Shadow

Tag: Kauvery Hospital

KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவனை, பக்கவாதம் மற்றும் பெருமூளையின் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நவீன ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தைத் (KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது. பக்கவாதம், அல்லது மூளை தாக்குதல், என்பது உடல் இயக்கமின்மைக்கும், மரணத்திற்குமான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சராசரியாக நான்கு பேரில் ஒருவர் என்ற சதவிகிதத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் இந்நோயால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக பக்கவாதம் அமைப்பு கூறுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒருவர் மூளை தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதத் தாக்குதலுக்கு ஆட்பட்டு, அதன் பின்விளைவுகளால் 10 கோடியே 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடத்திற்கு 1 கோடியே 22 லட்சம் பேர் புதிதாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 14 கோடியே 30 லட்சம் பேர் பக்கவாதத்த...
காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

மருத்துவம்
ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை தனது முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை பிப்ரவரி 21ஆம் தேதி அன்று வெற்றிகரமாகச் செய்தது. நாற்பத்திரண்டு வயதான பெண், இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு/ சிறுநீர் பிரித்தல்) செய்து வந்தார். அவர், குடும்ப சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரது தாய் ஒரு சிறுநீரகத்தை வழங்கியிருந்தார். அவரது குடும்பத்தில், தானம் கொடுக்க வேறொருவர் இல்லாததால், அவர் மருத்துவமனையின் இறந்த நன்கொடையாளர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் இறந்தவரின் சிறுநீரகம் நன்கொடையாக வழங்கப்பட்டதன் காரணமாக, நோயாளிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் முத்துக்குமார்...
மா காவேரி கருத்தரிப்பு மையம் – குழந்தை வரம் வேண்டுவோருக்கான வரப்பிரசாதம்

மா காவேரி கருத்தரிப்பு மையம் – குழந்தை வரம் வேண்டுவோருக்கான வரப்பிரசாதம்

மருத்துவம்
சென்னையின் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், கருத்தரித்தல் மற்றும் கருவுறுதல் தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு, சிறந்த மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக “மா காவேரி கருத்தரிப்பு மையம்” தொடங்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த நிபுணர் மருத்துவக் குழுவுடன் அதிநவீன உபகரணங்கள் உட்பட உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், இந்த மேம்பட்ட கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன், புதிய அதிநவீன மையத்தை திறந்து வைத்து, ‘மா காவேரி கருத்தரிப்பு மையம், குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு சிறந்ததொரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது’ எனப் பாராட்டினார். கருத்தரிப்பு மையமானது முழு வசதியுடன் கூடிய கரு ஆய்வகம், அதிநவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் பரந்த அ...
“அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை” – மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்

“அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை” – மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்

மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோவாஸ்குலர் டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையைச் செய்து, நான்கு ஆண்டுகளாகப் பேசாத 85 வயது நோயாளியின் பேச்சை மீட்டெடுத்துள்ளனர். மேலும், முகத்திலுள்ள பாதிக்கப்பட்ட நரம்பினால் ஏற்படும் ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) எனும் பயங்கரமான வலியில் இருந்தும் நிவாரணம் அளித்துள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சை, வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பான விரைவான சிகிச்சை அளிக்கும், இன்ஸ்ட்யூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பெயினின் நுட்பமான அறுவைச் சிகிச்சை திறனிற்கும், மேம்படுத்தப்பட்ட உணர்வகற்றும் (Anaesthesia) திறனிற்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தனது முகத்தின் இடது பக்கத்தில் மின்னதிர்வைப் போன்றதொரு வலியா...
மிக்ஜாம் சூறாவளியில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

மிக்ஜாம் சூறாவளியில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

மருத்துவம்
சென்னை மாநகரத்துக்குப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது மிக்ஜாம் புயல். மாநகரம் எங்கும் வெள்ள நீர் சூழ்ந்திருக்க, அடிப்படை வசதிகளைப் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்க இயலாத நிலை இருந்து. தாழ்வான பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மடிப்பாக்கம் குபேரன் நகரில் வசித்து வரும் திருமதி கற்பகம் கண்ணன் என்ற பெண் தனது கர்ப்ப காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் அவரது வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து அவரைப் பத்திரமாக மீட்டனர். அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தெருக்களில் படகு மூலம் சவாரி செய்து, அவரைச் சரியான நேரத்தில் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். பிறகு 45 நிமிடங்கள் படகு சவாரி செய்து நேரத்தை வீணாக்காமல் அருகி...
காவேரி மருத்துவமனையின் அசத்தலான மூளை ஆப்ரேஷன்

காவேரி மருத்துவமனையின் அசத்தலான மூளை ஆப்ரேஷன்

இது புதிது, மருத்துவம்
எண்பத்தொரு வயதான திருமதி கே.எஸ். தனது மகளுடன் அமெரிக்காவின் பாஸ்டனில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில், அவருக்கு நடப்பதிலும், அறிவாற்றல் செயல்பாட்டிலும் சிரமம் ஏற்பட்டு, அது அதிகரித்தவண்ணமும் இருந்தது. இதனால் தள்ளாட்டம் ஏற்பட்டு அடிக்கடி கீழே விழும்படியான நிலை ஏற்பட்டது. இதுவும் அவள் வீழ்ச்சிக்கு ஆளாக நேரிட்டது. இரண்டு முழங்காலிலும் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ வரலாற்றினைத் தவிர்த்து, வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் அவரது வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது. அமெரிக்காவில் அவர் கலந்தாலோசித்த மருத்துவர்கள், மேற்கூறிய நடைத்தள்ளாட்டத்தோடு, திருமதி கே.எஸ். அவர்களின் வலது காதின் கேட்கும் திறன் குறைவையும், வலது கையைப் பயன்படுத்தும் போது உண்டான ஒருங்கிணைப்புக் குறைபாட்டையும் கவனித்தனர். மேலும் பரிசோதணையில், அவருக்கு மூளையில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தக் கட்...