வணக்கம்,
அதிரசம் இல்லாத தீபாவளியா???? அரிசிமாவையும், வெல்லப்பாகையும் பக்குவமா கலக்கி, நல்லா புளிக்கவிட்டு, பொரிச்சு எடுத்தா… மெது மெதுன்னு அதிரசம், சும்மா வாயில் உருகும்… எங்க ஊர் பக்கம்,, தட்டு கச்சாயம்னும் சொல்வோம். எவ்வளவுதான் புது புது இனிப்பு வகைகள் வந்தாலும், நம்ம பழமையான , இனிப்புகளுக்கு எப்பவும் மவுசு குறைஞ்சதே இல்லீங்க..
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 1 கிலோ (2 கப் மாவு தனியாக எடுத்து வைக்கவும்)
- வெல்லம் / நாட்டு சக்கரை – 3/4 கிலோ
- நெய்- 2 ஸ்பூன்
- எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
step 1:
பச்சரிசியை நல்லா ஒரு 3-4 மணி நேரம் ஊற வச்சுக்கோங்க. பிறகு, எடுத்து வடிகட்டி, தண்ணி இறங்கற துணியை காரையிலோ இல்லை கயிற்று கட்டலிலோ விரித்து போட்டு இந்த அரிசியை போடுங்க. ஒரு 10-15 நிமிஷத்தில், நல்லா தண்ணியெல்லாம் வடிஞ்சிருக்கும். அரிசியை அள்ளி பார்த்தா, ஒட்டியும் ஒட்டாமயும் இருக்கும். சரியான பதம். அப்படியே கவர்ல போட்டு மிஷன்ல கொடுத்து அரைச்சு எடுத்துக்கோங்க. இந்த பதம் ரொம்ப முக்கியம்.
step 2:
அடுத்து, வெல்லத்தை தண்ணி விட்டு அடுப்பில் சூடு செய்ங்க ஒரு 5நிமிடத்தில் கரைஞ்சுடும். அப்படியே வடிகட்டி எடுத்துக்கோங்க. இப்போ வெல்ல கரைசலை, கொஞ்சம் அகலமான பாத்திரத்தில் வைத்து காய்ச்சுங்க. நல்லா பொங்கி வரும். கொஞ்சம் பாகு எடுத்து தண்ணில விட்டா, கரைஞ்சுவிடும்,, இன்னும் காய்ச்சிட்டே இருங்க.. அப்பப்போ தண்ணில விட்டு பதம் பாருங்க. ஒரு கட்டத்தில், பாகு அப்படியே தண்ணில நிக்கும், கரையாது. உருட்டுனா லைட்டா உருண்டு வரும். சரியான பதம். அடுப்பில் இருந்து எடுத்து வச்சிருங்க.
step 3:
இப்போ, ஈரப்பதமான அரிசி மாவை (மாவு காய கூடாது. காய்தால் அதிரசம் வராது) ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு 2 ஸ்பூன் நெய் விடுங்க. அப்புறம் பாகு முழுதும் மாவுக்குள் ஊற்றி நல்லா கட்டி பிடிக்காம கிளறுங்க. இப்போ மாவும் ரொம்ப லூசா இருந்தா, தனியா எடுத்து வசிருக்கிற அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமா கையில் எடுத்து போட்டு கிளருங்க. மாவு,அப்படியே இட்லிமாவு பத்திற்கு நிக்கனும். கைய்ல் எடுத்து உருட்டினா பாகு ஒட்டாம, நல்லா உருண்டு வரும்.
step 4:
மாவு லூசா இருக்கனும். ஏனா சூடு ஆறும்போது பாகு இஞ்சி, கெட்டியாகும். அப்படியே 2 நாள் வச்சிருங்க.
step 5:
2 நாளுக்கு பிறகு, நல்லா உருண்டையா உருட்டி, எண்ணெய் தடவிய வாழை இலையில் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்க.
step 6:
நல்லா எண்ணெய் உறிஞ்சி உப்பி வரும், பூரி போல. அதை அப்படியே ரெண்டு அரிக்கி (ஓட்டை கரண்டி) வச்சு பிழிஞ்சு அதிக எண்ணெயை வடிகட்டி எடுத்திருங்க.
சூடா இருக்கும்போது, கொஞ்சம் பிசிபிசிப்பு இருக்கறாப்ல தெரியும். ஒரு 3-4 மணிநேரம் ஆறிய பிறகு சாப்பிட்டா,, கடையில் இருப்பதைவிட சுவையா இருக்கும்.
இதில், ஒரு சிலருக்கு
அளவு சரியாத்தான் போட்டேன், கெட்டி ஆகிருச்சு, இல்ல ரொம்ப தண்ணி மாதிரி இருக்கு?????
இப்படி ஏன் ஆகுதுன்னா,, அரிசியில வித்யாசம் வரும். குண்டு அரிசி – மாவு அதிகமாகும், சன்ன அரிசியில் மாவு கம்மியாகும்.. அதன்னாலதான், அதிரசம் செய்யும்போது எப்போதும் தனியா ஒரு 2-3 கப் மாவு எடுத்து வச்சுக்கனும். பாகு ஊத்தி, பதம் பார்த்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா போட்டு கிளறனும்.. அப்பரம் என்ன,,,
தீபாவளியை அதிரசத்தோட கொண்டாடுங்க
- வசந்தி ராஜசேகரன்