Shadow

Tag: Kauvery Hospital – Kovilambakkam

தலைவா – NCRI | 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு | சென்னை 2024

தலைவா – NCRI | 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு | சென்னை 2024

மருத்துவம்
நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு சென்னையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வினை, NCRI உடன் இணைந்து, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது. நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கு, சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சையினை நடைமுறைப்படுத்துவதே NCRI-இன் பிரதான குறிக்கோள் ஆகும். நரம்பியல் சிகிச்சைத் துறையை முன்னேற்றுவதற்கும், நோயாளிகளின் ஆரோக்கியத்தை சிறப்பான முறையில் மேம்படுத்துவதற்கும், அவர்களுக்குப் பல்முனை பராமரிப்பு வழங்குவதற்கும், NCRI தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்பட்டு வருகிறது. நரம்பியல் துறையின் தற்போதைய அறிவியல் முன்னெடுப்புகளை, பிற மருத்துவப் பிரிவு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சிறந்த மருத்துவ நடைமுறையை வழங்கும் அரும்பணியைச் செய்துவருகிறது NCRI. கல்வி, ஆராய்ச்சி, நோயாளிகளின் பாதுகாப்பு,...
காவேரி மருத்துவமனை | நிமிர்ந்த முதுகுத்தண்டு – ஓடியாடி விளையாடிய சிறுமி

காவேரி மருத்துவமனை | நிமிர்ந்த முதுகுத்தண்டு – ஓடியாடி விளையாடிய சிறுமி

இது புதிது, மருத்துவம்
பங்களாதேஷைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு சிக்கலான முதுகுத்தண்டு வளைவு திருத்தல் அறுவை சிகிச்சை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு மருத்துவ நிபுணர்களால் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. பிறப்பிலேயே முதுகுத்தண்டு வளைந்த அக்குழந்தைக்கு, நாட்கள் செல்லச் செல்ல முதுகுத்தண்டின் சிதைவு அதிகரித்துக் கொண்டே போனது. குறிப்பாக, சிறிது நேரம் விளையாடிய பிறகு குழந்தையின் கால்களில் பலவீனம் ஏற்படத் தொடங்கியது. குழந்தையின் ஆறாவது மாதத்தில், முதுகுத்தண்டில் காசநோய் பாதித்தது.அக்குழந்தையை வங்காளதேசத்தில் இருந்து, சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அழைத்து வந்தனர். குழந்தையைப் பரிசோதித்த பின், காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரைன் அண்ட் ஸ்பைன் (KIBS)-இன் இயக்குநரும், மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிருஷ் ஸ்ரீதரும், அவ...
காவேரி மருத்துவமனை | ENT சிகிச்சைக்கான தனிப் பிரிவு தொடக்கம்

காவேரி மருத்துவமனை | ENT சிகிச்சைக்கான தனிப் பிரிவு தொடக்கம்

இது புதிது, மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு, மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தூங்கும் பொழுது ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது கேளாமை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பது இந்த ENT பிரிவின் சிறப்பு அம்சமாகும். நுண் காது அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைச் செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தனிப்பட்ட உள்நோக்குமானி அறைகள், ஆடியோலஜி ஆய்வகம், தலைச்சுற்றல் ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் காது ம...
KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவனை, பக்கவாதம் மற்றும் பெருமூளையின் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நவீன ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தைத் (KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது. பக்கவாதம், அல்லது மூளை தாக்குதல், என்பது உடல் இயக்கமின்மைக்கும், மரணத்திற்குமான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சராசரியாக நான்கு பேரில் ஒருவர் என்ற சதவிகிதத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் இந்நோயால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக பக்கவாதம் அமைப்பு கூறுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒருவர் மூளை தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதத் தாக்குதலுக்கு ஆட்பட்டு, அதன் பின்விளைவுகளால் 10 கோடியே 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடத்திற்கு 1 கோடியே 22 லட்சம் பேர் புதிதாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 14 கோடியே 30 லட்சம் பேர் பக்கவாதத்த...
ஆழ் மூளை தூண்டுதல் (DBS) – காவேரி மருத்துவனையின் சாதனை

ஆழ் மூளை தூண்டுதல் (DBS) – காவேரி மருத்துவனையின் சாதனை

இது புதிது
முதன்முறையாக, ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 55 வயதுடைய நபருக்கு ஆழ் மூளை தூண்டுதல் (DBS – Deep Brain Stimulation) அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முன்னோடி முயற்சியானது, நடுக்கம் போன்ற அறிகுறிகளைப் போக்கவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இயக்கக் கோளாறுகளை அறுவைச்சிகிச்சை மூலம் நிர்வகிப்பதற்கான களத்தை அமைத்துத் தரும். ஐம்பத்தைந்து வயதான திரு. எம்.ஏ., பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, தனது நாட்டில் நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவரது அறிகுறிகள் தொடர்ந்து மோசமடைந்து, அவரது நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள் மற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தியதால், அவரது நரம்பியல் நிபுணர் அவரை மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதரிடம் பரிந்துரைத்தார். பரிந்துரையைத் தொடர்ந்து, நோயாளி ரேடியல் சாலையில...
காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

மருத்துவம்
ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை தனது முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை பிப்ரவரி 21ஆம் தேதி அன்று வெற்றிகரமாகச் செய்தது. நாற்பத்திரண்டு வயதான பெண், இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு/ சிறுநீர் பிரித்தல்) செய்து வந்தார். அவர், குடும்ப சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரது தாய் ஒரு சிறுநீரகத்தை வழங்கியிருந்தார். அவரது குடும்பத்தில், தானம் கொடுக்க வேறொருவர் இல்லாததால், அவர் மருத்துவமனையின் இறந்த நன்கொடையாளர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் இறந்தவரின் சிறுநீரகம் நன்கொடையாக வழங்கப்பட்டதன் காரணமாக, நோயாளிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் முத்துக்குமார்...
மா காவேரி கருத்தரிப்பு மையம் – குழந்தை வரம் வேண்டுவோருக்கான வரப்பிரசாதம்

மா காவேரி கருத்தரிப்பு மையம் – குழந்தை வரம் வேண்டுவோருக்கான வரப்பிரசாதம்

மருத்துவம்
சென்னையின் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், கருத்தரித்தல் மற்றும் கருவுறுதல் தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு, சிறந்த மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக “மா காவேரி கருத்தரிப்பு மையம்” தொடங்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த நிபுணர் மருத்துவக் குழுவுடன் அதிநவீன உபகரணங்கள் உட்பட உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், இந்த மேம்பட்ட கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன், புதிய அதிநவீன மையத்தை திறந்து வைத்து, ‘மா காவேரி கருத்தரிப்பு மையம், குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு சிறந்ததொரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது’ எனப் பாராட்டினார். கருத்தரிப்பு மையமானது முழு வசதியுடன் கூடிய கரு ஆய்வகம், அதிநவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் பரந்த அ...
“அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை” – மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்

“அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை” – மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்

மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோவாஸ்குலர் டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையைச் செய்து, நான்கு ஆண்டுகளாகப் பேசாத 85 வயது நோயாளியின் பேச்சை மீட்டெடுத்துள்ளனர். மேலும், முகத்திலுள்ள பாதிக்கப்பட்ட நரம்பினால் ஏற்படும் ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) எனும் பயங்கரமான வலியில் இருந்தும் நிவாரணம் அளித்துள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சை, வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பான விரைவான சிகிச்சை அளிக்கும், இன்ஸ்ட்யூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பெயினின் நுட்பமான அறுவைச் சிகிச்சை திறனிற்கும், மேம்படுத்தப்பட்ட உணர்வகற்றும் (Anaesthesia) திறனிற்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தனது முகத்தின் இடது பக்கத்தில் மின்னதிர்வைப் போன்றதொரு வலியா...