Shadow

பிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா?’

bigg-boss-3-day-99

‘மரண மாஸ்’ பாடலுடன் தொடங்கியது நாள். என்றும் இல்லாத திருநாளாக, 3 டான்சர்ஸ் மெயின் டோர் வழியாக வந்து ஆடிவிட்டுப் போனார்கள். ஒருவேளை ரொம்ப நாளாக உள்ளே இருப்பவர்கள், மனிதர்களைப் பார்த்து பழகவேண்டுமென ஐடியாவோ என்னவோ! (வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்).

நேற்று ஷெரின் போட்டிருந்த கவுனை எடுத்து (ஆமா அந்த ட்ரெஸ்க்கு என்ன பேரு) சாண்டி மாட்டிக் கொண்டு, கூடவே ஷெரின் மேக்கப் செய்து விட, ஒரே அலப்பறை. இதன் நடுவில், பிக் பாஸ் வேற, “சந்தியா… மைக்கை மாட்டுங்க” என ஒரு சவுண்டு (சந்தியா, ஒருவேளை பிக் பாஸோட முன்னாள் காதலி பேராக இருக்குமோ?). முகின் பாட்டு பாட, சாண்டியும் ஷெரினும் அதற்கு ஆட, அந்தப் பக்கம் லாஸ் ஆக்‌ஷன் சொல்ல, ஒரே கூத்து தான் அங்கே.

98 நாள் இருந்ததுக்கு மக்களுக்குச் செய்தி சொல்லச் சொல்லி பிக் பாஸ் சொல்ல, எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி, ‘நான் ஃபைனலுக்கு வருவேன்’ என நினைக்கவே இல்லை எனச் சொன்னார் (ஏன்ய்யா பிக் பாஸ், ஃபைனல் போகணும்னு விளையாடினவர்களை எல்லாம் வெளியே அனுப்பிட்டு, ஆசையே இல்லாதவங்களை ஃபைனலுக்கு இழுத்துட்டு வந்துருக்கீங்க?).

அடுத்ததாக சொமேட்டோ டாஸ்க். ஷெரின் ஆர்டர் பண்ணின அயிட்டத்தின் பெயர் 10 தடவை கேட்டும், ஒரு முறை கூடப் புரியவில்லை. சாண்டி வழக்கம் போல கொத்து பரோட்டாவும் சிக்கனும் தான் ஆர்டர் பண்ணியிருந்தார். முகினும் லாஸும் ரொம்ப நேரம் தேடி எதையோ ஆர்டர் செய்தனர். இரண்டு ஆஃபர் கோட் வேற கொடுத்துள்ளனர். “ZOMFORKS” இது முகின்-லாஸ் டீமுக்கு, “ZOMSPOONS” சாண்டி – ஷெரின் டீமுக்கு. அதனால சொமேட்டோல இன்னிக்கு யாராவது உணவினை ஆர்டர் செய்வதாக இருந்தால், இந்த கோட் யூஸ் பண்ணவும்.

அடுத்ததாக பாத்திமா பாபு, மோகன், ரேஷ்மா, மீரா எல்லோரும் உள்ளே வருகின்றனர். கை நிறைய கிஃப்ட்டோட வந்தனர். ரொம்ப நாள் வெளியூர் போய்விட்டு வர அப்பா/அம்மா வரும்போது கிஃப்ட் வாங்கிக் கொண்டு வந்தார்களெனில், அவங்களைக் கண்டுக்காமல், கிப்ட்டைப் பார்க்க குழந்தைகள் போய்விவார்கள் அல்லவா? அதே மாதிரி குழந்தைத்தனமான மகிழ்ச்சியோடு ஹவுஸ்மேட்ஸும் இருந்தனர். சாண்டிக்கு ஒரு கோட்டும், முகினுக்கு ஒரு சட்டையுன் கொடுத்தார் ரேஷ்மா. பின்பு முகினுக்கு வாங்கிக் கொண்டு வந்திருந்த கோட்டை மறைத்து வைத்து, பிறகு கொடுத்தார் மீரா. ‘ஏம்மா மீரா? வீட்ல ரெண்டு பொம்பளை புள்ளைங்க இருக்கு. அவங்களுக்கு எல்லாம் எதுவும் வாங்கிட்டு வர மாட்டியா?’ என்று மைண்ட்-வாய்ஸ் ஓடியது.

அடுத்ததாக ஆக்டிவிட்டி ஏரியாவில், இந்த சீசனோட மொத்த அழுகாச்சி ஃபோட்டோவையும் மாட்டி, புகைப்படக் கண்காட்சி நடத்தினர். அதைப் பார்த்துவிட்டு எல்லோரும் அழவேண்டும், ச்சீ.. பேசவேண்டும். அதன் பின் வராத அழுகையை வர வைக்கப் படாதபாடுபட்டனர். ஓரளவுக்கு உருப்படியாகப் பேசினது சாண்டியும் ஷெரினும் தான்.

இவங்க ஆக்டிவிட்டி ஏரியாவிற்குள் பேசிக் கொண்டு வருவதற்கு, லான் ஏரியாவில் வீட்டையே மாத்தி வைத்திருந்தனர். ஸ்டார் ஓட்டல் மாதிரி, லைட்டிங்லாம் போட்டு செம்ம செட்டிங். பிக் பாஸ் டீம் வொர்க்கர்ஸ்க்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு. அப்புறம் மறுபடியும் புது ட்ரெஸ் வந்தது. எத்தனை? புது ட்ரெஸ் போட்டுக் கொண்டு வந்து எல்லோரும் நடனம் ஆட, அப்புறம் சாப்பாடு வந்தது. ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும், ஏதாவது சொல்லுவாங்க என சாப்பிடாமல் உட்கார்ந்திருக்க, “எல்லாரும் டயட்ல இருக்கீங்களா? சாப்பிடுங்க” என பிக் பாஸ் சவுண்ட் கொடுத்தார்.

அப்புறம்?

அவ்வளவு தான். விருந்தினர்கள் அங்கேயே தான் இருக்காங்க. இன்னிக்கும் ஏதாவது சென்ட்டி சீன்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்கு.

நாளைக்கு 100வது நாள்…. ஹுர்ர்ரே!

மகாதேவன் CM