Shadow

Tag: KJR Studios

அயலான் விமர்சனம்

அயலான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நெடுநாளாக புரொடெக்‌ஷனில் இருந்து, படம் வெளியாகுமா இல்லை கைவிடப்படுமா என்பதான சந்தேகங்கள் முதற்கொண்டு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து, அவைகளை வெற்றிகரமாக கடந்து இந்த பொங்கல் பண்டிகைக்கு வெள்ளித் திரையில் வெளியாகியிருக்கிறார் அயலான்.  ‘இன்று நேற்று நாளை’ என்கின்ற அறிவியல் புனைவு கதையை தன் முதற்படமாக செய்து பெரும் வெற்றி கண்ட இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படம். சிவகார்த்திகேயன் நடிப்பில்  பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்தப் படம் என்று படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். படம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்  பூர்த்தி செய்திருக்கிறதா…? என்று பார்ப்போம். ஏலியன்ஸ் வகை திரைப்படம் என்றாலே வழக்கமான, அதற்கென்றே அளவெடுத்து தைத்தார் போன்ற ரெடிமேட் திரைக்கதை ஒன்று உண்டு. அதுயென்னவென்றால் ஏலியன்கள் பூமியை தாக்கி அழிக்க வருவார்கள்....
டாக்டர் விமர்சனம்

டாக்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நோயாளிகளைக் காப்பாற்ற அறுவை சிகிச்சைக்காகக் கத்தியைப் பிடிக்கும் மருத்துவர், ஒரு கடத்தல் கும்பலை எதிர்கொள்ள நேருகிறது. தன்னை வேண்டாம் என்ற நிராகரித்த பெண்ணின் வீட்டில் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. அந்த வீட்டிற்கு சிவகார்த்திகேயன் உதவச் செல்கிறார். ஆனால் கடத்தப்பட்டிருப்பது ஒரு குழந்தை அல்ல பற்பல எனத் தெரிய வருகிறது. அவர்களை எல்லாம் சிவா எப்படி மீட்டார் என்பதுதான் படத்தின் கதை. ஸ்மார்ட்டான சிவகார்த்தியன், துளியும் அலட்டல் இல்லாத நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார். மறந்தும் கூட பன்ச் வசனம் வைக்கவில்லை. சிறப்பு. பிரியங்கா அருள்மோகன் அழகோ அழகு. அவரையும் சரியாகக் கதைக்குள் பொருத்தி இருப்பதால் அவர் கொஞ்சமே நடித்தாலும் நன்றாகவே இருக்கிறது. கிங்ஸ்லியும் யோகிபாபுவும், டாக்டர் படத்தின் திரைக்கதைக்கு அனுபவம் வாய்ந்த செவிலியர்களாக இருந்து படத்தைக் காப்பாற்றுகிறார்கள். வினய் நடிப்பும் சரி அவரது ...
டாக்டர் – 100% பொழுதுபோக்கு சினிமா

டாக்டர் – 100% பொழுதுபோக்கு சினிமா

சினிமா, திரைச் செய்தி
KJR ஸ்டுடியோஸ் மற்றும் SK ப்ரொடக்ஷன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில், ‘டாக்டர்’ படத்தின் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. டாக்டர் படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி J.ராஜேஷ், “டாக்டர் திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்தத் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழில் புதுமையான, இது போன்ற ஒரு ப்ளாக் காமெடி திரைப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது. டாக்டர் திரைப்படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால், அந்தக் காலகட்டத்தில் பல்வேறு OTT தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அப்போதும் டாக்டர் திரைப்படத்தைப் பெரி...
தமிழ்ப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அபய் தியோல்

தமிழ்ப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அபய் தியோல்

சினிமா, திரைத் துளி
சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க, பாலிவுட்டின் மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “எனது முதல் படமான இரும்புத் திரை அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. அதே போல் ஹீரோ படத்தின் வில்லனும், கடுமையான குணாதிசயங்கள் கொண்ட பொறுப்பானதொரு பாத்திரம். அவர் கணிக்க முடியாக் கட்டுப்பாடற்ற ஒருவர். அவரது முழுமையான எதிர்வினை குறைந்தபட்ச புன்னகையாகத்தான் இருக்கும். ஆனால் அதற்குக் கீழே அதிக பயங்கரவாதம் உள்ளது. யார் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்துவார்கள் என நான் என் கற்பனையில் என் எண்ண ஓட்டத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அபய் தியோல் தான் மிகவும் பரிபூரணமாக இருந்தார். அவர் இந்தக் கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. சிவகா...
ஐரா விமர்சனம்

ஐரா விமர்சனம்

மற்றவை
'ஐரா' என்றால் யானையின் குறியீடு என்கிறார் இயக்குநர் சர்ஜுன். 'என்னது ஐரான்னா யானையா?' என வாய் பிளந்தால் ஐராவதம் என்கிறார். இதென்ன இந்திரனின் வெள்ளையான வாகனத்துக்கு வந்த சோதனை எனக் குழம்பி, யானையின் ஞாபகச்சக்திக்கும், பழிவாங்கும் குணத்திற்குமான குறியீடாகத் தலைப்பை உருவகப்படுத்திக்க வேண்டியுள்ளது. விபத்தில் இறந்துவிடும் கருப்பு நயன்தாராவான பவானியின் பழிவாங்கும் படலம் தான் ஐரா படத்தின் ஒரு வரிக் கதை. பட்டாம்பூச்சி எனப் படத்திற்குப் பெயர் வைத்திருந்தால் மிகப் பொருத்தமானதாய் இருந்திருக்கும். படத்தின் தொடக்கம் முதலே பட்டாம்பூச்சி முக்கிய பாத்திரமாக சோலோவாகவும், கும்பலாகவும் வருகின்றன. படத்தின் ஆதாரக் கருவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கச் சிரமப்படுகிறார் கதை, திரைக்கதை எழுதியுள்ள பிரியங்கா ரவீந்திரன். ஆதலால், நயன்தாரா முதன்முதலில் இரு வேடங்களில் நடித்திருந்தும் மனதில் பதியவில்லை. ஓர் அழுத்தம...