Shadow

Author: Dinesh R

LSS விமர்சனம்

LSS விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
Love Share Subscribe 'லவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க' என்பதன் சுருக்கமாக LSS எனும் தலைப்பைச் சூட்டியுள்ளனர். படத்தின் கதைக்கும், யூ-ட்யூப்பிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. படத்தின் முதற்பாதி கல்லூரிக் காதலாகவும், இரண்டாம் பாதி காசியில் ஒரு தேடலாகவும் நீள்கிறது. பூஜா கோத்தாரி, படிப்பைத் தவிர வேறொரு சிந்தனையில்லாத சிவாவைக் காதலிக்கிறார். சிவாவை அழைத்துக் கொண்டு, தன் அம்மாவைப் பார்க்க பூஜா காசிக்குச் செல்கிறார். காசியில் நேரிடும் எதிர்பாரா நிகழ்வில் இருந்து பூஜாவும் சிவாவும் எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் கதை. பெரம்பூர் இரயில்வே ஸ்டேஷன்க்குச் செல்ல லிஃப்ட் கேட்டவருக்கு உதவிப் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டு கலகலக்க வைத்துள்ளார் சாம்ஸ். சிவாவின் பெருமை மிகு தந்தையாக படவா கோபி தோன்றியுள்ளார். அவரது மனைவியாகவும், நெடுந்தொடர் பிரியராகவும் விநோதினி வைத்தியநாதன் நடித்துள்...
With Love ஸ்டாலின்

With Love ஸ்டாலின்

இது புதிது, சினிமா, திரைத் துளி
திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இன்று மரியாதை நிமித்தமாகத் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்தச் சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உ...
Moonwalk | Vibe ஏத்திய Hypers Kids Africa

Moonwalk | Vibe ஏத்திய Hypers Kids Africa

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாகக் கலந்து கொண்டு, பாடலின் உணர்வைக் காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். ஏத்து பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் ஏத்து பாடலைப் பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலைக் கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து படுவைரலாகி வருகிறது. ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல் தொடர்ந்து வ...
“கேப்டன் விஜயகாந்திற்கு நன்றி” – LSS இயக்குநர் முருகன் மகாலட்சுமி

“கேப்டன் விஜயகாந்திற்கு நன்றி” – LSS இயக்குநர் முருகன் மகாலட்சுமி

சினிமா, திரைச் செய்தி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் 'லவ் சப்ஸ்கிரைப் ஷேர்' ஆகும். வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சரண், "இந்தப் படத்தில் எனக்கு ஒரு பாடலாசிரியராகப் (Lyric Writer) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன், என் இயக்கத்தில் உருவான வட்டாரம் படத்தில் இடம்பெற்ற 'யார் தருவார் இந்த அரியாசனம்?' என்ற பாடலை நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு அமையவில்லை. காரணம், என் படங்களில் பெரும்பாலும் வைரமுத்து அவர்களே பாடல்களை எழுதுவார். இந்தப் படத்தின் இயக்குநரை நான் நீண்ட காலமாக அறிவே...
சீதா பயணம் விமர்சனம் | Seetha Payanam review

சீதா பயணம் விமர்சனம் | Seetha Payanam review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சென்னையில் இருந்து மதுரைக்குக் காரில் செல்லும் சீதாவின் பயணத்தில் இணைந்து கொள்கின்றார் அபிஷேக். வழியில் தாமதமானதால், ஒரு பெரும் விபத்தில் இருந்து உயிர் பிழைக்கிறார் சீதா. தனது பயணத்தில் சந்தித்தத் தாமத்திற்குக் காரணமான மனிதர்களைப் பார்த்து நன்றி சொல்ல முடிவெடுக்கிறார் சீதா. அவரது நன்றி நவில்தல் பயணம்தான் படத்தின் கதை. அந்தப் பயணத்தில், கன்று பிறந்ததைக் கொண்டாடுவது, மாடுகளைக் கடத்துவர்களைத் தடுப்பது, பெண் குழந்தையைக் கடத்துபவர்களை அடித்துதைத்துச் சிறைக்கு அனுப்புவது, பிரியும் முடிவெடுக்கும் தம்பதியைச் சேர்ப்பது என பார்வையாளர்கள் மனதில் ஒட்டாத சம்பவங்களை எதிர்கொள்கிறாள் நாயகி. பார்வையாளகளைப் பாதிக்காவிட்டாலும், நாயகியின் அகத்தில் பெரிய மாற்றம் நேரிடுகிறது. சீதா மிகப் பெரும் கோடீஸ்வரரின் மகள். இரண்டு நிமிடத்தில் பேசித் தீர்த்து விடக் கூடிய சின்னஞ்சிறு பிரச்சனைதான் அவருக்கு. ஆனால் அவரது தந்த...
உயிருள்ளவரை உஷா விமர்சனம் | Uyirullavarai Usha review

உயிருள்ளவரை உஷா விமர்சனம் | Uyirullavarai Usha review

சினிமா, திரை விமர்சனம்
ஜனரஞ்சகமான காதலைச் சொல்வதற்காக, 1983 இல், T.ராஜேந்தர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கிய படமிது. தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரது மனைவி உஷா ராஜேந்தர் தயாரிப்பில் உருவான முதல் படமிது. கல்யாணமான பின் அவர் இயக்கிய முதல் படமிது. ரஜினியை நடிக்க வைக்க விரும்பி, அவருக்காக T.ராஜேந்தர் கதை எழுதிய முதல் படமிது. ரஜினியை நடிக்க வைக்கும் சூழல் அமையாததால், அவருக்காக உருவாக்கின செயின் ஜெயபால் பாத்திரத்தில் T. ராஜேந்தரே நடித்துவிட்டார். தற்போது, இப்படம் 43 ஆண்டுகள் கழித்து மறு வெளியீடு காண்கிறது. எதிரெதிர் வீட்டில் வசிக்கும் அறிமுக நாயகனான கங்காவும், அறிமுக நாயகியான நளினியும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் படிக்கின்றனர். நாயகியின் கவனத்தைத் தன்பால் ஈர்ப்பதற்காகத் தொடர்ந்து கலாட்டா செய்து வருகிறான் நாயகன். கடுப்பாகும் நாயகி பொய்யான புகார் அளிக்கிறார். நாயகன் கோபத்தில், பலர் பார்க்...
“இது தான் சக்சஸ்” – செளந்தர்யா ரஜினிகாந்த் | With Love

“இது தான் சக்சஸ்” – செளந்தர்யா ரஜினிகாந்த் | With Love

சினிமா, திரைச் செய்தி
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, வித் லவ் (With Love) திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு, பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேசிய நடிகை அனஸ்வரா, "இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரைச் சந்தித்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது" என்றார். தயாரிப்பாளர் மகேஷ், "மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி எனக்குத் தெ...
Couple Friendly விமர்சனம்

Couple Friendly விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எதிர்பாராத் தருணத்தில் வீசும் குளிர் தென்றலை அனுபவித்த உணர்வைத் தருகிறது இப்படம். ஷிவாக்கும் மித்ராவுக்கும் இடையேயான நட்பார்ந்த காதலைப் பார்வையாளர்களுக்குக் கவித்துவமாகக் கடத்துவதோடு மட்டுமல்லாமல், வாழ்வின் நிலையாமையைக் குறித்தும், நாளையென ஒன்றில்லை என்பதாகக் கருதி இன்றே வாழ்வைக் கொண்டாடித் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் படம் அழுத்தமாகப் பதிந்து அசரடிக்கிறது. தெலுங்குப் படத்தின் டப்பிங் போலிருக்கே என்ற எண்ணத்தை, ஓரிரு காட்சிகளுக்குள் மறையச் செய்து, படம் நம்மை அலேக்காக உள்ளிழுத்துக் கொள்கிறது. அந்த மாயத்தைப் போட்டி போட்டுக் கொண்டு செய்துள்ளனர் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனும், இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனும். கவிதை போல ரசித்து ரசித்து திரைச்சட்டகத்தை (frames) வைத்துள்ளார் தினேஷ். படத்தின் இயக்குநரான அஷ்வின் சந்திரசேகரும் ஒளிப்பதிவாளர் என்பதால், படம் ஒளிப்பதிவு ரீதியாக மிகவும் நே...
Sweety Naughty Crazy விமர்சனம்

Sweety Naughty Crazy விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய கலகலப்பான 18+ படம். கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவற்றை யாரும் தங்கள் கனவிலும் படைப்பிலும் கூட மீறிவிடக்கூடாது என நினைக்கும் பூமர்ஸ்களின் ரத்தக்கொதிப்பை எகிற வைக்கும் கதைக்கருவைக் கொண்ட படம். போடுவது, ஓட்டுவது, ஏறுவது என்ற வார்த்தை விளையாட்டுகளைப் பயன்படுத்தியே கலகலக்க வைத்தாலும், குடும்பத்திற்குள்ளான தகாப்புணர்ச்சியை (incest) நகைச்சுவைக்கு உட்படுத்தியுள்ளது சிறு நெருடலை ஏற்படுத்தலாம். ஆனால், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ராஜசேகர். G, பார்வையாளர்களோடு அழகாகக் கண்ணாமூச்சி ஆடியுள்ளார். அந்நியோன்யமான தருணங்களை உருவாக்கிக் காட்சியைக் கத்தரித்து விடுகிறார். 'இருக்குன்னு நினைச்சா இருக்கும், இல்லைன்னு நினைச்சா இல்லை' என்பதாகப் பார்வையாளர்களின் கற்பனைக்குச் சாமர்த்தியமாக விட்டு விடுகிறார். தமிழ் இலக்கியத்தில், தன்னிலும் வயது முதிர்ந்த பெண்ணை விரும்பும் ஆணின்...
மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review

மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review

சினிமா, திரை விமர்சனம்
தனது காதலை ஏற்காவிட்டால், முகத்தில் அமிலம் ஊற்றும் இளைய தலைமுறையின் போக்கைக் கண்டு கவலையுறும் மனநல மருத்துவரான அர்ஜுனன், ஒரு மென்மையான, மேன்மையான காதலைத் திரையில் சொல்ல விழைந்துள்ளார். அதற்காகத் தனது அஜய் அர்ஜும் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படமே மயிலாஞ்சியாகும். மயிலாஞ்சி (அல்லது மைலாஞ்சி) என்பது மருதாணி (Henna) தாவரத்தைக் குறிக்கும் சொல்லாகும். புகைப்படக் கலைஞரான சூர்யா, அரிய வகை பறவையினத்தைப் படமெடுக்க நீல்கிரி வந்து சேருகிறார். அங்கே வசிக்கும் சாரு மீது காதல் வயப்படுகிறார். சாருவோ, தான் வேறு ஒருவரைக் காதலிப்பதாகத் தெரிவித்து, சூர்யாவிடமே காதலுக்கு உதவும்படி கேட்கிறார். அவர்களது காதல் என்னானது என்பதே படத்தின் கதை. சூர்யாவாக நடித்துள்ள கன்னிமாடம் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக்கும், சாருவாக க்ரிஷா குரூப்பும் நடித்துள்ளனர். ஓவியம் போல் திரைச்சட்டகங்களை (Frames) அழகுறச் செதுக்...
பூக்கி விமர்சனம் | Pookie review

பூக்கி விமர்சனம் | Pookie review

சினிமா, திரை விமர்சனம்
பூக்கி என்றால் Gen Z அகராதியில், honey, darling, babe, என்னவன், என்னவள் எனப் பொருள்படும் வகையில், ஒருவருக்கு ஒருவர் நெருக்கத்தையும் அணுக்கத்தையும் வெளிப்படுத்தும் செல்லம் கொஞ்சிக் கொள்ளும் சொல்லாம். அந்த மேஜிக் சொல்லிற்குள், Gen Z தலைமுறையினர், ஒட்டுமொத்த காதலையும் அன்பையும் எதிர்பார்ப்பையும் வைத்துள்ளனர். தனது பொருளாதார நிலையைப் பற்றி யாரேனும் பேசினால் தாழ்வு மனப்பான்மை எழுந்து முன்கோபம் கொள்ளும் கைலாஷை பிரேக்-அப் செய்கிறாள் ஆழி. பிரேக்-அப்பிற்குப் பின்னான அக்காதலர்களது மனநிலையே படத்தின் கதை. படம் தொடங்கிய முதல் ஃப்ரேமிலேயே கதையும் தொடங்கி விடுகிறது. ஒரு சிம்பிளான கதையாகத் தோன்றினாலும், மையப் பாத்திரங்களின் மன ஓட்டத்தோடு, சமூகத்தின் நிலையையும் முன்வைக்கிறது படம். உதாரணத்திற்கு எத்தனை வகையான ரிலேஷன்ஷிப்கள் உள்ளன என்பதையும், Dating App-கள் இயங்கும் விதத்தைப் பற்றியும் எப்படி சுவாரசியமாகச்...
மை லார்ட் விமர்சனம் | My Lord review

மை லார்ட் விமர்சனம் | My Lord review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறலைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது மை லார்ட் திரைப்படம். உயிரோடு இருப்பவரை இறந்தவராகச் சித்தரித்து, ஒருவரது அடையாளத்தையே அழிக்க அதிகாரத்தால் முடியும் எனப் படம் அச்சுறுத்துகிறது. ஆனால் அந்த அச்சுறுத்தலை உணர்வுப்பூர்வமாகக் கொண்டு செல்லாமல், கொஞ்சம் நகைச்சுவை கலந்து படம் தர வேண்டிய தாக்கத்தை நீர்த்துப் போகவும் செய்துள்ளார் இயக்குநர் ராஜு முருகன். அதிகாரம் சாமானியனை எங்குக் கொண்டு தள்ளுகிறது என்பதும், அதை வள்ளலாரியத்தில் ஊறிய ஓர் அப்பாவி எப்படி எதிர்கொள்கின்றார் என்பதும் தான் படத்தின் அரசியலும் மையச்சரடும். உயிருடன் இருக்கும்போதே நாயகன் முத்துச்சிற்பிக்கு இறப்புச் சான்றிதழைப் பெற்று, அவரை நையப்புடைக்கிறார் கவுன்சிலர் நர்சிம். குறு பிராந்திய அதிகார பலம் பொருந்திய கவுன்சிலரைத் தேசிய அளவில் உச்ச அதிகாரம் கொண்ட ஒருவரின் துணையோடு சிறைக்கு அனுப்புகிறார் நாயகன். அனுப்ப...
TOXIC – முன்வெளியீட்டு வசூலில் ஒரு மகத்தான சாதனை

TOXIC – முன்வெளியீட்டு வசூலில் ஒரு மகத்தான சாதனை

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடங்கும் முன்னரே, "டாக்ஸிக்" படம் இது வரையிலான சாதனைகளை உடைத்து, விதிகளை மாற்றி எழுத ஆரம்பித்துவிட்டது. தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, ஆந்திரத் தெலுங்கானா சந்தையில் தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸுடன் (SVC) ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை விநியோக ஒப்பந்தத்தைக் கைப்பற்றியதன் மூலம் இந்தப் படம் செய்திகளில் இடம்பிடித்தது. இது இந்திய திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அடுத்ததாக வெளிநாட்டு ஒப்பந்தம் அதை விட பெரிய சாதனையைப் படைத்துள்ளது.சர்வதேச அளவில், "டாக்ஸிக்" திரைப்படத்தை Phars Film என்ற முன்னணி வெளிநாட்டு விநியோக நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது படத்தின் அபூர்வமான முன்-வெளியீட்டு பயணத்தில் இன்னொரு மிகப்பெரிய மைல்கல்லாகும். இந்த ஒப்பந்தம் இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த வெளிநாட்டு ஒப்பந்தங்களில் ஒ...
“ஆழி: மீன்பிடி படகிற்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள்” – சரத்குமார்

“ஆழி: மீன்பிடி படகிற்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள்” – சரத்குமார்

சினிமா, திரைச் செய்தி
மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆழி' திரைப்படத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். க்ரைம் த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குந...
ஆழி: கடலின் ஆழமும், சரத்குமார் நடிப்பின் ஆழமும்

ஆழி: கடலின் ஆழமும், சரத்குமார் நடிப்பின் ஆழமும்

சினிமா, திரைச் செய்தி
மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆழி' திரைப்படத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். க்ரைம் த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி கொட்டாரக...