32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4071 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 267)
என் கொலை கவிதை

என் கொலை

என்னை நானே கொலை செய்கிறேன் என்னை விரும்பாதவளை நான் நேசிப்பதால் தற்கொலை யாகாது படிமுறைகள் பலவுண்டு இந்த என்கொலைக்கு ஆகவேதான் இப்பொழுதும் அவள் மட்டும் கற்பனையில் அருகாமையில் இருக்கிறாள் சாட்சியாக குற்றவாளி யார் எனச்சொல்ல – சே.ராஜப்ரியன்

28/05/2010 Dinesh R
கணினி ஆய்வில் தமிழ் – 09 தொடர்

கணினி ஆய்வில் தமிழ் – 09

கணினி ஆய்வில் தமிழ் – 08 கடந்த சில வாரங்களாக ஒரு தேடு பொறியின் செயல்பாட்டினைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் நம் பண்டைய இலக்கண நூலான, நன்னூல் மற்றும் சமஸ்கிருத நூல்களான நியாயா, மீமாம்சா போன்ற நூல்கள் எப்படி நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசசிங் ஆய்வுகளிற்கு பயன் படுத்தப்பட்டுள்ளன என்பதை பற்றிப் பார்ப்போம். கடந்த எட்டு வாரங்களாக நாம் பார்த்த நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசசிங் செயல்முறைகள் யாவும் மேற்கத்திய செயல்முறைகள் ஆகும். நமது இந்திய பாரம்பரியத்தில் வந்த […]

26/05/2010 Dinesh R
சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள் கவிதை

சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள்

டிக்காஷன் ஊற்றாத தேநீர் கோப்பையும் மணக்குது கறுத்துப்போன காபிக் கொட்டைகளும் இனிக்குது சர்க்கரை கட்டியே கொஞ்சம் என்னிடம் பேச்சு சூப்பர் வைசர் வயிறு எரியட்டும் அதில் பால் காய்ச்சுவோம் வெண்டைக்காய் பச்சடியில் ஒழிந்திருக்கும் வெங்காயம் போல சுண்டைக்காய் கிச்சடியில் கலந்திருக்கும் வெந்தயம் போல வாழக்காய் பொறியலில் வெந்திருக்கும் கடலைப் போல வாழ்வோம் சைடிஷ்ஷிக்கு நான் கேரண்டி மைதாவின் வழுவழுப்பில் அடுப்புக்கல்லின் கதகதப்பின் ஆயிரம் பரோட்டாக்கள் குருமாவுக்காக பிறந்திருக்கலாம் ஆனால் இந்த ப்ரோட்ட மாஸ்டர் உனக்காக பிறந்தவன் அரிசி […]

26/05/2010 Dinesh R
அலை பேசிக்கவிதைகள் கவிதை

அலை பேசிக்கவிதைகள்

நீ அனுப்பிய குறுஞ்செய்தியெல்லாம் சேமித்து வைக்கப்படுகிறது என்குட்டி அலைபேசியில் நீ கடைசியாக பேசிய வார்த்தை இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என் காதினுள் எவ்வளவு வெப்பம் நாமிருவரும் பேசுவதால் செல்லமாய் சுடுகிறது உன் கோவத்தைப்போல முத்தம் கொடுத்தே நம்முடைய கைபேசி கரைந்துபோகிறது நான் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் நீ கூப்பிடும்பொழுது மட்டும் அழைகிறதென்னை உனக்கு பிடித்த பாடலுடன் இரவுகள் நீளக்கூடாதா இப்படி சீக்கிரம் முடிந்துபோகிறதே நம் பேச்சைக்கேட்டு பொறாமையில் தேய்கிறது இருட்டென்னும் இரவு நிலாவை பார்த்துக்கொண்டே உன்னுடன் பேசுவது நீரினுளிருந்து கொண்டே […]

21/05/2010 Dinesh R
அன்பானவர்களுகாக கவிதை

அன்பானவர்களுகாக

என்னுடைய பலவீனங்களின் மீது யாரும் கல்லெறியாதீர்கள் கோபத்தில் நான் வசைகளை அடுக்கியே பழக்கப் பட்டவன். அதனால் உங்கள் செயல்களுக்கு ஈடாக என்னால் வேறெதையும் தரமுடியாது சன்மானம் பெற நீங்கள் தயாரென்றால் பிரதியுபகாரமாக கொட்டிக் கொடுக்க காத்திருக்கிறேன் எந்நேரமும் எந்த இடத்திலும் எனக்கு அன்பானவர்களும் அதில் சிலநேரம் மாட்டிக்கொள்வதை என் மனம் எப்படி ஏற்கும் பதிலுக்கு நான் உங்களுக்காகவே வார்த்தையொன்று தயாரித்து வைத்திருக்கிறேன் உங்களிடம் தனியாக சொல்கிறேன் இப்பொழுது வேண்டாம் நேரம் வரட்டும் – சே.ராஜப்ரியன்

20/05/2010 Dinesh R
கணினி ஆய்வில் தமிழ் – 08 தொடர்

கணினி ஆய்வில் தமிழ் – 08

கணினி ஆய்வில் தமிழ் – 07 சென்ற வாரம் ஒரு தேடு பொறியில் ஆஃப்லைன் செயல்பாடுகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் ஒரு தேடு பொறியில் பயனர் வினா (க்வெரி: query) கொடுத்தவுடன் அளிக்கப்படும் வலைப்பக்கங்கள் எவ்வாறு வரிசைப்படுத்தப் படுகின்றன என்பதை பற்றிப் பார்ப்போம். உதாரணத்திற்கு “அண்ணா பல்கலைக்கழகம்” என்று வினாவைக் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அண்ணா பல்கலைக்கழக வலைத்தளமான “www.annauniv.edu” முதலில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் பற்றிய தகவல்களைக் கொண்ட பிற […]

19/05/2010 Dinesh R
அவர்களை என்ன செய்யலாம்? கவிதை

அவர்களை என்ன செய்யலாம்?

நான் எப்பொழுதும் சாத்தியமில்லாதவைகளின் மீதே என் பிரியங்களை விதைப்பவன் அறுவடைக்காக காத்திருப்பது தவறுதான் ஆதலினால் என்காதல் செத்துப்போகும் என ஒருவன் சவப்பெட்டி செய்கிறான் இன்னொருவன் புதைப்பதற்கு குழி வெட்டுகிறான் மற்றொருவன் கொல்லிக் கட்டையுடன் அலைகிறான் அவன்கள் மனிதரூபத்தில் உலவிக் கெடுக்கிறார்கள் என்னறுவடை காலம் முன்பே இடையில் அருத்தெடுக்க வேண்டாத உறவில் நுழைந்து என் நேசப்பயிரின் ஆயுளை கெடுத்தழிக்கிறார்கள் அவர்களை என்ன செய்யலாம்? – சே.ராஜப்ரியன்

19/05/2010 Dinesh R
அழகிய பிரியங்கள் கவிதை

அழகிய பிரியங்கள்

என் பிரியங்களில் படிந்துள்ள அழகினை நான் பார்த்து வியக்கிறேன் மற்றவர்களின் வெளிப்பாட்டிலிருந்து என்னுடையதில் மட்டும் ஒரு தனித்துவமிருப்பதால் வழித்தெடுக்க வந்தவர்களுக்கும் அதையே கொடுத்தேன் மாறாக எனக்களித்து சென்றார்கள் அவர்களுக்கு யாரோ கொடுத்த வெறுமைகளை – சே.ராஜப்ரியன்

18/05/2010 Dinesh R
யார் தாதா? அரசியல்

யார் தாதா?

(செவி வழி கதை) மும்பையில ஒரு பெரிய தாதா.. இருக்கேனே அவன் பெயர் என்ன? ஏதோ இப்ராஹிம்னு வருமே!! ஆங்… தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானுல இருக்கான் இப்ப. அவன் மதுரையில ஒருபெரிய நகைக் கடை ஆரம்பிச்சிருக்கான். அழகிரி போய் காசு கேட்டிருக்கான்.அவனுங்க தரல. அந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னாடி நாளு, அந்த கடைஇருக்கிற தெருவை சுத்தி பெரிய பள்ளம் வெட்டி கடைக்கு போக வழி இல்லாமசெஞ்சுட்டாங்க. உடனே தாவூத் கலைஞருக்கு போன் பண்ணி, “உன் பேரனும், […]

17/05/2010 Dinesh R
கடைக்கண் கவிதை

கடைக்கண்

அந்த காலத்தில் அவள் பார்வைக்காகவே உயிர் வாழ்ந்தேன் நம்பவில்லை ஆனாலும் அப்படி நடக்கும் என்ற நிரந்தரமில்லா நம்பிக்கை சகவாசியை கட்டாயப்படுத்தி உடன்வசிக்க சொன்னேன். பிற்பாடு உறுதிசெய்தால் சிரிப்பு என்ற ஆயுதத்தாலும் ஒன்றாக சேர்த்தென்னை வீழ்த்தி இந்த நிகழ்காலத்தில் அவளே மறுபடியும் என்னை சிதிலமாக்குகிறாள் விஷம்கொட்டும் பேச்சு வேண்டா வெறுப்பு பார்வை ஒவ்வாத கசக்கும் மருந்தாய் உதட்டசைவு ஒற்றையிலக்கத்தின் முதல்எண் தடவை என்னுடய இறக்கும் இந்தகாலம் அவளுக்கு புதியவனொருவனுடன் நல்ல தொடக்கம் தந்திருக்க நான் என்ற ஒரு ஆள் […]

14/05/2010 Dinesh R
கணினி ஆய்வில் தமிழ் – 07 தொடர்

கணினி ஆய்வில் தமிழ் – 07

கணினி ஆய்வில் தமிழ் – 06 சென்ற வாரம் தேடு பொறியில் உள்ள ஆஃப்லைன் செயல்பாடுகளான கிராலிங், இன்டெக்சிங், வினா விரிவாக்கம் குறித்துப் பார்த்தோம். இவ்வாரம் இன்னொரு ஆஃப்லைன் செயல்பாடான சர்ச்சிங் (தேடுதல்) குறித்துப் பார்ப்போம். சென்ற வாரம் உபயோகித்த அதே உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். அதாவது கீழே ஒரு தேடு பொறியில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட வார்த்தைகள், பயனர் கொடுக்கும் வினா மற்றும் வினா விரிவாக்க வார்த்தைகள் உதாரணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. இன்டெக்ஸ் வார்த்தைகள் திருநெல்வேலி அல்வா தாமிரபரணி: […]

12/05/2010 Dinesh R
நிலா ஏன் தேய்கிறது? கவிதை

நிலா ஏன் தேய்கிறது?

நிலா வந்து போகிறது வானம் நட்சத்திரங்களைக் கொட்டி மீண்டும் பொறுக்கி எடுக்கிறது சூரியன் தோன்றி மறைகிறது மழை நனைத்துப் போகிறது மின்னல் மீண்டும் வானிற்கே போனது இடி சத்தமிட்டு சாகிறது பனித்துளி பூத்துக் கரைகிறது பூக்கள் மலர்ந்து உதிர்கிறது பலகவிதை எழுந்து விழுகிறது இசை ஒலித்து ஓய்கிறது வண்ண விளக்குகள் எரிந்து அணைகிறது குயில் கூவிச் சோர்கிறது மயில் ஆடி முடிக்கிறது அலைகள் கரையைத் தொட்டு விளையாடி செல்கிறது இன்னும் என்னென்னவோ நடக்கிறது எதுவும் முழுமையடையவில்லை சந்தோஷங்களைப் […]

12/05/2010 Dinesh R
அறிவாளிகள் கதை

அறிவாளிகள்

எவ்ளோ தடவ சொல்றது ஊரு பக்கம் போகாதன்னு இப்ப அழுது என்ன புண்ணியம் என்று சொன்னவாரு கூட்டத்திற்குள் நுழைந்தாள் எட்யாங். ஆம் அனுபவமும் அறிவும் ஒருங்கே பெற்றவள் அவள். அதனால் தான் கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தி கொண்டிருந்தாள். அனைவரும் வானத்தை நோக்கி ஊளையிட்டு,  தலைவிக்கு மரியாதை செலுத்தினார்கள்.   கூட்டத்தின் செல்ல பிள்ளையான ரூஸ்  மனிதர்களால் கொடூரமாக கொல்லப்பட்டு மூன்று நாட்களே ஆன நிலையில், மாயா காயத்துடன் திரும்பி உள்ளான். ” நாம்ப எல்லாம் […]

12/05/2010 Dinesh R
கணினி ஆய்வில் தமிழ் – 06 தொடர்

கணினி ஆய்வில் தமிழ் – 06

கணினி ஆய்வில் தமிழ் – 05 சென்ற வாரம் தேடு பொறியின் ஆன்லைன் செயல்பாடுகளைப் பற்றி பார்த்தோம்.இவ்வாரம் ஆஃப்லைன் செயல்பாடுகள் பற்றி பார்ப்போம். பின் வருவன ஆஃப்லைன் செயல்பாடுகள் ஆகும். வலைத்தளங்களை கிரால் (Crawl) செய்தல் வேண்டும் .இதை செய்யும் நிரலிக்கு “கிராலர் (Crawler)” என்று பெயர். கிரால் செய்யப்பட்ட வலைத்தளங்களின் உள்ள இமேஜ், எழுத்துமூலம் உள்ள செய்திகள் போன்றவற்றை பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஆவணங்கள் அடிப்படையில் ஐ.டிக்கள் (IDs) கொடுக்கப்படும். பின் வரும் செயல்பாடுகள் இந்த ஐ.டியை […]

05/05/2010 Dinesh R
தணல் நெஞ்சம் கவிதை

தணல் நெஞ்சம்

என் இதயம் தீப்பிடித்து எரிகிறது கண்ணீர்விட்டு அணைத்துக் கொண்டிருக்கிறேன் எந்நேரமும் முன்பு போலில்லை நீ நான் பார்த்தால் முகம் சுளிக்கிறாய் வார்த்தைகளில் வெறுப்பள்ளி வீசுகிறாய் நான் சிரித்தால் பதிலுக்கு என்னை சிலுவையில் அறைகிறாய் முகம் திருப்பி நான் செய்தபாவம் என்னவோ? – சே.ராஜப்ரியன்

04/05/2010 Dinesh R