
“கோபத்தின் தந்திரமான வழி” – திரு. கோபால்கிருஷ்ண காந்தி | Dr. B.Ramamurthi Oration
ஆசிய – ஆஸ்திரலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை (AASNS - Asian Australasian Neurosurgery) கருத்தரங்கின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டு, வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் டாக்டர் B. ராமமூர்த்தி சொற்பொழிவில், முன்னாள் ஆளுநரும், இராஜதந்திரியும், சிறந்த நிர்வாகியுமான திரு. கோபால்கிருஷ்ண காந்தி அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வு, 23 ஃபிப்ரவரி 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது.
காவேரி மருத்துவமனையின் வழிகாட்டியும், நரம்பியல் இயக்குநரும் மருத்துவருமான கிரிஷ் ஸ்ரீதர், “டாக்டர் B. ராமமூர்த்தி இந்தியாவின் முன்னோடி நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், இந்திய நரம்பியல் சங்கம் (NSI – Neurological Society of India) & ஆசிய – ஆஸ்திரலேசியன் சங்கத்தின் நிறுவன உறுப்பினராவர். அவர் குருவாகவும், வழிகாட்டியாகவும், நண்பராகவும் பலருக்கு வழிகாட்டியுள்ளார்” என்றார். மேலும், ‘கோபத்தின் தந்திரமான...