Shadow

Tag: Losliya

பிக் பாஸ் 3: நாள் 57 | சேரன் லாஸ் கவின் – மீண்டுமொரு முக்கோண பிரச்சனை

பிக் பாஸ் 3: நாள் 57 | சேரன் லாஸ் கவின் – மீண்டுமொரு முக்கோண பிரச்சனை

பிக் பாஸ்
நேற்றிரவு கவின் லாஸ் பேசினதை மறுபடியும் போட்டுக் காண்பித்தது, எங்களை வெறியேற்ற தானே பிக்பாஸ்? அதுல இருந்து தான் ஆரம்பித்தது. ஊர்வசி ஊர்வசி பாடலுடன் தொடங்கியது நாள். ஷெரின் நன்றாக நடனமாடினார். கேப்டன் ஆன குதூகலமாக இருக்கும் போல. காலை உணவைத் தட்டில் வைத்துவிட்டு, லாஸ் வரவேண்டுமென காத்துக் கொண்டிருந்தார் சேரன். வெளியே கவின், சாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம், 'அவர் வெயிட் பண்றாரு போய்ச் சாப்பிடு' எனச் சொல்லியும் போகவில்லை லாஸ். கடைசியில் லாஸ் வந்ததுக்குப் பின் தான் சாப்பிட்டார். கவினும் லாஸும் பேசிக் கொள்வதைப் பார்த்து, இது நட்பு மட்டும் தானென யாராலாவது சொல்ல முடியுமா? சாக்‌ஷி சொன்னது போல் Los is blushing. அதாவது பழைய படத்தில் வர மாதிரி கன்னம் சிவந்து, கண்கள் படபடவென அடித்துக் கொண்டு பேசுவாங்களே, அந்த மாதிரி காட்சி எல்லாம் வந்து போகிறது. உங்களுக்கும் இஷ்க் இஷ்க்னு என்று தான் கேட்...
பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்

பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்

பிக் பாஸ்
‘மானாமதுரை மாமரக் கிளையிலே’ பாடலுடன் தொடங்கியது. ஆரம்பெல்லாம் நன்றாகத்தான் இருக்கு, ஆனால் ஃபினிஷிங் சரியில்லியேப்பா உங்களிடம். ‘நேத்து சொல்லாம தூங்க போய்ட்டீங்களே!’ என சேரனிடம் கேட்டாங்க லாஸ். “என் பொண்ணு எங்கிட்ட பேசாம இருக்கும் போது நான் சொல்லாம போனதுல தப்பில்லையே! நீ பேசறதுக்கு வரவும் மாட்டேங்கற. டைமும் கொடுக்க மாட்டேங்கற. பேசலாம், நிறைய பேசலாம்” எனச் சொல்லிவிட்டுப் போனார் சேரன். இதை அப்படியே பாய்ஸ் டீமிடம் சொன்னார் லாஸ். “உங்க அப்பா, ச்சேச்சே சேரன் சார் எனக்கும் குட்மார்னிங் சார்னு சொன்னாரு” என கவினும் சொன்னார். “சோ, அப்பான்னு கூப்பிட்டதுக்கே லாஸ் இப்ப வருத்தப்படறாங்க போல!” என அந்தப் பக்கம் வனிதாவிடம் ரிப்போர்ட் செய்தார் சேரன். “உங்கிட்ட கொஞ்சம் பேசணும் தம்பி” என தர்ஷனிடம் சொல்லும் சேரன், கொஞ்ச நேரத்தில் பேசவும் செய்தார். கொஞ்ச நேரம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது பார்...
பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

பிக் பாஸ்
'வண்டியிலே நெல்லு வரும்' பாட்டோட ஆரம்பித்தது நாள். இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்தவர்கள், செய்யாதவர்களைச் சொல்லும்படி பிக் பாஸ் அறிவித்தார். பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்க்கு தர்ஷன் பேரும், மீரா பேரும் வந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவர்களே செலக்ட் ஆனார்கள். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமர் பிரிவுக்கு முகினும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடுத்த வேலையைச் சுவாரசியமாகச் செய்யாதவர்கள் பெயர் தேர்வு வரும்போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. அபிராமியும், லோஸ்லியாவும் இரண்டு நாட்களாக அனைவரையும் தங்கள் பெயரைச் சொல்வதற்கு கேன்வாஸ் செய்திருக்கிறார்கள். லியா கவினிடம் கேட்ட போது கண்டிப்பாக முடியாது எனச் சொல்லிவிட்டார். லியா, அபி இரண்டு பேரும் அவங்க என்னென்ன தப்பு செய்தார்கள் என லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டாலும், கவின் அதை ஒத்துக் கொள்ளவ...
பிக் பாஸ் 3 – நாள் 24

பிக் பாஸ் 3 – நாள் 24

பிக் பாஸ்
'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்' என்ற பழைய பாட்டோடு ஆரம்பித்தது நாள். 'இதுக்கு என்னத்த ஆடறது?' என நினைத்த பாதி பேர் வேடிக்கை பார்க்க, சாண்டியும் சாக்‌ஷியும் மட்டும் கடைசி வரை ஆடினர். நேற்றைய பஞ்சாயத்துக்களின் மிச்சங்கள் இன்னிக்கும் பேசப்பட்டது. 'கவின்-மீரா பிரச்சினையில என் ஃபுல் சப்போர்ட்டும் உனக்கு தான் பேபி' என சாக்‌ஷிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார் மோகன். இந்த ரேஷ்மா நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என்றுதான் தெரியவில்லை. அந்தப் பக்கம், இந்தப் பக்கம் போய்விட்டு வரும்போதெல்லாம், காற்று வாக்கில் காதில் விழும் மேட்டரையெல்லாம் கேட்டு விட்டு, அதைப் பக்காவாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லி விடுகிறார். ஒரே ஒரு நல்ல விஷயம், ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டிச் சொல்லாமல், நடந்ததை அப்படியே சொல்வதுதான். அப்படிச் சொல்லிவிட்டு, அதற்கு என்ன செய்யலாம் என்கிற தீர்வும் கொடுக்கறார். பல சமயங...