Shadow

Tag: Jayam Ravi

கோமாளி விமர்சனம்

கோமாளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ட்ரெய்லர் வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியை நீக்கி, நாஞ்சில் சம்பத்தை மாற்றாக அக்காட்சியில் கொண்டு வந்துள்ளது படக்குழு. அதோடு நில்லாமல், கீழே எழுத்தாக, கோமாளி படத்தில் இருந்து ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கம் எனப் பதிந்து, படையப்பா ரஜினி செந்திலைக் கலாய்ப்பது போல் ரஜினி ரசிகர்களைச் சாமர்த்தியமாகக் கலாய்த்துள்ளது படக்குழு. ஒரு விபத்தில் 16 வருடங்கள் கோமாவில் விழுந்து விடுகிறான் ரவி. அவன் அதிலிருந்து மீண்டதும், அசுர மாற்றம் அடைந்திருக்கும் அனைத்தையும் பார்த்துக் குழம்பி, 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?' என இந்த உலகத்தைப் பார்த்து கோமாளி போல் கேள்வி எழுப்புகிறான். கோமாளி ரவிக்குச் சொந்தமான சிலை ஒன்று, எம்.எல்.ஏ. தர்மராஜிடம் இருப்பது தெரிய வர, அதை மீட்டெடுத்து அவரால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரி செய்ய முடிகின்றதா என்பதுதான் படத்தின் கதை. முதல் பாதி ஜால...
கோமாளி பாட்டுப்புத்தகம் – 90’ஸ் கிட்ஸ்களுக்காக

கோமாளி பாட்டுப்புத்தகம் – 90’ஸ் கிட்ஸ்களுக்காக

சினிமா, திரைத் துளி
இன்று தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்துவிட்ட நிலையில், 90'ஸ் கிட்ஸ்களின் கொண்டாட்டங்கள் எல்லாம் பழங்கதையாகி விட்டன. அதிலொன்று பாட்டுப்புத்தகம். அவை இன்று பரிணாம வளர்ச்சியடைந்து, பாடல் வரிகளுடன் கூடிய காணொளியாக (Lyrical video) உருமாற்றம் கொண்டுள்ளது. அப்பொற்காலத்திற்கு மீண்டும் செல்வது சாத்தியமில்லை எனினும், கோமாளி படக்குழு தங்கள் படத்துக்கும் பாட்டுப் புத்தகத்தை உருவாக்கி, ரசிகர்களை 90 களின் இனிய நினைவுகளில் திளைக்க வைக்க முடிவு செய்துள்ளனர். "ட்ரெய்லரை, அனைவரும் அதில் பொதிந்துள்ள ஜாலியான நகைச்சுவைக்காக விரும்புவார்கள் என நினைத்தோம். ஆனால், 90 களின் நாஸ்டால்ஜியாவில் ரசிகர்கள் திளைக்க ஆரம்பித்தது, நாங்கள் எதிர்பார்க்காதது. அதனால் அக்காலகட்டத்தில் சிறப்பான அம்சங்களை மீள் உருவாக்கம் செய்யத் திட்டமிட்டோம். அதன் முதல் படியாக, பாட்டுப்புத்தகம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். முன்பெல்லாம், ஒரு படத்தின...
ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம்

ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம்

சினிமா, திரைத் துளி
மாஸ் படங்களில் நடித்து கைத்தட்டல்களையும், விசில் ஒலியையும் பெறும் அதே நேரத்தில், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார் ஜெயம் ரவி. அவரது அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.  "நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களைத் தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்ச...
டிக்: டிக்: டிக் விமர்சனம்

டிக்: டிக்: டிக் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வங்காள விரிகுடாவில் விழவிருக்கும் விண்கல்லைப் பூமிக்கு வெளியேவே அணு குண்டை ஏவிப் பிளக்கவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு, ஆந்திரம், இலங்கை ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு, சுமார் 4 கோடி மக்கள் அழிந்துவிடுவர். இந்தியத் தற்காப்புப் படை, எப்படி நான்கு கோடி மக்களைக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி என்ற வகையில் அசத்தியுள்ளனர் என்றே சொல்லவேண்டும். கன்னி முயற்சியில், நடை தளருவது இயற்கை எனினும் விழாமல் இலக்கை அடைவது சாதனையே! அந்தச் சாதனையை மெனக்கெடலில்லாத் திரைக்கதையால் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. 1998 இல் வெளிவந்த, 'ஆர்மகெடான்' ஹாலிவுட் படத்தில் இருந்து மையக்கருவை எடுத்துள்ளனர். உள்ளபடிக்குச் சொன்னால், அது ரசிக்கும்படியே உள்ளது. #னாவின் (அதாவது ஏதோ ஒரு நாட்டின்) அணு ஆயுதத்தைத் திருடும் அத்தியாயம் தான் படத்தின் ஸ்பீட் பிரேக்கர். விண்வெளி ஆராய்ச்சி நிலை...
போகன் விமர்சனம்

போகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனி ஒருவன் வெற்றி ஜோடியான அரவிந்த் சாமி – ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்குப் பிரதான காரணம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். ‘போகன்’ என்றால் புலன்களால் பெறும் இன்பத்தை அனுபவிப்பவன் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, வாழ்விலுள்ள ராஜ சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் பெரும் இச்சையுடைய போகனாக அரவிந்த் சாமி கலக்கியுள்ளார். தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள, ஆய கலைகளில் 52வது கலையான ‘பரகாயப் பிரவேசம்’ எனும் சக்தியை அரவிந்த் சாமி பிரயோகிப்பதாகக் காட்டியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன். ஆனால், கூடு விட்டு கூடு பாய்தல் என்பது இறந்த உடலில் ஒருவர் தன் உயிரினைப் புகுத்திக் கொள்வதாகும். படத்தில் காட்டப்படுவது ‘கூடு மாறுதல் (Body Swapping)’ எனும் கலை. இந்த அழகான ஹாலிவுட் கற்பனைக்கும், சித்தர் போகர் அருளியதாகப் படத்தில் காட்டப்படும் பரகாயப் பிரவ...