Shadow

Tag: Karnan movie

கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

சமூகம், சினிமா, மற்றவை
கொடியன்குளம் கலவரம் தான் கர்ணன் படத்தின் கரு என நம்பத் தொடங்கிய இணைய திமுகவினர், தொடர்ந்து அதைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தங்கள் கோபத்தினைப் பதிந்து வந்தனர். இறுதியாக, திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, இணைய திமுகவினரைக் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி (!?) வைத்துள்ளார். ஒரு புனைவைப் புனைவாகப் பார்க்கச் சொல்லி உடன்பிறப்புகளிடம் நயமாகச் சொல்லிக் கடக்காமல், வரலாறு சரி செய்யப்படவேண்டும் என நல்லெண்ணத்தில் உதயநிதி ஸ்டாலினும் கர்ணன் திரைப்படக் குழுவிடம் பேசி தேதிகளை மாற்றும்படி கேட்டுள்ளார். ஆக, இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினும், இப்படம் ஆஃபிஷியலாக 'கொடியன்குளம் கலவரம்' பற்றிய வரலாற்றுப்படம் தானென்று பொதுவெளியில் ஒத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சியில், கொடியன்குளத்தின் மீது, சசிகலாவினுடைய நேரடி கட்டளைக்கிணங்க நிகழ்ந்த அரச பயங்கரவாதத் தாக்குதலை, காவல்து...
கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

சமூகம், சினிமா
சினிமா என்பது வரலாற்றை உள்ளவாறே பதிவதல்ல. அது ஒரு கலை வடிவம். கலையென்பது புனைவு. ஆவணப்படுத்துதல் அதன் நோக்கம் இல்லை. தனக்கு உகந்தவாறு நிகழ்வுகளை வளைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் படைப்பாளிக்கு உண்டு. Inglourious Basterds எனும் படம் ஓர் உதாரணம். ஹிட்லரைக் கொல்வதாக டொரன்டினோ காட்சிப்படுத்தியிருப்பார். அது speculative fiction எனும் ஜானரைச் சேர்ந்தது. 97இல், வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் என்பவரது பெயரில் பேருந்துகளை அரசு இயக்கியது. அவரது "பெயர்" கொண்ட பேருந்தில் ஏறமாட்டோம் என மாற்று சாதியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரம் கட்டுக்கு அடங்காததாலும், பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு எட்டாததாலும், பல்லவன், கட்டபொம்மன் முதலிய போக்குவரத்துக் கழங்கள் அனைத்துக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் என பொதுப்பெயர் இடப்பட்ட்து. படத்தின் கதை நிகழும் காலம் இதுவே! கண்ணபிரானாக வரு...