Shadow

Tag: M. ஜெகன் கவிராஜ்

கெணத்த காணோம் விமர்சனம்

கெணத்த காணோம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில் அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர் தண்ணீர்’ நாவல் தாகத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய தண்ணிகரற்ற ஒரு படைப்பாகும். மேலும் தண்ணீர் தண்ணீர் என்ற பழைய திரைப்படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக தாகத்தை முன் வைத்த படைப்புகள் என்றாலே ஓர் உணர்ச்சிகரமான பிணைப்பு ஏற்படும். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா தண்ணீருக்கான தாகத்தை மையப்படுத்தியே இந்தத் திரைக்கதையை எழுதியுள்ளார். மூலக்கதை நடிகர் ஆறுபாலா கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிறு கிராமம் ஒன்றில் கோவில் பூசாரியாக இருக்கிறார் யோகிபாபு. அவர் தன் காதலியைக் கரம்பிடிக்க வேண்டும் என்ற தாகத்தில் தவிக்க, ஒருபுறம் ஊரே தண்ணீர் வேண்டித் தவிக்கிறது. இச்சூழலில் யோகிபாபுவின் வீட்டின் முன் கிணறு தோன்றினால் தண்ணீர் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நிலை வருகிறது. யோகிபாபுவும் ஊருக்காகச் சம்மத...
ராதிகா: லேடி கமல்ஹாசன் | தாய் கிழவி

ராதிகா: லேடி கமல்ஹாசன் | தாய் கிழவி

சினிமா, திரைச் செய்தி
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார், “’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்துக் கட்டிக்காப்பவரைதான் அப்படிக் கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறா...
ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review

ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இன்றைக்கு இணையத்தில் எது ட்ரெண்டிங்காக இருக்கிறதோ, அதுதான் நாட்டின் பேசுபொருள் என்பதால் படத்தின் தலைப்பையே ட்ரெண்டிங் என வைத்துவிட்டார்கள். கலையரசனும் ப்ரியாலயாவும் கணவன் மனைவி ஆவர். படத்தில் முதல் ஷாட்டிலே இருவரும் யூட்யூபில் தங்களின் ரீல்ஸைப் பதிவேற்றுகிறார்கள். அவர்களது ரீல்ஸின் வியூவ்ஸ் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் இந்தத் தம்பதியின் வருமானமும் உயர்கிறது. இச்சூழலில் இவர்களின் யூட்யூப் சேனல் முடக்கப்படுகிறது. அடுத்து என்ன செய்வது என அவர்கள் யோசிக்கும் போது ஒரு ப்ரைவேட் ஃபோன்கால் ஒன்று இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது. அந்த விளையாட்டு ஏற்படுத்தும் வினைகளும் விடைகளும் தான் படம். அளவாக நடித்தாலே போதும் என்ற ரேஞ்சிலே படத்தில் வருகிறார் நாயகன் கலையரசன். ப்ரியாலயா இப்படத்தில் பெரிய சர்ப்ரைஸ் செய்துள்ளார். அழகு, நடிப்பு இரண்டிலுமே ஸ்கோர் செய்துள்ளார். குறிப்பாக எமோஷ்னல் காட்சிகளில் மிக...
முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம்

முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நிலம் சார்ந்த போராட்டத்தை மையப்படுத்திய படமாக முஃபாசா அமைந்துள்ளது. பெரு வெள்ளத்தில் தன் தாய் தந்தையரைப் பிரிந்த, முஃபாசா என்ற குட்டிச் சிங்கம், இன்னொரு நிலம் வந்தடைகிறது. ஆறு, மலை கடந்து தான் வாழ ஒரு நிலமும், அங்கு தன் இனமும் இருப்பதாக முஃபாசாவிற்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. நிலம் மாறி வந்த முஃபாசாவிற்கு டேக்கா எனும் குட்டிச் சிங்கம் தன் தாய் தந்தையிடம் பேசி, தங்கள் நிலத்தில் தங்குவதற்கு அனுமதி வாங்குகிறது. இரு சிங்கங்களும் நண்பர்களாக வளர்கின்றனர். இவர்கள் வாழும் நிலத்தை அபகரிக்க வெண்சிங்கப்படை ஒன்று வருகிறது. அந்தப் படையை எதிர்கொள்ள இயலாமல் டேக்கா, முஃபாசா இருவரும் வெளியேறுகிறார்கள். வெளியேறும் போது நடக்கும் சண்டை ஒன்றில், வெண்சிங்கப் படையின் இளவரச சிங்கத்தை, முஃபாசா கொன்றுவிடுகிறது. இதனால் வெண்சிங்க ராஜா முஃபாசாவை பலி வாங்கத் துரத்துகிறது. துரத்தலை ஒரு கட்டத்தில் நேர்கொள்ளும் முஃபாசா எ...
Once Upon A Time In Madras விமர்சனம்

Once Upon A Time In Madras விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தன் வீட்டு மரத்து மாங்காயை அடித்துத் தின்ற சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். அந்தத் துப்பாக்கி, யார் யார் கைகளில் கிடைக்கிறது, அவர்கள் வாழ்வில் என்ன நேருகிறது என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. நான்கு கதைகளை இணைக்கும் hyperlink ஆகப் படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. மகளாகப் பருவ மாற்றம் அடையும் மகனைப் பெற்ற தாயிடமும், அரசியல் கொலை புரியும் கொலைக்காரன்க்கு உடந்தையாக இருக்கும் ஓட்டுநரிடமும், டொமஸ்டிக் வயலன்ஸிற்கு உள்ளாகும் புது மருமகளிடமும், சாதிவெறி பிடித்த பத்திரிகையாளரிடமும் துப்பாக்கி கிடைக்கிறது. படத்தின் முதற்பாதி, கோர்வையற்ற காட்சிகளாக நகர்ந்து இடைவேளையில் ஆவலைத் தூண்டும் விதமாக முடிகிறது. இரண்டாம் பாதியின் முடிவில் எல்லாக் கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் இணைந்து திருப்திக்கரமாகப் படம் முடிகிறது....
ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நான்-ஸ்டாப் நான்சென்ஸ் என படத்தைப் பற்றிப் படக்குழு விளம்பரப்படுத்தியுள்ளனர். ‘லாஜிக் பார்க்க்காதீங்க. மூளையைக் கழட்டி வைத்துவிட்டு, ஜாலியா படம் பார்த்துச் சிரிச்சுட்டுப் போங்க. உங்களைச் சிரிக்க வைக்கிறதே மட்டுமே எங்கள் நோக்கம்!’ என படம் தொடங்கும் முன்பே இயக்குநரின் வாய்ஸ்-ஓவர் ஒரு வேண்டுகோளை விடுக்கிறது. வெள்ளைக்காரன் பிரியாணி எனும் உணவகத்தை நடத்தி வருகின்றார் தங்கசாமி. தொழில் நொடிந்து போக, அவரது பேத்தி பவானி, கடன் வாங்கி ஒரு பிரியாணி கடையைத் தாத்தாவிற்கு வைத்துக் கொடுக்கின்றார். அரசியல்வாதியான அடைக்கலராஜ் சமஉ, தங்கசாமிக்கு ஒரு பெரிய ஆர்டரைக் கொடுத்துவிட்டு, பணம் தராமல் ஏமாற்றிவிடுகிறார். அடைக்கலராஜ் மீது வழக்கு போட பூங்குன்றன் எனும் வக்கீலைப் பார்க்கப் போகின்றனர். பூங்குன்றன் இறந்து கிடக்க, தங்கள் மீது கொலைப்பழி விழுமோ என பயந்து, பூங்குன்றன் பிணத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நினைக்கின்...