Shadow

Tag: Marvel Studios

Deadpool & Wolverine | ரூ. 3650 கோடி வசூல் சாதனை

Deadpool & Wolverine | ரூ. 3650 கோடி வசூல் சாதனை

அயல் சினிமா, இது புதிது, திரைத் துளி
உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் டெட்பூல் & வுல்வெரின் படத்தைத் திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்தப் படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது. இந்தியாவில் 'டெட்பூல் 1' (40.79 கோடி GBOC) மற்றும் 'டெட்பூல் 2' (69.94 கோடி GBOC) ஆகிய இரண்டின் வாழ்நாள் வசூலை, 'டெட்பூல் & வுல்வெரின்' திரைப்படத்தின் முதல் வார இறுதி வசூல் முறியடித்துள்ளது. அதாவது, ரூ. 83.28 கோடி வசூலித்துள்ளது. இது வரவிருக்கும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்பார்க்கலாம். சிறந்த கேமியோஸ், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் பல கமர்ஷியல் பொழுதுபோக்கு விஷயங்களுடன் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது. மார்வெல் ஸ்டுடியோவின் '...
Deadpool & Wolverine விமர்சனம்

Deadpool & Wolverine விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வானத்தின் கீழ் இருக்கும் எதுவுமே புனிதமில்லை என சகலத்தையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கும் டெட் பூல், இம்முறை பன்னண்டத்தில் (Multi-verse) இருக்கும் அத்தனையையுமே கேலிக்கும் கேள்விக்கும் கிண்டலுக்கும் உரியவை தான் என டாப் கியரில் கலாய்த்துள்ளார். முத்தாய்ப்பாக டெட்பூல் படத்தின் முன்னாள் உரிமையாளரான '21st Century Fox'-ஐ சகட்டுமேனிக்குக் கலாய்த்துத் தள்ளுகிறார் டெட்பூல். ஆங்கில வசனங்களின் சாறு குறையாதவண்ணம் தமிழ் டப்பிங்கையும் மிகக் கலகலப்பாக எழுதியுள்ளனர். சூப்பர் ஹீரோ நகைச்சுவைப் படம் என்றாலும் A சான்றிதழ் பெற்ற படமென்பதை நினைவில் கொள்க. படத்தை வால்ட் டிஸ்னி கையகப்படுத்தி இருந்தாலும், டெட்பூலின் வாய்க்குப் பூட்டு போடாமல் அப்படியே அனுமதித்துள்ளது சிறப்பு. ஒரு சூப்பர் ஹீரோவுக்கு எப்படி மரியாதையுடன் 'குட் பை' சொல்லி வழியனுப்பி வைப்பதென்பதற்கான செவ்வியல் எடுத்துக்காட்டாக லோகன் திரைப்படம் வ...
தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடவுள்களைக் கொல்லும் கோர், நிழல் உருவங்களை ஏவி புது ஆஸ்கார்டின் குழந்தைகளைக் கடத்தி விடுகிறான். நிழல் உலகில் சிறைப்பட்டிருக்கும் குழந்தைகளை தோர் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்க்குப் பிறகு, மார்வெலின் படங்களில் அவர்களது மேஜிக் மிஸ்ஸாகிறது. மாயாஜாலங்களை மட்டுமே நம்பிக் களங்கமிறங்குவதை மார்வெல் என்டர்டெயின்மென்ட் தவிர்க்கவேண்டும். டிசி என்டர்டெயின்மென்டில் இருந்து கிறிஸ்டியன் பேலை மார்வெல் என்டர்டெயின்மென்டின் வில்லனாக வருகிறார். தானோஸ் போலொரு வில்லனுக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் புது வில்லன்கள் யாரும் அச்சுறுத்தவோ, ஈர்க்கவோ இல்லை. கிறிஸ்டியன் பேல் போலொரு நடிகரை வில்லனாக ரசிக்கத்தக்கும் வகையில் பயன்படுத்தாதது படத்தின் குறை. ‘தோர்: ரக்னோரக்’ படத்தை இயக்கிய டைக்கா வாட்டிட்டி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முயற்சி செய்திருந...
Doctor Strange in the Multiverse of Madness விமர்சனம்

Doctor Strange in the Multiverse of Madness விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மார்வெல் படங்கள் வெளியாகும் நாட்கள் உலகெங்கும் திருவிழா கோலம் பூண ஆரம்பித்துவிட்டது. ஒரே படத்திலேயே, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மக்கள் மனதைக் கவர்ந்துவிட்டார். பெனிடிக்ட் கம்பர்பேட்சின் நடிப்பும் அதற்கொரு பிரதானமான காரணம். பல்லண்டத்திற்கிடையே பயணிக்கும் திறனுள்ள அமெரிக்கா சாவேஸ் எனும் இளம்பெண்ணை, ஒரு ஆக்டோபஸ் மிருகம் துரத்தி வருகிறது. வேற பிரபஞ்சத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அப்பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்துவிடுகிறார். அமெரிக்கா எனும் அந்தப் பெண், நாம் வாழும் பிரபஞ்சத்திற்கான (Earth 616) பாதையைத் திறந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். இந்தப் பிரபஞ்சத்தின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அம்மிருகத்தைக் கொன்று அமெரிக்கா சாவேஸைக் காப்பாற்றுகிறார். மந்திரங்களில் பரீச்சயமான வாண்டா மேக்ஸிமாஃப் –இடம் உதவி கோருகிறார் டாக்டர். ஆனால், ஆக்டோபஸ் மிருகத்தை அனுப்பியதே ஸ்கார்லட் விட்ச் ஆக மாறிவிடும் வாண்...
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
காலமும் மரணமும் மனித இனத்தின் மீதான அவமானம் எனக் கருதுகிறான் கெசிலீயஸ். அந்த அவமானத்தைக் களைய வேறொரு பரிமாணத்தில் இருக்கும் டொர்மாமுவைப் பூமிக்கு அழைக்கிறான். அண்டத்தைக் கைப்பற்றும் இச்சையுடைய டொர்மாமுவிடமிருந்து பூமியை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்பவர் ஓர் அமெரிக்க நியூரோ சர்ஜன். மேற்கின் மேட்டிமையில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு திமிர் பிடித்த திறமைசாலி விஞ்ஞானி இவர். விதிகளை மீறுவது பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல், காரியத்தை முடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட லட்சியவாதியும் கூட! அவருக்கு மிக மோசமான ஒரு விபத்து நிகழ்கிறது. கை விரல்கள், பலத்த சேதத்திற்கு உள்ளாகி எந்தப் பொருளையும் நடுக்கமின்றிப் பிடிக்கும் பலமற்றுப் போய் விடுகிறது. நவீன மருத்துவம் கைவிட்ட நிலையில், கமார்-தாஜ் எனும் இடத்தைத் தேடி காத்மாண்டுக்குப் பயணிக்கிறார். ...