Shadow

“அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை” – மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோவாஸ்குலர் டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையைச் செய்து, நான்கு ஆண்டுகளாகப் பேசாத 85 வயது நோயாளியின் பேச்சை மீட்டெடுத்துள்ளனர். மேலும், முகத்திலுள்ள பாதிக்கப்பட்ட நரம்பினால் ஏற்படும் ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) எனும் பயங்கரமான வலியில் இருந்தும் நிவாரணம் அளித்துள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சை, வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பான விரைவான சிகிச்சை அளிக்கும், இன்ஸ்ட்யூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பெயினின் நுட்பமான அறுவைச் சிகிச்சை திறனிற்கும், மேம்படுத்தப்பட்ட உணர்வகற்றும் (Anaesthesia) திறனிற்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தனது முகத்தின் இடது பக்கத்தில் மின்னதிர்வைப் போன்றதொரு வலியால் அவதிப்பட்டு வந்தார் 85 வயதான திரு. வீராசாமி. தொடர்ச்சியாக மின்னதிர்வைப் போன்ற வலி ஏற்பட்டதோடு அன்றி, வலியின் தீவிரமும் அதிகரித்ததால், வீராசாமி அவர்களால் பேசவோ, சாப்பிடவோ, பல் துலக்கவோ, தாடி மீசையை மழிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். தாள முடியாத அத்தகைய வலி, அவரை மனச்சோர்வடையச் செய்தது. அவர் பேசுவதையும், வெளியில் செல்வதையும், குடும்ப நண்பர்கள் கூட உரையாடுவதையும் அடியோடு நிறுத்திக் கொண்டார். மருந்துகளால் தீர்வு காணாத வீராசாமிக்கு, சில மருத்துவ நடைமுறைகளும் தற்காலிக நிவாரணத்தையே அளித்தன. இந்நிலையில், வீராசாமி அவர்களின் மருமகனுக்கு, மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதருக்கும் இடையே நடந்த உரையாடல் நம்பிக்கைக்கான ஒளியை ஏற்படுத்தும் வாய்ப்பினை நல்கியது.

ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் மூத்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரும், நரம்பியல் குழு வழிகாட்டியுமான மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதரிடம் திரு. வீராசாமி ஆலோசனை பெற்றார்.

“திரு. வீராசாமி விவரித்த அறிகுறிகளைக் கேட்டபோது, அவரது ட்ரைஜெமினல் நியூரால்ஜியாவுக்கு அறுவைச் சிகிச்சை தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஒரே பிரச்சினை, அவரது வயதைக் கருத்தில் கொண்டு, அவர் மருத்துவ ரீதியாக அறுவைச் சிகிச்சை செய்ய தகுதியுள்ளவரா என்பதுதான்”என்று மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர் கூறினார்.

ட்ரைஜெமினல் நியூரால்ஜியா என்பது நோயாளியின் முகத்தில் ஏற்படும் கடுமையான வலியை ஏற்படுத்தும் நரம்புசார் ஒழுங்கின்மையாகும் (disorder). இது, பொதுவாக முகத்தில் இருந்து மூளைக்கு உணர்வைக் கடத்தும் ட்ரைஜெமினல் நரம்பின் மிக அருகில் இருக்கும் இரத்த நாளத்தால் ஏற்படுகிறது. ட்ரைஜெமினல் நரம்பின் மீது, அதை ஒட்டிய இரத்த நாளம் ஏற்படுத்தப்படும் தொடர் துடிப்பின் காரணமாக, ட்ரைஜெமினல் நரம்பில் ஏற்படும் அழற்சியே வலியாக உணரப்படுகிறது. மருந்துகள் வேலை செய்யாதபட்சத்தில், MVD அறுவைச் சிகிச்சைதான் அதற்கான தீர்வாகும்.

இத்தகைய அறுவைச் சிகிச்சையில் பரந்த அனுபவமுள்ள மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர், “எம்விடி (MVD) அறுவைச் சிகிச்சை என்பது மூளையின் இயல்பான கட்டமைப்பு எதையும் தொந்தரவு செய்யாமல் செய்யப்படும் சிக்கல் குறைவான அறுவைச்சிகிச்சை ஆகும். அறுவைச்சிகிச்சை மூலமாக, அழுத்தத்தை ஏற்படுத்தும் இரத்த நாளத்தை, நரம்பில் இருந்து நகர்த்துகிறோம்” என்றார்.

அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட திரு. வீராசாமி, மயக்க மருந்தின் உணர்வகற்றும் நிலையில் இருந்து விழித்த பொழுது, முகத்தில் ஏற்பட்டிருந்த வலியில் இருந்து முற்றிலுமாக விடுபட்டிருந்தார். “எனக்கு மறுபிறப்பு கிடைத்துள்ளது. நான் சுதந்திரமாகப் பேச முடியும், நான் சாதாரணமாகச் சாப்பிட முடியும், மீண்டும் பல் துலக்க முடியும்!” என்றார் திரு. வீராசாமி. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் பேசுவதைக் கேட்க முடிந்தது என்று திரு. வீராசாமி அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடை இல்லை, குறிப்பாக நோயாளி கடுமையான வலியால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்! மயக்க மருந்து மற்றும் நவீன அறுவைச் சிகிச்சை தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு நோயாளி மருத்துவ ரீதியாக மயக்க மருந்துக்கு தகுதியானவராக இருந்தால்,

சிறப்பான முறையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் தொழில்நுட்பம், தொடர் கண்காணிப்புக்கான வசதி, மயக்க மருந்து அளிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போன்றவற்றால், நோயாளியின் உடல் மருத்துவ ரீதியாக உணர்வகற்றும் மருத்தை ஏற்றுக் கொள்ளும் தகுதியைப் பெற்றிருக்கும் பட்சத்தில், ட்ரைஜெமினல் நியூரால்ஜியாவிற்கு, எம்விடி அறுவைச் சிகிச்சைதான் நீண்டகால தீர்வை அளிக்கும் சிறந்த தீர்வாகும்.

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புணரமைப்பு, சிறுநீரகம், சிறுநீரகம் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவைச் சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகளின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.