ஆண்டி செர்கிஸின் ஏப்ஸ் அனுபவம்
ஹேப்பி ஹாபிட், ஸ்டார் வார்ஸ், பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் போன்ற லைவ் ஆக்ஷன் படங்களின் பின்னால் இருக்கும் நபர் ஆண்டி செர்கிஸ். சீசரின் நடை, உடல்மொழி, பாவனைகளுக்குச் சொந்தக்காரர்.
“சீசரின் அசாதாரணமான சாதனை என்னவென்றால் மனிதர்களையும் மனிதக்குரங்குகளையும் பேலன்ஸ் செய்து நடக்கும் பாங்கு தான். முதல் பாகத்தில், தன்னை ஒரு மனிதனாக நினைத்து வளரும் சீசர், மனிதகுரங்குகளுடன் அடைக்கப்பட்டதும் தானொரு மனிதக்குரங்கென உணர்கிறது. தனது இனத்திற்காக ஒரு சமூகத்தை உருவாக்கி, மனிதர்களுடன் போருக்குத் தயாராகும் அளவு பிரமிக்கத்தக்க வகையில் வளர்கிறது. தன்னையொரு லீடராக உனர்கிறது. தன் குடும்பத்தையும், தன் இனத்தையும் மிகவும் நேசிக்கும் சீசர் இரண்டையுமே அழகாகப் பேணிக் காக்கிறது” என அவருக்கு அழியாப் புகழ் தேடித் தந்த சீசர் பற்றிக் கூறுகிறார் ஆண்டி செர்கிஸ்.
படம் பார்த்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக பேட் ஏப் எனும் புது கதாபாத்திர...