இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்
‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர், 9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகின்றன.
இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம், 10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் வரிசை படங்கள், இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் மகத்தான வெற்றியைக் கண்டது. ஸ்பைடர் மேனுக்கு நாடு முழுவதும் உள்ள தீவிரமான ரசிகர்களைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் அவரை அனைத்து இந்தியர்களுடனும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான ஒரு தனித்துவமான வழியைக் கையாண்டு, இதை ஒரு பான்-இந்தியா திரைப்படமாக விளம்பரப்படுத்தி...