32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 96)
செல்ஃபி விமர்சனம் சினிமா

செல்ஃபி விமர்சனம்

கற்றோர்க்குச் செல்லுமிடம் எல்லாம் சிறப்பு என்பர். ஆனால் இன்று ஒரு எளிய பின்னணி உடையவர்கள் கல்வியில் கரை சேர்வதற்குள் திக்கித் திணற வேண்டியுள்ளது. கல்விச் சேவை, கடமை என்ற நிலையில் இருந்து விலகி வியாபாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதால் தான் எளியவர்கள் திண்டாடுகிறார்கள். மேலும் தனியார் கல்லூரிகளில் மருத்துவச் சீட்டுப் பெறுவதற்கு எத்தனை லட்சங்களைக் கொட்ட வேண்டியுள்ளது. அந்த லட்சங்களைப் பெறுவதற்கு கல்லூரி நிறுவனம் என்னென்ன கூத்துகளை எல்லாம் அரங்கேற்றுகிறது என்பதை ஃப்ளாஷ் அடித்துக் காட்டியுள்ளது செல்ஃபி […]

31/03/2022 Dinesh R
பூசாண்டி வரான் விமர்சனம் சினிமா

பூசாண்டி வரான் விமர்சனம்

பூச்சாண்டி எனும் தலைப்பு கிடைக்காததால், ஆனாலும் அத்தலைப்புத்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், பூசாண்டியில் சமரசமாகியுள்ளது படக்குழு. மலேஷியாவில் எடுக்கப்பட்டுள்ள தமிழ்ப்படம். கதாபாத்திரங்கள் அனைவருமே பரிச்சயம் அற்ற முகங்கள் என்றாலும், பூச்சுகளற்ற இயல்பான மனிதர்களாய்த் திரையில் நடித்துள்ளதால், மனதோடு ஒட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் நேசத்துடன் பேசிக் கொள்வதும், அவர்களது விருப்பங்களும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வதும் என நம்மில் ஒருவராக மாறி விடுகின்றனர். நாயகி ஹம்சினி பெருமாள் முதல் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தாலும், கதையை முன்னகர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கும் […]

30/03/2022 Dinesh R
காதல் காதல்தான் – ராம் கோபால் வர்மாவின் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர் சினிமா

காதல் காதல்தான் – ராம் கோபால் வர்மாவின் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர்

இந்தியத் திரைப்பட வரலாற்றில் வியத்தகு மாற்றங்களைத் தந்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சமீபத்திய திரைப்படம் ‘காதல் காதல்தான்’. ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப் படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. Artsee Media / Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு […]

30/03/2022 Dinesh R
ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’ கேலரி

ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் […]

30/03/2022 Dinesh R
மாயோன் – மாற்றுத் திறனாளிகளுக்காக ‘ஆடியோ விளக்க’ பாணி சினிமா

மாயோன் – மாற்றுத் திறனாளிகளுக்காக ‘ஆடியோ விளக்க’ பாணி

அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸின் முந்தைய தயாரிப்பான சைக்கோ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது. தற்போது அந்நிறுவனத்தின் ‘மாயோன்’ படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில், அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக ‘மாயோன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பெரிய திரையில் முழு அனுபவத்தைப் பெறுவதற்காகத் தற்போது படக்குழு ‘ஆடியோ விளக்க’ […]

29/03/2022 Dinesh R
‘மோர்பியஸ்’ – இருள் சக்தி புகுந்த எதிர் நாயகன் அயல் சினிமா

‘மோர்பியஸ்’ – இருள் சக்தி புகுந்த எதிர் நாயகன்

சோனி நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’, ‘அன்சார்டட்’ படங்கள் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த ‘மோர்பியஸ் (Morbius)’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. மார்வல் கதாபாத்திரங்களில் மிக முக்கியமான, மிகச் சிக்கலான, மார்வலிலேயே மிக பலமிகுந்த எதிர் பாத்திரமான மோர்பியஸ் பாத்திரம் முதல் முறையாக திரையில் வருகிறது. மிகச்சிறந்த டாக்டரான மோர்பியஸ் மிக வித்தியாசமான […]

29/03/2022 Dinesh R
JGM – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் படம் அயல் சினிமா

JGM – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் படம்

நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM” படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன்மொழி இந்தியப் பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத  பாத்திரத்தில் காண்பிக்கும். இது, அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்! JGM திரைப்படத்தை சார்மி கெளர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி […]

29/03/2022 Dinesh R
மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி சினிமா

மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா – சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 ஆவது படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மென்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார். ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் […]

28/03/2022 Dinesh R
விஜய் தேவரகொண்டாவின் அடுத்த மிஷன் அயல் சினிமா

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த மிஷன்

பன் மொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பன் மொழிகளில் உருவாகிய இந்தியp படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள். இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் பல வெடிபொருள் ஆயுதங்களுடன் […]

28/03/2022 Dinesh R
“KGF – இது பிரசாந்த் நீலின் படம்” – யஷ் அயல் சினிமா

“KGF – இது பிரசாந்த் நீலின் படம்” – யஷ்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்தப் படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் […]

28/03/2022 Dinesh R
KGF சாப்டர் 2 ட்ரெய்லர் – மார்ச் 27 முதல் சினிமா

KGF சாப்டர் 2 ட்ரெய்லர் – மார்ச் 27 முதல்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ‘கேஜிஎஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கேஜிஎஃப் சாப்டர் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் […]

26/03/2022 Dinesh R
“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம் சினிமா

“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம்

வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் “பூ சாண்டி வரான்” படத்தை வெளியிடுகிறார். ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. JK விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை […]

25/03/2022 Dinesh R
RRR விமர்சனம் சினிமா

RRR விமர்சனம்

ஒரு படைப்பாளி, பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு, அதைத் தன் பார்வையாளர்களுக்கு, விஷுவல் அழகினை மேம்படுத்திக் கொடுத்தால்? ரத்தம் – ரணம் – ரெளத்திரம் பாகுபலி எனும் அதி பிரம்மாண்டத்திற்குப் பிறகு, ராஜமெளலியின் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு. பாகுபலியில் பேரருவியின் அழகு விஷுவலில் திரைக்குள் ஈர்க்கும் ராஜமெளலி, இப்படத்தில், பெருங்கூட்டத்திற்குள் ஒற்றை ஆளாய்ப் பாயும் ராம்சரணின் தீரத்தில் நம்மைத் தூக்கி உள்ளே போட்டுவிடுகிறார். சாத்தியமில்லாத ஒரு காட்சியைச் சாத்தியமாக்கி, அவரது மேஜிக்கிற்குக் கட்டுண்ட வைக்கிறார். படத்தின் முதற்பாதி […]

25/03/2022 Dinesh R