Shadow

Tag: Vin Diesel

ஃபாஸ்ட் X விமர்சனம்

ஃபாஸ்ட் X விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
“குடும்பம் தான் எல்லாம்” எனும் இப்படத் தொடரில் வரும் வசனங்கள், மற்ற படங்களில் வரும் பாத்திரங்கள் ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தந்தையின் மரணத்திற்காகப் பழிவாங்க நினைக்கும் வில்லன் டான்டே, ‘உனக்குக் குடும்பம்தானே எல்லாம்!’ என டொமினிக்கின் குடும்பத்தை நிர்மூலமாக்கத் திட்டங்கள் தீட்டுகிறார். அதற்காக ஒரு சதித்திட்டத்தைத் தீட்டி, ஏஜென்சி உதவி கேட்பதாக நம்ப வைத்து, ரோமில் நடக்கும் வெடி விபத்துக்கு டொமினிக்கின் குழுவைப் பொறுப்பாளியாக்கி விடுகிறார் டான்டே. ஏஜென்சி, டொமினிக்கையும் அவரது குழுவையும் கைது செய்ய உலகம் முழுக்கத் தேட, டான்டேவைத் தேடிச் செல்கிறார் டொமினிக். டான்டேவிற்கு, டொமினிக்கின் மகன் லிட்டில் B இருக்கும் இடம் தெரிந்துவிட, அச்சிறுவனைக் கொல்ல விரைகிறார் டான்டே. டொமினிக்கால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. படம் முழுக...
பிளட்ஷாட் விமர்சனம்

பிளட்ஷாட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பிளட்ஷாட் என்பது வேலியன்ட் காமிக்ஸ் உருவாக்கிய ஒரு சூப்பர் ஹீரோவின் பெயர். ‘பிளட்ஷாட்’ எனும் பிராஜெக்ட்டை உருவாக்கும் RST நிறுவனம், இறந்துவிடும் ஒரு இராணுவ அதிகாரியான ரே கேரிசனுக்குச் செயற்கை உயிரூட்டி, உடலில் நேனைட்ஸ் (Nanites) –ஐச் செலுத்தி விடுகின்றனர். நேனைட்ஸ் அதி வேகத்தில் செயற்பட்டு, பழுதுபடும் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவல்லது. ஆனால், ரைஸிங் ஸ்பிரிட் டெக்னாலஜியின் (RST) சி.ஈ.ஓ.வான டாக்டர் எமில் ஹார்டிங், பிளட்ஷாட்டை ஒரு ஆயுதமாக மட்டுமே உருவாக்குகிறார். மனதில் குமுறும் பழிவாங்கும் உணர்ச்சிதான், ஒரு மனிதனை உச்சபட்ச ஆயுதமாக மாற்றும் என்பதால், ரே-வின் மூளையில் ஒரு கதையை விஷுவலாகப் பதிக்கிறார். அதை உண்மையென நம்பும் பிளட்ஷாட், பழிவாங்கும் உணர்ச்சியில் கொதித்து, அவர் மூளையில் பதியப்பட்டிருக்கும் எதிராளியைத் தேடிக் கொல்கிறார். தான் உபயோகிக்கப்படுகிறோம் என ஒரு கட்டத்தில் ...
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 'தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஆரம்பமே அதகளமான கார் ரேஸில் தொடங்குகிறது. ரசிகர்கள், இந்தத் தொடர் படங்களில் இருந்து என்ன எதிர்பார்ப்பார்களோ அதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் திரைக்கதையாசிரியர் க்றிஸ் மார்கன். கதை, லாஜிக் எல்லாம் இரண்டாம் பட்சமே! ரோலர் கோஸ்டரில் இரண்டு சுற்று போய் வந்தது போன்ற உணர்வை தரக்கூடிய பொழுதுபோக்குச் சித்திரம். அதனால் தான் உலகளவில் வசூலில் ரெக்கார்ட் பிரேக் சாதனை புரிந்து வருகிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்றாலே விர்ர்ரூம் எனச் சீறும் கலர் கலரான கார்கள் தானே ஞாபகம் வரும். இப்படத்தில் ஒரு படி மேலே சென்று, "கார் மழை"யைப் பொழிந்துள்ளார் இயக்குநர் கேரி க்ரே. விஷூவலால் வாயடைக்க வைக்கின்றனர். 'தெறி மாஸ்' என்ற பதம் இப்படத்திற்கு மிகப் பொருந்தும். வில்லனாய் உள்ளே வந்த ஜேஸன் ஸ்டாத்தமை, டொமினிக் டீமு...