32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 117 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 117)
டேக் டைவர்ஷன் விமர்சனம் சினிமா

டேக் டைவர்ஷன் விமர்சனம்

ஒரு 90’ஸ் கிட் தன் திருமணத்திற்காக பாண்டிச்சேரி செல்கிறார். செல்லும் வழியில் தன் அலுவலக மேலதிகாரி சொல்லும் ஒரு பணியை முடிக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு வருகிறது. அந்தப் பணியில் ஒரு பெரும் பிரச்சனை இருக்க, எப்படி பிரச்சனைகளை ஹீரோ டீல் செய்தார் என்பதை, பல டேக் டைவர்ஷன் போட்டுச் சொல்லியிருக்கிறது இப்படம்.. ஹீரோ அடர்ந்த தாடி, மெலிதான பாடி என பாவப்பட்ட 90’ஸ் கிட்ஸ் கதாபாத்திரத்திற்குப் பக்காவாகப் பொருந்துகிறார். இரு நாயகிகளும் ஒரு சில இடங்களைத் […]

19/05/2022 Dinesh R
திரைப்பாடல் வானின் ஒரே நிலா | வைரமுத்து சினிமா

திரைப்பாடல் வானின் ஒரே நிலா | வைரமுத்து

தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வரலாற்றில் வைரமுத்து நிகழ்த்தியிருப்பது யாரும் எட்டியிராத சாதனை. இனியும் யாரும் எட்டமுடியாத சாதனை. வைகறை மேகங்களில் வெளிப்பட்ட சொல்லாட்சி புதுப்புது பிரவாகமெடுத்து பாடல்கள் வழியே இன்று வரையிலும் நின்று ஆட்சி செய்கின்றன. ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’-இல் அடியெடுத்து வைத்த வைரமுத்துவின் சந்தப்பயணம் எப்படிப் பார்க்கினும் மலைக்கவே வைக்கிறது. சங்க இலக்கியங்களின் உள்ளடக்கங்களைப் பாடல்களில் புகுத்திய வல்லமையை எப்படித்தான் மனிதர் வகுத்தாரோ! ‘ஆயிரம் நிலவே வா’ படத்தில், ‘அந்தரங்கம் யாவுமே’ எனத் துவங்கும் பாடலில், […]

19/05/2022 Dinesh R
விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சினிமா

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, ‘குஷி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ‘குஷி’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘குஷி’ திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தோன்றுகின்றனர். […]

16/05/2022 Dinesh R
“கல்லூரி நட்பு அந்தஸ்து பார்க்காது” – தர்ஷன் சினிமா

“கல்லூரி நட்பு அந்தஸ்து பார்க்காது” – தர்ஷன்

அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வேற லெவல் ஹிட்டப்பா என்று ஆகியிருக்கிற ‘கூகுள் குட்டப்பா’படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை கலந்துகொண்டார். ‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓ.டி.டி தளம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் […]

14/05/2022 Dinesh R
ஆஹா ஒரிஜினலின் ‘குத்துக்கு பத்து’ OTT

ஆஹா ஒரிஜினலின் ‘குத்துக்கு பத்து’

மே 13ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும், ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைதளத் தொடர், திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சாம் ஆண்டன், ரத்ன சிவா, முத்துக்குமார், தாஸ் ராமசாமி, ‘குத்துக்கு பத்து’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் யூட்யூப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைத்தளத் தொடர் ‘குத்துக்கு […]

12/05/2022 Dinesh R
ஐங்கரன் விமர்சனம் சினிமா

ஐங்கரன் விமர்சனம்

நாடு நலம்பெற எதையாவது சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது ஐங்கரன் திரைப்படம். 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து தற்போது படம் திரைகாணுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் என்ஜினியரீங் மாணவரான ஜீ.வி.பிரகாஷ், மக்களுக்குத் தேவையானதை விஞ்ஞான ரீதியாக பயன்படும் வகையில் சின்ன சின்னதாகச் சாதனங்களைச் செய்கிறார். அதற்கான அங்கீகாரத்திற்கு அலையோ அலை என அலைகிறார். ஆனால் அவமதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் சோர்வான ஜீவிக்கு […]

12/05/2022 Dinesh R
மேயாத மான் இயக்குநரின் ‘குலு குலு’ Movie Posters

மேயாத மான் இயக்குநரின் ‘குலு குலு’

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திராவும், நமீதா கிருஷ்ணமூர்த்தியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, […]

10/05/2022 Dinesh R
“நாதலயமாகும் ஒலி சப்தம்” – இசையமைப்பாளர் சாம் சி.எஸ். சினிமா

“நாதலயமாகும் ஒலி சப்தம்” – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்தியேகமான துள்ளலிசைப் பாடல்களாலும், துடிப்புள்ள பின்னணி இசையாலும் உயிர்ப்பித்து வருகிறார். சாணிக்காயிதம் திரைப்படத்தில் […]

09/05/2022 Dinesh R
ஆதார் – எளிய மனிதர்களின் வலி சினிமா

ஆதார் – எளிய மனிதர்களின் வலி

  இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழைப் பெற்றுள்ளனர். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா […]

09/05/2022 Dinesh R
டிஜிட்டல் தமிழ் சினிமாவிற்கு வித்திட்ட வெற்றிப்படம் ‘சிலந்தி’ சினிமா

டிஜிட்டல் தமிழ் சினிமாவிற்கு வித்திட்ட வெற்றிப்படம் ‘சிலந்தி’

காலங்காலமாகப் படச்சுருளில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் இன்று முழுமையாக டிஜிட்டல் திரைப்படங்களாக மாறிவிட்டன. இதற்கு வழிகாட்டியதுடன் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கையைத் தந்த முதல் தென்னிந்திய சினிமாவான “சிலந்தி”, 2008ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிப் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிதான் அதன் பின், எல்லோரும் டிஜிட்டல் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுத்தது. இந்தப் படத்தைத் திருப்பூரைச் சேர்ந்த சங்கர் பழனிச்சாமி ஜி கம்பெனி சார்பில் […]

08/05/2022 Dinesh R
சந்தோஷ் சிவனின் ‘சென்டிமீட்டர்’ சினிமா

சந்தோஷ் சிவனின் ‘சென்டிமீட்டர்’

‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்தியேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சென்டிமீட்டர்’. இதில் ‘அசுரன்’ படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், […]

08/05/2022 Dinesh R
மைக்கேல் – சந்தீப் கிஷனின் ஆக்ஷன் அவதாரம் Movie Posters

மைக்கேல் – சந்தீப் கிஷனின் ஆக்ஷன் அவதாரம்

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன், பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மைக்கேல்’. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன் முறையாக […]

07/05/2022 Dinesh R
“சாணிக்காயிதத்தின் பயணம்” – இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சினிமா

“சாணிக்காயிதத்தின் பயணம்” – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

சாணிக்காயிதம் பயணம் ஒரு சிறு கருவுடன் தொடங்கியது. அது நான்கு நாட்களில் உருவாகியது. மனித இயல்பைப் பற்றிய அடிப்படை புரிதல்தான் இந்தப் படத்தின் முக்கிய சாராம்சம் ஆகும். பழிவாங்கும் கதைக்களமான ராக்கி திரைப்படத்தில் இருந்தே, அருண் மாதேஸ்வரன் பழிவாங்கும் கதையை மூன்று பகுதியாய் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார். அதன் தொடர்ச்சியாகவே அவர் இந்த சாணிக் காயிதம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இது குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “தமிழ்த் திரையுலகில் பழிவாங்கும் கதைகள் புதியதல்ல. […]

06/05/2022 Dinesh R
Doctor Strange in the Multiverse of Madness விமர்சனம் அயல் சினிமா

Doctor Strange in the Multiverse of Madness விமர்சனம்

மார்வெல் படங்கள் வெளியாகும் நாட்கள் உலகெங்கும் திருவிழா கோலம் பூண ஆரம்பித்துவிட்டது. ஒரே படத்திலேயே, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மக்கள் மனதைக் கவர்ந்துவிட்டார். பெனிடிக்ட் கம்பர்பேட்சின் நடிப்பும் அதற்கொரு பிரதானமான காரணம். பல்லண்டத்திற்கிடையே பயணிக்கும் திறனுள்ள அமெரிக்கா சாவேஸ் எனும் இளம்பெண்ணை, ஒரு ஆக்டோபஸ் மிருகம் துரத்தி வருகிறது. வேற பிரபஞ்சத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அப்பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்துவிடுகிறார். அமெரிக்கா எனும் அந்தப் பெண், நாம் வாழும் பிரபஞ்சத்திற்கான (Earth 616) பாதையைத் திறந்து தப்பித்துக் […]

06/05/2022 Dinesh R