TrailerDinesh R
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.
Trailer
கலைஞரின் ஆன்மா – ஆண் தேவதை
சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குநர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான “ஆண் தேவதை” படத்தின் இசை வெளியீடு 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தமிழினத் தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாகக் கூடி முடிவு செய்து உள்ளனர். இது குறித்து “ஆண் தேவதை” திரைப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர் எஸ் எம் பிலிம் ப்ரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் […]

லேடி சூப்பர் ஸ்டார் 2019
நாயகிகள் வெறுமனே மரத்தைச் சுற்றி ஆடிப் பாடும் காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. தற்போதைய இளம் இயக்குநர்கள் பலர் நாயகிகளைப் பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். இளம் இயக்குநர் U.R.ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து, அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதாபாத்திரத்தைப் படைத்து இருக்கிறார். இந்த படம் ஹன்சிகாவின் 50 ஆவது படம் என்பது குறிப்பிட தக்கது. இந்தப் படத்தின் தலைப்பு வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக […]

குணசித்திர நடிகர் லதா ராவ்
கடிகார மனிதர்கள் படத்தில், கிஷோருக்கு ஜோடியாக மிக யதார்த்தமானதொரு பாத்திரத்தில் அசத்தியுள்ளார் லதா ராவ். சின்ன வீட்டில், வீட்டு உரிமையாளருக்குப் பயந்து, கணவனின் நிலை உணர்ந்து அனுசரணையாக இருக்கும் அன்பான மனைவி பாத்திரத்திக்குப் பாந்தமாகப் பொருந்தியிருந்தார். லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர். தென்னிந்தியத் தொடர்களில் நான்கு மொழிகளிலிலுமே தஒன்றி, சின்னத்திரையில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கிப் திரைப்படங்களில் வாய்ப்பினைத் தேடி வந்தார். முதன்முதலில் […]

பாண்டிமுனி படப்பிடிப்பில ஆச்சரியப்படுத்திய குட்டஞ்சாமி கோயில்
கஸ்தூரி ராஜா எழுதி இயக்கும் புதிய படம் பாண்டிமுனி. இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி,ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். “பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது. […]

பிரியதர்சன் ஜோ ஜெர்ரி – முதல் முயற்சியிலேயே விருது
உல்லாசம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிப் பல முன்னனி நடிகர்களுடன் பல விளம்பரப்படத்தை இயக்கி முன்னனி இயக்குநராகத் திகழ்பவர் ஜேடி ஜெர்ரி. இவரின் மகன் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துள்ளார். தற்போது பிரியதர்சன் ஜோ ஜெர்ரி ஒரு விளம்பரப்படத்தைத் தயாரித்து, இசையமைத்து, இயக்கி ஜாஸ் விளம்பரப்படப் போட்டியில் முதல் பரிசு வென்றிருக்கிறார். தந்தையைப் போலவே மகனும் தனது முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்துள்ளார். ஜாஸ் பர்ப்யூம்ஸ் பிராண்ட்டைப் பிரபலப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட […]

ஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்த படமென்று இசை வெலியீட்டு விழாவில் சொன்னதோடு நில்லாமல், படத்தின் தொடக்கத்தில் தலைப்புப் போடும் முன் நேரடியாகவும் தோன்றித் திரையிலும் சொல்கிறார் இயக்குநர் யுரேகா. அதென்ன கருத்து என்பதை க்ளைமேக்ஸில் நாயகன் ஜெய்வந்த் வசனமாகச் சொல்கிறார். தமிழ்நாட்டில் சிகப்பு விளக்கு பகுதி வேண்டுமென, ‘சிகப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தின் மூலமாக ஒரு கருத்தினை முன் வைத்திருப்பார் யுரேகா. அதன் நீட்சியாக இப்படத்திலும், “லைட்டுங்கோ, ரெட்டு (reddu) லைட்டுங்கோ” என்றொரு பாடலை முன் வைத்துள்ளார். […]

அரளி விமர்சனம்
தலைப்பிலேயே குறியீடாகக் கதையைச் சொல்லிவிடுகின்றனர். பூக்களாகத் தோன்றும் அரளி, பூக்கள் உதிர்ந்து விஷமாய் எஞ்சுகிறது. எத்தனை பேருக்கு இது புரியுமென்ற கவலையில், இயக்குநர் படத்தலைப்பின் பொருளை க்ளைமேக்ஸில் வசனமாகவும் வைத்துள்ளார். அவரது இந்தக் கவலை படத்தின் தொடக்கக் காட்சியில் இருந்தே அப்பட்டமாய்த் தெரிகிறது. நேரடியாகக் கதைக்குள் சென்று, அது யாருக்கேனும் புரியாவிட்டால் என்ன செய்வதென அஞ்சி, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இன்னாரென்று வாய்ஸ்-ஓவரில் அறிமுகப்படுத்துகிறார். நாயகிக்கு, மனிதர்களை விடப் பணமே பிரதானமாய் உள்ளது. அதற்காக அவர் எந்த எல்லைக்குப் […]

மகிழ் திருமேனியின் “தடம்”
அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாகத் தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது தடம் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தைப் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், ‘தடம்’ படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், […]

மணியார் குடும்பம் விமர்சனம்
தனது மகன் உமாபதியை அவையத்துள் முந்தி இருக்கச் செய்ய, கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, மணியார் குடும்பத்தை இயக்கித் தயாரித்துள்ளார் தம்பி ராமையா. “லவ் பண்ணுங்க சார். லைஃப் நல்லா இருக்கும்” என மைனா படத்தில் பேசிய வசனத்தை ஒன்-லைனாக எடுத்துக் கொண்டுள்ளார் தம்பி ராமையா. மாமன் மகனான குட்டிமணியைக் காதலிக்கிறாள் அத்தை மகளான மகிழம்பூ. அந்தக் காதலால் குட்டிமணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. காவல்துறை உயரதிகாரி நல்லவனாக சமுத்திரக்கனி இரண்டு […]

H1-B கலையும் கனவுகள்
அமெரிக்கா, கனவுகளின் தேசம். தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் வாரி வாரி வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கிற தேசம். இங்குக் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம், தொழில் வாய்ப்புகள் உலகெங்கிலும் இருந்து தொழில் முனைவோரைத் தன்பக்கம் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், அவற்றின் வர்த்தகம், விரிவாக்கம் என அமெரிக்கப் பொருளாதாரம் எல்லாத் திசைகளிலும் வளரத் துவங்கியபோது அதை நிர்வகிக்க, முன்னெடுக்கத் தொழிலாளர்கள், வேலையாட்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தட்டுப்பாடு உருவானபோது, உலகெங்கிலும் இருந்து அடுத்தகட்ட குடியேற்றங்கள் அமெரிக்க […]

இயக்குநர் சர்ஜுனின் எச்சரிக்கை
நல்ல படங்களைக் கண்டுபிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கிச் சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்த கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் வி.சத்யமூர்த்தியிடம் ‘எச்சரிக்கை’யாகத் தனது படத்தை ஒப்படைத்துவிட்டது படக்குழு. தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி. அதற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, விஜய்சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ , விஜய் மில்டனின் ‘கோலிசோடா 2’ போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி […]

எச்சரிக்கை – ட்ரெய்லர்

