ஜோதி விமர்சனம்
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் குழந்தைக் கடத்தலை மையப்படுத்திய படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது படம். மேலும், படத்தின் முதல் ஏழு நிமிட வீடியோவையே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அருள்ஜோதி எனும் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, ஒரு மர்ம நபர் குழந்தையைக் கடத்திக் கொண்டு செல்கிறார். அந்தப் பெண்ணின் எதிர் வீட்டில், சக்தி சிவபாலன் எனும் காவல்துறை அதிகாரி வசிக்க, அவர் உடனே விசாரணையை மேற்கொள்கிறார். குழந்தை எப்படிக் கிடைத்தது, யார் கடத்தியது என்பதுதான் படத்தின் கதை.
அருள்ஜோதியின் கணவர் அஷ்வினாக, ராட்சசனில் க்றிஸ்டோஃபராக அசத்திய நான் சரவணன் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படத்தில் அவர் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. படத்திலேயே மிக மோசமான நடிப்பை வழங்கியிருப்பது இவர் மட்டுமே. எதிர் வீட்டுப் பெண்ணாகவும், காவல்துறை அதிகாரி சக்தி சிவபாலனின் மனைவி ஜானகியாக க்ரிஷா குரூப் நடித...