Shadow

Tag: Sony LIV

ஆலப்புழா ஜிம்கானா – Sony LIV இல் ஜூன் 13 முதல்

ஆலப்புழா ஜிம்கானா – Sony LIV இல் ஜூன் 13 முதல்

OTT, சினிமா, திரைத் துளி
திரையரங்குகளில் ரசிகர்களின் மனங்களை வென்ற பிறகு, விளையாட்டு, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்து உருவாக்கப்பட்ட “ஆலப்புழா ஜிம்‌கானா” திரைப்படம், இப்போது OTT தளத்தில் களமிறங்குகிறது. ஜூன் 13 முதல் Sony LIV-இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்தக் கதை, ஜோஜோ ஜான்சன் (நஸ்லென்) எனும் சோம்பேறித் தனமான கல்லூரி மாணவனைப் பற்றியது. அவன் கல்லூரியில் பொய்யாகக் குத்துச்சண்டை ஒதுக்கீட்டின் மூலம் சேருகிறான். ஆனால் அவனும், அவனைப் போலவே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களும், கடினமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயிற்சி அளிக்கும் கோச் ஆண்டனி ஜோஷுவாவைச் (லூக்‌மேன் அவரன்) சந்திக்கிறார்கள். அவர் கடின உழைப்பும், வியர்வையும், உண்மையான சண்டையையும் வலியுறுத்துபவர். ஆரம்பத்தில் ஒரு குறுக்கு வழியாக இருந்தது, விரைவில் வியர்வை, சுயவிழிப்பு மற்றும் உயிருள்ள நட்புறவின் ஒரு போராளியின் பயணமாக மாறுகிறது. தன் பாத்திரத்தைப் பற்றி...
கூழாங்கல் விமர்சனம்

கூழாங்கல் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வறண்ட நிலப்பகுதியில் பயணிப்பவர்கள், தண்ணீர் தாகத்தைத் தணிக்க கூழாங்கல்லை வாயில் வைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு நிலப்பகுதியை வேலுவும், அவனது தந்தை கணபதியும் நடந்தே கடக்கின்றனர். பிறந்த வீட்டுக்குப் போன மனைவியை அழைத்து வர, கடன் வாங்கிப் பேருந்தில் செல்லுகிறான் குடிகாரனான கணபதி. மீண்டும் திரும்புகையில், நல்ல உக்கிரமான வெயிலில் தந்தையை நடக்க வைக்கிறான் வேலு. நடப்பது வேலுவிற்கும், கடன் வாங்கிப் பேருந்தில் வரக் குறைவான வாய்ப்பைப் பெற்ற அவனது தாயிற்கும் வழக்கமானது ஒன்றாகும். ஆனால் மாப்பிள்ளை முறுக்குடன் திரியும் கணபதிக்குப் புதுசு. தந்தையை, நடக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு துண்டு கண்ணாடியைக் கொண்டு தந்தையின் முதுகையும் சூரியக்கதிர்களால் சூடேற்றியும் விளையாடுகிறான். வத்திப்பெட்டியை ஒளித்து வைத்து பீடி பிடிக்க நினைக்கும் தந்தையைக் கோபப்படுத்துகிறான். முழுப் படமுமே அவ்விருவரின் நடைப்பயணம் மட்டு...
விட்னெஸ் விமர்சனம்

விட்னெஸ் விமர்சனம்

OTT, OTT Movie Review, திரை விமர்சனம்
பொதுச் சமூகத்தின் பரவலான கவனத்தைப் பெறாத ஒரு பெரும் சமூக அவலத்திற்கு, பார்வையாளர்களைச் சாட்சியாக்கியுள்ளார் இயக்குநர் தீபக். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையும், அதனால் நிகழும் மரணங்களும் இன்றும் நிகழ்கின்றன. அதுவும் எத்துணை நயமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மேல் அப்பணி சுமத்தப்படுகிறது என உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் தீபக். கல்லூரி மாணவனான பார்த்திபனைக் கட்டாயப்படுத்தி கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கிச் சுத்தம் செய்ய வைக்கின்றனர். விஷ வாயு தாக்கி அவன் இறந்துவிட, அக்கொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைகின்றனர் அந்த அப்பார்ட்மென்ட் வாசிகளும், கான்ட்ராக்டரும். தொழிற்சங்கத் தலைவரான பெத்துராஜின் தூண்டுதலில், பார்த்திபனின் அம்மா இந்திராணி, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென நீதிமன்றத்தை அணுகுகிறார். என்ன தீர்ப்பு வருகிறது என்பதே படத்தின் முடிவு. ...
தி மெட்ராஸ் மர்டர் – லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

தி மெட்ராஸ் மர்டர் – லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

சினிமா, திரைத் துளி
ஓடிடி தளமான “Sony LIV” தனது புதிய தமிழ் வெப் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, “தி மெட்ராஸ் மர்டர்” எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த இணைய தொடரினை சூரியபிரதாப்.S எழுதி-இயக்க, பிக் பிரின்ட் பிக்சர்ஸ் சார்பாக I.B.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் A.L.விஜய் ஷோ ரன்னராக செயல்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெப் தொடர் 1940-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த ஒரு பிரபல கொலை வழக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்த வெப் தொடரில் நடிக்கவிருக்கும் நடிகர்-நடிகையர்கள் மற்றும் இதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப் சீரிஸ், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன...
சேத்துமான் விமர்சனம்

சேத்துமான் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
பெருமாள் முருகனின் 'வறுகறி' எனும் சிறுகதையை மிக நேர்த்தியாக சேத்துமான் எனும் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் தமிழ். பன்னியைக் கொங்கு வட்டாரத்தில் சேத்துமான் என்றழைப்பார்கள். கதை நடக்கும் களமாக மேற்கு கொடைக்கானலைத் தெரிவு செய்துள்ளனர். பெயர் போடும் போது ஒரு கதையை ஓவியத்தில் சொல்லி முடித்ததும், டைட்டில் க்ரெடிட் முடிந்த பின் படத்தின் கதைக்குள் செல்கின்றனர். மகனையும் மருமகளையும் இழந்த பூச்சியப்பன் தனது பேரனுடன் ஊரை விட்டு வெளியேறி, பண்ணாடி வெள்ளையனிடம் வேலைக்குச் சேருகிறார். உடல் சூட்டினைத் தணிக்க, பன்னியின் வறுத்த கறியைத் திண்பதில் ஆர்வம் காட்டுபவர் வெள்ளையன். ஆனால், ஊர் உலகமோ, பன்னிக்கறியை உண்பதை மிக ஏளனமாகப் பார்க்கிறது. குறிப்பாக வெள்ளையனின் மனைவியே, 'பீ திண்ணும் பன்னியைச் சாப்பிடுறது பீ திண்பதற்கு சமம்' என வெள்ளையனை அநியாயத்திற்கு அசிங்கப்படுத்துகிறார். கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்...
மதுரம் விமர்சனம்

மதுரம் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மதுரம் எனும் அருந்தமிழ் வார்த்தைக்கு இனிமை (Sweetness) என்று பொருள். தலைப்பிற்குத் தகுந்தாற்போல், அகமது கபீர் இயக்கிய இப்படமும் வெல்லக்கட்டியாய் மனதில் கரைகிறது. கதையின் களம் ஒரு அரசு மருத்துவமனை. அதிலும் குறிப்பாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் தங்குவதற்காக உள்ள ஒரு பெரிய அறையில் தான் கதை நிகழ்கிறது. மருத்துவமனை என்றாலே, மனதிற்குள் ஓர் இருண்மை, பதற்றம் தன்னிச்சையாக உருவாகும். ஆனால் படத்தில், ரவி எனும் முதியவர், தாஜுதின் எனும் இளைஞனிடம், எப்படி மருத்துவமனை ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம் என்று விவரிப்பார். மருத்துவமனையின் பரபரப்பு மெல்ல அடங்கி, ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டானிஸ்லாஸின் க்யூட்டான ஷாட்களில், மருத்துவமனையின் அழகு மிளிரத் தொடங்குகிறது. மலையாளப் படங்களுக்கே உரிய பிரத்தியேக அழகுகளில் ஒன்று, உணவினையும், அது சமைக்கப்படும் நேர்த்தியையும் மிக அற்புதமான ஷாட்களில் ...