32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 161)
மிஸ்டர் சுப்பிரமணிய சுவாமி, பொறுக்கிஸ் அல்ல நாங்கள்! சினிமா

மிஸ்டர் சுப்பிரமணிய சுவாமி, பொறுக்கிஸ் அல்ல நாங்கள்!

KNR மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்குக் கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப்-டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய S.மஞ்சுநாத் ‘பொறுக்கிஸ்’படத்தின் மூலம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளரான ராஜாவே இதில் கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் படத் தொகுப்பை கையாண்டுள்ளார். இப்படத்தின் இசை […]

04/08/2018 Dinesh R
கஜினிகாந்த் விமர்சனம் சினிமா

கஜினிகாந்த் விமர்சனம்

திரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பதாலோ என்னவோ, அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரமான பேராசிரியர் பாலு (ரஜினி) போல, ஆர்யாவிற்குப் பிறந்தது முதலே ஞாபக மறதி. ஆனால், ஆர்யா அந்த ரஜினியை விடவும் சிக்கலானவர். ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்யாவிடம் பேச்சுக் கொடுத்தால், செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து இருந்து கவனத்தைத் திருப்பி, அதை சுத்தமாக அடுத்த வேலையில் மனது திசை திரும்பிவிடும். அதனால் தந்தையாலும் நண்பர்களாலும், ‘கஜினிகாந்த்’ எனக் கிண்டலடிக்கப்படுகிறார். […]

04/08/2018 Dinesh R
எங்க காட்டுல மழை விமர்சனம் சினிமா

எங்க காட்டுல மழை விமர்சனம்

ஊரை விட்டுச் சென்னைக்கு வந்துவிட்ட முருகனுக்கும் குபேரனுக்கும் ஒரு பெட்டி நிறைய அமெரிக்க டாலர்கள் ($) கிடைக்கிறது. அப்பணத்தைத் தொலைத்த சேட்டு ஒருபுறமும், அதைச் சேட்டிடம் இருந்து திருடிய போலீஸ் அதிகாரியொருவர் மறுபுறமும் தேடுகின்றனர். அவர்களிடம் சிக்கிக் கொள்ளும் முருகனும் குபேரனும் எப்படித் தப்பிக்கின்றனர், பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை. முருகனாக மிதுன் மகேஸ்வரன் நடித்துள்ளார். படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் வலுவான பின்னணி இல்லை. சென்னை வரும் முருகனுக்கு, ‘மதுரைக்காரன்’ என்ற ஒரே காரணத்திற்காக வீடு […]

03/08/2018 Dinesh R
கடிகார மனிதர்கள் விமர்சனம் சினிமா

கடிகார மனிதர்கள் விமர்சனம்

ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் சூழலில், கடிகார முட்கள் போல் ஓடிக் கொண்டே இருந்தால் தான் சமாளிக்க இயலும். பேக்கரியில் வேலை செய்யும் கிஷோரைப் பெரிய முள்ளாகவும், பூ கட்டி விற்கும் அவரது மனைவி லதா ராவைச் சிறிய முள்ளாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு மகள், இரண்டு மகன், கணவன், […]

03/08/2018 Dinesh R
தி ஒரிஜினல் ரியாமிகா சினிமா

தி ஒரிஜினல் ரியாமிகா

ரியாமிகா என்ற பெயருக்கு ஒரிஜினல் எனப் பொருளாம். சமீபத்தில் வெளியான X வீடியோஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர். சொல்லப்போனால் அம்மாக்களுக்கு கைவிட்டுப்போன நடிக்கும் ஆசையை நிறைவேற்ற மகள்கள் களத்தில் குதிப்பார்களே! அப்படி வந்தவர் தான் ரியாமிகாவும். கேமராமேன் பாலசுப்ரமணியன் இவர்களது குடும்ப நண்பர் என்பதும் இவர் சினிமாவுக்கு வர ஒரு காரணம்.. படிக்கும்போதே சில விளம்பரப் படங்களிலும் […]

01/08/2018 Dinesh R
சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா சினிமா

சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு சிலரே! அந்த வரிசையில் சாம் C.S. மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களைத் தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம். வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை […]

28/07/2018 Dinesh R
ஜுங்கா விமர்சனம் சினிமா

ஜுங்கா விமர்சனம்

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கோகுலும், விஜய் சேதுபதியும் இணையும் படம். இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம். படத்தில் வரும் டான் ஜுங்கா தான் கஞ்சமே தவிர, படத்தின் பிரம்மாண்டத்திற்காக விஜய் சேதுபதி தாராளமாகவே செலவு செய்துள்ளார். ஜுங்காவிற்கு, விற்கப்பட்ட ‘சினிமா பாரடைஸ்’ எனும் தனது தாய் வழி பூர்வீக சொத்தான திரையரங்கினை மீண்டும் வாங்கவேண்டும் என்று ஆசை. ஆனால், திரையரங்கத்தை விற்க மறுத்துவிடுகிறார் கோடீஸ்வரச் செட்டியார். லிங்கா, […]

28/07/2018 Dinesh R
பாக்ஸ் ஆஃபீஸ் குயின் – கோலமாவு நயன் சினிமா

பாக்ஸ் ஆஃபீஸ் குயின் – கோலமாவு நயன்

ஒரு நடிகைக்கான மிகப் பெரிய சாதனை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுவதோ, ‘பாக்ஸ் ஆஃபீஸ் குயின்’ ஆக இருப்பதோ இல்லை. ‘நாயகி மையப்படுத்திய படங்கள்’ என்ற வரையறையை அழிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாகவே ஒரு படத்தில் ஆண் நாயகன் இல்லாத போது, எளிதாக அதை நாயகி படம் என்ற வரையறைக்குள் கொண்டு வந்து விடுகிறோம். அந்தத் தடைகளை உடைத்து, உலகளாவிய பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வரும் வழிமுறை கடினமானதாக இருக்கிறது. நிச்சயமாக, நயன்தாரா இந்தச் சூழ்நிலையை […]

26/07/2018 Dinesh R