32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்

Inbaaraja சேலம் Published: 14/08/2023 1 நிமிட வாசிப்பு Updated: 22/08/2023 சினிமா
எழுத்து அளவு:

மியூசிக்கல் மேஸ்ட்ரோ இசையமைப்பாளர் அனிருத் இசையில், அனிருத் & ப்ரியா மாலியின் குரலில்,  ‘ஹைய்யோடா’  பாடல் மனமெங்கும் மகிழ்ச்சியை  தூண்டும் மேஜிக்கை செய்கிறது.  இந்தப் பாடல் ஷாருக்கானின் காலத்தால் அழியாத ரொமான்ஸ் பக்கங்களை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது..  இதயத்தை வருடும் மெல்லிசையும், காதல் பொங்கி வழியும் ஷாருக்கும் சேர்ந்த கலவையாக  இந்தப் பாடல்  ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்குள் பெரு விருந்தாக அமைந்துள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகர் ஷாருக்கானும்  நயன்தாராவும்  முதன்முறையாக  இப்பாடலில்  ஜோடி சேர்ந்துள்ளனர்.  இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர்  ஃபரா கானின் அற்புத நடன அமைப்பில், மிகவும் பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதிய இதயப்பூர்வமான பாடல் வரிகளில்,  ஒரு அற்புதமான பாடலாக இப்பாடல் வெளிவந்துள்ளது.

ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பிற்கு அனிருத் மிக அழகான பொருத்தமாக குரல் தர நயன்தாராவின் நேர்த்தியான தேனொழுகும் குரலுக்கு பொருந்தும் வகையில் ப்ரியா மாலி அழகாக பாடியுள்ளார், இதயத்தில் புகுந்து, ஆழமான ஆசைகளை தூண்டி விடும், அன்பின் சக்தியை அதன் தூய்மையான வடிவத்தை அழகாக பிரதிபலிக்கிறது இந்த பாடல்.

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

https://x.com/iamsrk/status/1690972181243789312?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA https://youtu.be/8eYG5QGZAZs

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.