தமிழ் டப்பிங்கையும் மிகக் கலகலப்பாக எழுதியுள்ளனர். சூப்பர் ஹீரோ நகைச்சுவைப் படம் என்றாலும் A சான்றிதழ் பெற்ற படமென்பதை நினைவில் கொள்க. படத்தை வால்ட் டிஸ்னி கையகப்படுத்தி இருந்தாலும், டெட்பூலின் வாய்க்குப் பூட்டு போடாமல் அப்படியே அனுமதித்துள்ளது சிறப்பு. ஒரு சூப்பர் ஹீரோவுக்கு எப்படி மரியாதையுடன் 'குட் பை' சொல்லி வழியனுப்பி வைப்பதென்பதற்கான செவ்வியல் எடுத்துக்காட்டாக லோகன் திரைப்படம் வ...
லோகன் விமர்சனம்

லோகன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
17 வருடங்களாக 9 படங்களில் வுல்வெரினாக மக்கள் மனதில் பதிந்த ஹ்யூ ஜாக்மேன், லோகன் படத்தோடு அப்பாத்திரத்தில் நடிப்பதற்கு குட் பை சொல்கிறார் ஹ்யூ ஜாக்மேன். அதற்கு ஏற்றாற்போல், ஹ்யூ ஜாக்மேனிற்கு மிகக் கச்சிதமானதொரு ட்ரிப்யூட் செய்துள்ளார் இயக்குநர் மேங்கோல்ட். மரணத்திற்காகக் காத்திருக்கும் லோகன், தன் நண்பர்களுக்காக ஒரு படகு வாங்கப் பணத்தைச் சேமிக்கிறார். ஆனால், லாரா எனும் மியூடன்ட் சிறுமியைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் விருப்பமில்லாமல் சிக்கிக் கொள்கிறார் லோகன். யாரந்த சிறுமி? பலஹீனமான லோகன் எடுத்துக் கொண்ட கடமையை வலிமையான எதிரிகளை மீறி நிறைவேற்றினாரா என்பதுதான் படத்தின் கதை. மனிதர்களைத் துன்புறுத்தி விடவே கூடாதெனக் கவனமாக இருக்கிறார் லோகன். ஆனால், படத்தின் தொடக்கமே வுல்வெரினின் உலோக நகங்கள் ரத்தத்தில் நனைகிறது. படம் நெடுகேவும் அதே கதைதான். வுல்வெரினின் நகங்கள் மனிதர்களின் முகங்களை, மேலிருந்த...
மீண்டும் வுல்வெரின்

மீண்டும் வுல்வெரின்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
அகாதெமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹ்யூ ஜாக்மேன் மீண்டுமொரு முறையும், இறுதியாகவும் வுல்வெரின் வேடத்தில் தோன்றுகிறார். லோகன் என்ற இப்படத்தை, முந்தைய ‘தி வுல்வெரின்’ படத்தை இயக்கியிருந்த ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கியுள்ளார். 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரையன் சிங்கரின் எக்ஸ்-மேன் (X-Men) படத்தில் தான் முதல் முறையாக ஹ்யூ ஜாக்மேன், வுல்வெரின் வேடத்தில் தோன்றிக் கலக்கியிருந்தார். இப்பொழுது ஒன்பதாவது முறையாக, அதே வேடத்தில் இப்படத்தில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிவந்த அந்தத் தொடர் படங்களில் எல்லாம், வுல்வெரினின் அதிசய சக்திகள் மட்டுமே பறைசாற்றப்பட்டன. மனித நேயத்திலும் வுல்வெரின் சற்றும் குறைந்தவர் அல்ல என்பதை இப்படம் நிலைநாட்டுகிறது. வுல்வெரினின் இக்குணமே, இதர படங்களில் இருந்து இப்படத்தை மாறுபட்டதாக்கியுள்ளது. இப்படத்தின் கதை நிகழும் ஆண்டு, 20...