பிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா?’
'மரண மாஸ்' பாடலுடன் தொடங்கியது நாள். என்றும் இல்லாத திருநாளாக, 3 டான்சர்ஸ் மெயின் டோர் வழியாக வந்து ஆடிவிட்டுப் போனார்கள். ஒருவேளை ரொம்ப நாளாக உள்ளே இருப்பவர்கள், மனிதர்களைப் பார்த்து பழகவேண்டுமென ஐடியாவோ என்னவோ! (வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்).
நேற்று ஷெரின் போட்டிருந்த கவுனை எடுத்து (ஆமா அந்த ட்ரெஸ்க்கு என்ன பேரு) சாண்டி மாட்டிக் கொண்டு, கூடவே ஷெரின் மேக்கப் செய்து விட, ஒரே அலப்பறை. இதன் நடுவில், பிக் பாஸ் வேற, "சந்தியா... மைக்கை மாட்டுங்க" என ஒரு சவுண்டு (சந்தியா, ஒருவேளை பிக் பாஸோட முன்னாள் காதலி பேராக இருக்குமோ?). முகின் பாட்டு பாட, சாண்டியும் ஷெரினும் அதற்கு ஆட, அந்தப் பக்கம் லாஸ் ஆக்ஷன் சொல்ல, ஒரே கூத்து தான் அங்கே.
98 நாள் இருந்ததுக்கு மக்களுக்குச் செய்தி சொல்லச் சொல்லி பிக் பாஸ் சொல்ல, எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி, 'நான் ஃபைனலுக்கு வருவேன்' என நினைக்கவே இல்லை எனச் சொன...