Shadow

Tag: Nivin Pauly

படவெட்டு விமர்சனம்

படவெட்டு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படவெட்டு (Battle) என்ற மலையாளச் சொல்லிற்குப் போராட்டம் எனப் பொருள் கொள்ளலாம். மலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மழை, காட்டுப்பன்றியுடன் போராடுகிறார்கள். அக்கிராமத்தைச் சேர்ந்த ரவி தனக்குள்ளேயே மிகப்பெரும் அகப்போராட்டத்தை நடத்துபவனாக இருக்கிறான். மேலும், தன்னுடனான அகப்போராட்ட்த்தில் இருந்து மீண்டு, அக்கிராமத்து நிலங்களை இலவசங்களால் ஆக்கிரமிக்க நினைக்கும் குய்யாலி எனும் அரசியல்வாதியின் அதிகாரத்தை எதிர்ப்பதோடு படம் முடிகிறது. மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனான ரவி, ‘மலூர் எக்ஸ்பிரஸ்’ எனப் புகழப்படுகிறான். ஒரு விபத்தில் அவன் கால் முறிந்து போக, அதோடு தன் வாழ்க்கையை முடிந்து விட்டதாக மனதிற்குள் புழுங்கிப் புழுங்கித் தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிறான். அவன் சிரிப்பதையே மறந்துவிட்டிருப்பதால், அவன் முகம் உறைந்து போனதுபோல் எப்பொழுதும் இறுகியே உள்ளது. அவனது முன்னாள் காதலியுடனான பார்வைப் பரிமாற்றங்க...
மஹாவீர்யர் விமர்சனம்

மஹாவீர்யர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஃபேண்டசி கோர்ட் ரூம் டிராமாவைத் தயாரித்துள்ளார் நிவின் பாலி. எம். முகுந்தனின் கதையைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அப்ரீட் ஷைன். அனுமார் சிலையைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட அபூர்ணாநந்தா எனும் சாமியார் தனக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இது படத்தின் முதற்பாதி. விக்கல் நிற்காத ஸ்ரீ ருத்ர மகாவீர அக்ரசேனா மஹாராஜா, அவரது தளபதி வீரபத்திரன், தளபதியால் கடத்தப்பட்ட தேவயானி ஆகியோரது வழக்கு தற்கால நீதிமன்றத்தில் நடக்கிறது. இது படத்தின் இரண்டாம் பாதி. வழக்கம் போல், மலையாள சினிமாவில் இருந்து மற்றுமோர் அற்புதமான பரீட்சார்த்த முயற்சி. பப்ளிக் ப்ராக்சிக்யூட்டராக லாலு அலெக்ஸும், நீதிபதி விரேந்திர குமாராக சித்திக்கும் நடித்துள்ளனர். கோர்ட் ரூம் டிராமா என்பதால்,படம் முழுவதும் பேசிக் கொண்டே இருக்கின்றனர் கதாபாத்திரங்கள். அதை அவர்களது அனுபவம் மிகுந்த நடிப்பாலும், முக பாவனைகளாலும் சுவாரசியப்படுத்...
காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கேரளத்து நாடோடிப் பாடல்களின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் 19 ஆம் நூற்றாண்டு காயங்குளம் கொச்சுண்ணி. கள்வரென்றாலும், சுரண்டல்காரர்களான பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுக்கும் நல்லவர். காலங்கள் கடந்தும், செவி வழியாக மக்களின் மனங்களில் நுழைந்து, இன்றளவும் தன் நாயக பிம்பத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சகாப்தம் அவர். தன் தந்தையைப் போல் திருடனாகி விடக்கூடாதென ஒரு மளிகைக் கடையில் பணி புரிகிறார் கொச்சுண்ணி. மனதில் பேராசையும் வஞ்சகமும் நிறைந்த பிராமணர்கள், ஒரு பொய் குற்றச்சாட்டினைக் கொச்சுண்ணி மீது சுமத்தி, நையப்புடைத்து, மரத்தில் தலைகீழாகத் தொங்க விடுகின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கும் கொள்ளைக்காரரான 'இத்திக்கர பக்கி', கொச்சுண்ணியை மீட்டு, பார் போற்றும் கொள்ளைக்காரர் காயங்குளம் கொச்சுண்ணியாக உருவாக்குகிறார். அதன் பின், அவர் சந்திக்கும் தொடர் துரோகங்களைக் கடந்து, காயங்...
மலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி

மலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி

சினிமா, திரைத் துளி
மதன் கார்க்கி பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான 'நடிகையர் திலகம்' படத்துக்கும் வசனம் எழுதி, வசனகர்த்தாவாகவும் தன் முத்திரையை ஆழப் பதித்துள்ளார். இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு 'நுழைவாயில்' ஆகியுள்ளார் என்றே சொல்லவேண்டும். தற்போது, நிவின் பாலியின் பிரம்மாண்டமான மலையாளத் திரைப்படமான 'காயம்குளம் கொச்சூன்னி' படத்திற்கு வசனம் எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்தப் படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளது. படத்தைச் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, "இந்தப் படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும் மையக்கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே தனித்துவமாக இதைக் கையாள முடிவு செய்தோம். இது மிகவ...
ஹே ஜூட் விமர்சனம்

ஹே ஜூட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நிவின் பாலிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். த்ரிஷாவின் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஹே ஜூட்' என்பது 1968இல் வெளிவந்த 'தி பீட்டில்ஸ்' குழுவின் மிகப் பிரபலமான பாடல். த்ரிஷாவின் கேஃபே மற்றும் இசைக்குழுவின் (Music band) பெயரை 'தி பீட்டில்ஸ் கேஃபே' என வைத்துத் தலைப்பிற்கு ட்ரிப்யூட்டும் செய்துள்ளனர். ஜூடிற்கு மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் பிறந்தது முதலே சிக்கல் உள்ளது. கோபம், மகிழ்ச்சி என மனம் சார்ந்த உணர்வுகளை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. ஆனால், கணிதமோ உள்ளங்கை நெல்லிக்கனி போல் ஜூட்க்குப் புரிகிறது. கிட்டத்தட்ட கணித மேதை ராமானுஜம் அளவுக்கு. 28 வயதாகும் ஜூட் கொச்சியில் இருந்து கோவாவிற்குத் தன் பெற்றோர்களுடன் செல்கிறான். நண்பர்களற்ற ஜூட்க்கு, கோவாவில் பக்கத்து வீட்டுக்காரர்களான செபாஸ்டியனும் அவரது மகள் க்ரிஸ்டலும் நண்பர்களாகின்றனர். இருமன ஒழுங்கின்மையால் (Bi-p...