Shadow

Tag: Infiniti Film Ventures

மழை பிடிக்காத மனிதன் – கவித்துவமான ஆக்‌ஷன் என்டர்டெய்னர்

மழை பிடிக்காத மனிதன் – கவித்துவமான ஆக்‌ஷன் என்டர்டெய்னர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ரோமியோ’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிடத் தயாராகி வருகிறார். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலி சோடா', '10 எண்றதுக்குள்ள', 'கோலி சோடா 2' போன்ற படங்களை இயக்கியவரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் 'மழை பிடிக்காத மனிதன்' (MPM) படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ ‘டாலி’ தனஞ்ஜெயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, ப்ருத்வி ஆம்பர், சரண்யா பொன்வண்ணன், ‘தலைவாசல்’ விஜய், ஏ.எல். அழகப்பன், 'திருமலை' படப்புகழ் இயக்குநர் ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ஒரு சிறப்பான முக்கியத்துவமிக்க கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு பெரும் ...
கொலை விமர்சனம்

கொலை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விடியும் முன் படத்தினை இயக்கிய பாலாஜி K. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொலை. பிரபல மாடலும் பாடகியுமான லைலா என்னும் பெண் பூட்டப்பட்ட தன் வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள். அவளை கொன்றது யார் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் படலம் தான் இந்தக் கொலை. இயக்குநர் பாலாஜி K. குமாரின் முந்தைய படமான ‘விடியும் முன்’ திரைப்படமே அது உருவாக்கப்பட்ட விதத்திலும், அதில் பயன்படுத்தப்பட்ட ஒளிக் கீற்றுகள், வண்ணங்கள் ஆகியவற்றின் பலத்தினாலும் இந்திய வரைவியலுக்கு உட்பட்ட கதைக்களமான நிலத்தை ஹாலிவுட் காட்சியமைப்போடு காட்டி மிரட்டியதற்காக வெகுவாக பாராட்டும் வரவேற்பும் பெற்றது. அது போல் தான் கொலை திரைப்படமும். படத்தின் ஆரம்பத்தில் கருப்பு வெள்ளையில் வரும் காட்சி பிம்பங்கள் மட்டுமன்றி ...
“கொலை: மர்மத்தை உடைக்கும் கதபாத்திரம்” – விஜய் ஆண்டனி

“கொலை: மர்மத்தை உடைக்கும் கதபாத்திரம்” – விஜய் ஆண்டனி

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விஜய் ஆண்டனி. நடிகர் விஜய் ஆண்டனி, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கேரியரில் ஒருமுறையாவது இது போன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பைக் ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன். அதுமட்டுமின்றி, படத்தில் வரும்...
கொலை – புலனாய்வு அதிகாரியாக ரித்திகா சிங்

கொலை – புலனாய்வு அதிகாரியாக ரித்திகா சிங்

இது புதிது, சினிமா, திரைத் துளி
நடிகை ரித்திகா சிங் தேர்ந்தெடுத்து நடித்து வரக் கூடியப் படங்கள் அனைத்துமே அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேசிய விருது பெற்ற நடிகையான ரித்திகா சிங், அவரது அடுத்து வெளியாக இருக்கும் ‘கொலை’ படம் குறித்து உற்சாகமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 21, 2023) வெளியாகும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங், “தமிழ் சினிமா தொடர்ந்து மனதுக்கு நெருக்கமான நல்ல கதாபாத்திரங்களை எனக்கு அளித்து வருகின்றன. ’கொலை’ படத்தில் எனக்குப் புத்திசாலித்தனமான ஒரு புலனாய்வு அதிகாரி கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனத்தைச் சோதிக்கும் சவாலான சூழ்நிலைகளை அவள் அடிக்கடி எதிர்கொள்வாள். கொலையின் மர்மத்தை முறியடிப்பது அவளுடைய முக்கிய வேலையாக இருக்கும். அதே வேளையில், அவள் தனது மூத்த அதிகாரிகள...
“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின்

“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின்

இது புதிது
பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’ ஆகும். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் மற்றும் பல முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனிதான். தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார். இந்தக் ‘கொலை’க்கு பிறகு ‘இரத்தம்’ வரும். அதன் பிறகு ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களுடன் இணைந்து படத்தில் பணி புரி...
கொலை திரைப்படம் – மிஷ்கினுக்கு ட்ரிப்யூட்

கொலை திரைப்படம் – மிஷ்கினுக்கு ட்ரிப்யூட்

சினிமா, திரைச் செய்தி
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம், லோட்டஸ் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K. குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி, மீனாட்சி சவுத்ரி, ரித்திகா சிங் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கொலை’ ஆகும். “லைலாவைக் கொன்றது யார்?” எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் கடந்த 2 நாட்களாக டிரெண்டிங் ஆகி வருகிறது. ‘கொலை’ படத்தில் இடம் பெறும் சம்பவம் குறித்து பரவும் இந்தச் செய்தி திரைப்பட ஆர்வம் இல்லாப் பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. வித்தியாசமான இந்த மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலைத் தூண்டிய இந்தப் படத்தின் டிரெய்லர், நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் பேசிய தனஞ்செயன், “இந்தப் படம் உருவாக முழு காரணம் விஜய் ஆண்டனி சார்தான். இயக்குநர் பாலாஜி மிகவும் திறமையான நபர். அவருக்கு பல...
கன்னட நடிகருக்குப் பின்னணி பேசிய நகுல்

கன்னட நடிகருக்குப் பின்னணி பேசிய நகுல்

சினிமா, திரைத் துளி
கமல் போஹ்ரா, ஜி. தனஞ்சயன், பிரதீப் B மற்றும் Infiniti Film Ventures பங்கஜ் போரா ஆகியோரின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் வரவிருக்கும், பெரிய பட்ஜெட் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பர் நடித்த காட்சிகளுக்குத் தமிழில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார் நகுல். தமிழ்த் திரையில் நடிகராக மட்மில்லாமல், பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பின்னணிப் பாடகராகப் பணியாற்றி கவனத்தை ஈர்த்தவர் நகுல். அவர் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் பணியாற்றி, தமிழ் மக்களின் இல்லத்துப் பிள்ளையாக மாறியுள்ளார். இப்போது, நடிகர் விஜய் ஆண்டனி நடித்த "மழை பிடிக்காத மனிதன்" படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பருக்குப் பின்னணிக் குரல் கொடுத்துத் திரைத்துறையில் ஒரு புதிய பாத்திரத்தை ஏற்றுள்ளார். படக்குழுவினர், தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நடிகர்களான நகுலையும், பிருத்...