Shadow

Tag: M.S.Baskar

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வெப்பமும் குளிரும் இணைந்தால் மழை பொழிவது போல், ஆணின் வெப்பமான விந்தணுவும், பெண்ணின் குளிர்வான கருமுட்டையும் இணைவதால் குழந்தை பிறக்கிறது என்பதை உணர்த்தும் குறியீட்டுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். கல்யாணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏச்சுபேச்சுக்கும் ஆளாகின்றனர் நாயகனும் நாயகியும். நாயகனுக்குத் கோயில் திருவிழாவில் கிடைக்கும் முதல் மரியாதை பற்றிய ஊர் பஞ்சாயத்தில், குழந்தையில்லாததால் அவமானப்படுத்துகிறார். நாயகனின் வேதனையைப் பொறுக்கமாட்டாமல், நாயகி கணவனை விட்டு விலகி, நாயகனை இரண்டாம் கல்யாணத்திற்கு வற்புறுத்துகிறாள். அதில் நாயகன் ஆர்வம் நாயகன் காட்டாததால், நாயகி வேறொரு முடிவு எடுக்கிறாள். அம்முடிவு, அத்தம்பதியின் வாழ்வை எப்படிப் பாதித்தது என்பதே படத்தின் கதை. கிராமத்து வாழ்வியலை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. நா...
வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடவுள் மீது மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கைகளை வைத்து கல்லா கட்டிக் கொண்டிருக்கும் நாயகன், அவன் கல்லாவில் தனக்கும் பங்கு வேண்டும் என்று போட்டிக்கு வரும் அந்த ஊர் தாசில்தார், இவர்கள் இருவருக்கும் இடையில் பகை வளர, இறுதியில் இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கோயிலின் நிலை என்ன ஆனது, மக்களின் நம்பிக்கை என்ன ஆனது என்பதே “வடக்குப்பட்டி ராமசாமியின் கதை. கதை 1960 காலகட்டங்களில் நடக்கிறது. ஊரின் கண்ணாத்தா என்னும் காவல் தெய்வத்திற்கு ஒரு பின்கதை வைத்து, அதை மக்கள் தெய்வமாக நம்புவதற்கு சில நிகழ்வுகளை நேரிடை சாட்சியாக நிகழ்த்திக் காட்டி, அதே நிகழ்வுகளின் மூலம் நாயகனான வடக்குப்பட்டி ராமசாமி, அந்த நம்பிக்கைகளைக் கொண்டு பணம் சம்பாதிக்க முடிவெடுத்து எதிர்திசையில் நகரும் கதாபாத்திர முரண்களை ஆரம்பத்திலேயே அருமையாக கட்டமைக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. மக்களின் மூடநம்பிக்கைகளையும், நேர்த்திக்கடன் ...
மதிமாறன் விமர்சனம்

மதிமாறன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அப்பார்ட்மென்ட்களில் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப்படும் பெண்கள், உருவம் குள்ளமாக இருந்தாலும் தன் பாசமான தாய் தந்தையரோடும், தனக்கு உறுதுணையாக இருக்கும் தன் அக்காள் மதியுடனும் சந்தோஷமாக வாழ்ந்தபடி தன் அப்பாவைப் போல் வருங்காலத்தில் ஒரு போஸ்ட்மேனாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வரும் நெடுமாறன். இந்த இரு வேறு புள்ளிகளும் சந்திக்கும் இடம் தான் “மதிமாறன்” திரைப்படத்தின் கதை. நெடுமாறனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார். இவர் தான் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “அயலான்” படத்தில் அயலான் வேடத்தில் நடித்து இருக்கிறார். மதிமாறன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன். தன்மான உணர்வு, சமூகத்தின் மீதான வெறுப்பு, அக்காள் மதி மீதான அன்பு, தந்தையின் மீதான மரியாதையும் அவர் தொழில் மீதான பிடித்தமும்,  சக தோழியுடனான காதலும் நட்பும் என...
பார்க்கிங் விமர்சனம்

பார்க்கிங் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மனிதனின் அடிப்படை குணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று காமம், மற்றொன்று கோபம். இந்த இரண்டு உணர்ச்சிகள் மட்டும் தான் அடிப்படையான உணர்ச்சிகள். மற்ற உணர்ச்சிகளான காதல், அன்பு, பாசம், நேசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரக்கம் காட்டுதல் இப்படி எல்லா உணர்வுகளும் நம் கற்பிதங்களால் மனிதனுக்குள் வளர்க்கப்பட்ட விடயங்களே.  இது போன்ற உணர்வுகளை நாம் தலைமுறை தலைமுறையாக கற்பித்துக் கற்பித்து, இன்று மனித இனம் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு உயர் நிலைக்குச் செல்வதே மனிதனுக்கும் மனிதகுலத்திற்கும் பெருமை. ஆனால் ஒரு சூழலில் அதுவும் குறிப்பாக ஈகோ நம் மனதிற்குள் நுழையும் போது, மற்ற எல்லா உணர்வுகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு நம் மனதிற்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான கோபத்திற்கு மட்டும் நாம் தீனி போடத் துவங்கினால் நாம் முற்றிலும் மனிதத்தை இழந்து மிருகமாக மாறிவிடுவோம...