32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வீர சந்திரஹாசா | இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கம்

Dinesh R சேலம் Published: 23/08/2024 2 நிமிட வாசிப்பு Updated: 24/08/2024 அயல் சினிமா
எழுத்து அளவு:

கேஜிஎஃப், சலார் போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராகக் களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்தத் திரைப்படம் அவரது கலையுலகப் பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும்.

இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்குப் பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் ‘வீர சந்திரஹாசா’, பாரம்பரியத்தைக் குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடையச் செய்யும் என்கிறார். சந்திரஹாசன் என்பவர் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரமென நம்பப்படுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘வீர சந்திரஹாசா’வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பாகும். பன்னிரண்டு ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளித்திரைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கனவினைக் கொண்டிருந்தார்.

இந்த முயற்சி படைப்பு ரீதியிலான பாய்ச்சல் மட்டுமல்ல, ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மைல்கல் என நம்புகிறார் ரவி பஸ்ரூர். இந்தப் படைப்பில் கணிசமான வளங்களை முதலீடு செய்வதன் மூலம், இந்தச் செழுமைமிக்க கலை வடிவத்தைப் பாதுகாத்துக் கொண்டாடுவதற்கு இயக்குநரான ரவி பஸ்ரூர் மிகுந்த துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வழங்கி உள்ளார்.

யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி என்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும். இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல, கலை வடிவத்தின் நுணுக்கங்களைப் பற்றிய ஆழமான புரிதலும், அதன் அதிர்வை திரையில் மொழிபெயர்க்கும் திறனும் தேவை. இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது. ஆனால் இது உலகளாவிய தளத்தில், யக்ஷகானா மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும். புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் அவர்களின் கலாச்சாரப் பாரம்பரியத்தை ஆராயவும் வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் இம்முயற்சி அமையும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.