32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 118 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 118)
சாணிக்காயிதம் விமர்சனம் OTT

சாணிக்காயிதம் விமர்சனம்

க்வென்டின் டரான்டினோ படங்களின் பாதிப்பில், ரத்தமும் சதையும் தெறிக்கும் ஒரு பழிவாங்கும் படம் தமிழில் வந்தால் எப்படியிருக்கும்? சாதிப் பெருமிதம் எனும் கயமையால் நிகழ்த்தப்படும் கொடூரத்தைப் பொறுக்கமாட்டாமல், பாதிக்கப்பட்ட பொன்னி எனும் ஒரு பெண் பழிவாங்கப் புறப்படுவதே சாணிக்காயிதத்தின் கதை. தன் கணவனையும் மகளையும் உயிரோடு எரித்தவர்களைத் தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க ஒரு சாரார் முனையும் போது, சட்டமாவது மயிராவது என தனது கைகளாலேயே அனைவரையும் உயிரோடு எரித்துக் கொல்லும் வன்மத்துடன் தன் அண்ணன் சங்கையாவுடன் […]

06/05/2022 Dinesh R
குத்துக்குப் பத்து – நோ பேச்சு ஒன்லி பன்ச்சு OTT

குத்துக்குப் பத்து – நோ பேச்சு ஒன்லி பன்ச்சு

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்குப் பத்து’ வலைத்தளத் தொடருக்காக வித்தியாசமான முறையில் ‘குத்து’விட்டு விளம்பரப்படுத்தும் படக்குழுவினர். ‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் ‘குத்துக்கு பத்து’ என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரைப் பிரபலப்படுத்துவதற்காகக் குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பன்ச்சு’ என்ற வித்தியாசமான உத்தியைக் கையாண்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய வலைத்தளத் தொடர் […]

06/05/2022 Dinesh R
விசித்திரன் விமர்சனம் சினிமா

விசித்திரன் விமர்சனம்

ஜோசஃப் எனும் மலையாளப் படத்தைத் தமிழில், ‘விசித்திரன்’ என மீள் உருவாக்கம் செய்துள்ளனர். விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்ட காவல்துறை அதிகாரியான மாயன், தன் முன்னாள் மனைவி ஸ்டெல்லாவின் மரணம், விபத்தால் ஏற்பட்டதன்று, அது ஒரு கொலை என்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரது மகள் டயானா மரணத்திற்கும், முன்னாள் மனைவி ஸ்டெல்லா மரணத்திற்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்ந்து, ஒரு பெரும் மருத்துவ மோசடியைக் கண்டுபிடிக்கிறார். அதைச் சட்டத்தின் முன் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் படத்தின் அபாரமான முடிவு. தன் […]

06/05/2022 Dinesh R
கூகுள் குட்டப்பா விமர்சனம் சினிமா

கூகுள் குட்டப்பா விமர்சனம்

‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ எனும் மலையாளப் படத்தினைத் தமிழில் மீள் உருவாக்கம் செய்து இயக்கியுள்ளனர் இயக்குநர்களான சபரியும் சரவணனும். பிக்பாஸ் புகழ் தர்ஷனும் லாஸ்லியாவும் அறிமுகமாகியுள்ளனர். தெனாலிக்குப் பிறகு, கே.எஸ்.ரவிகுமாரின் RK செல்லூலாய்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் இரண்டாவது படமிது. படம் தொடங்குவதற்கு முன் முறையாக அனைவருக்கும் நன்றி சொல்லியுள்ளார் கே.எஸ்.ரவிகுமார். மகனை வெளியூருக்கு அனுப்ப விரும்பாத தந்தை சுப்ரமணிக்கும், வெளிநாட்டில் பணி புரிய விரும்பும் மகன் ஆதிக்கும் நடக்கும் பாசப்போராட்டத்தில் படம் தொடங்குகிறது. தன் […]

06/05/2022 Dinesh R
டிரைவர் ஜமுனா – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் Movie Posters

டிரைவர் ஜமுனா – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ படப் புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் […]

05/05/2022 Dinesh R
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் Movie Posters

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷும் நடிகை அஞ்சு குரியனும் நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்குப் பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மா கா […]

04/05/2022 Dinesh R
‘தெய்வ மச்சான்’ விமல் Movie Posters

‘தெய்வ மச்சான்’ விமல்

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘தெய்வ மச்சான்’ என பெயரிடப்பட்டுள்ளது. அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, […]

04/05/2022 Dinesh R
சாணிக்காயிதம் – பழி வாங்கிம் கீர்த்தி சுரேஷ் சினிமா

சாணிக்காயிதம் – பழி வாங்கிம் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் செல்வராகவனை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மிக அழுத்தமான படமாக ‘சாணிக்காயிதம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. தலைமுறை தலைமுறையாக அநீதி திணிக்கப்படும் குடும்பத்தில் சிக்கித் தவிக்கும் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் பழிவாங்கும் க்ரைம் த்ரில்லரில் நடித்தது பற்றி கீர்த்தி சுரேஷ், “இனிமையாகவும் வசீகரமாகவும் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்த எனக்கு, பொன்னி கதாபாத்திரத்திற்காக மிகவும் முரட்டுத்தனமான, ரத்தம் சதையும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் […]

04/05/2022 Dinesh R
துணிகரம் – ஆம்புலன்ஸ் சர்வைவல் த்ரில்லர் சினிமா

துணிகரம் – ஆம்புலன்ஸ் சர்வைவல் த்ரில்லர்

புதுமுகங்களின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘துணிகரம்’ படத்தின் முன்னோட்ட வெளியீடு மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஐய்விஷ்வா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஏ4 மீடியா வொர்க்ஸ் டாக்டர் வீரபாண்டியன் மற்றும் டாக்டர் டெய்ஸி வீரபாண்டியன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘துணிகரம்’ ஆகும். அறிமுக இயக்குநர் பாலசுதன் எழுதி, இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் வினோத், பரணி, டென்னிஸ், நடிகைகள் செம்மலர் அன்னம், சரண்யா ரவிச்சந்திரன், காயத்ரி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மெய்யேந்திரன் […]

04/05/2022 Dinesh R
பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’ சினிமா

பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’

நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘தடை உடை’. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் […]

03/05/2022 Dinesh R
ஜீ5 இன் அசத்தும் அனந்தமும், கலக்கும் கார்மேகமும் சினிமா

ஜீ5 இன் அசத்தும் அனந்தமும், கலக்கும் கார்மேகமும்

ஐ.எம்.டி.பி. (IMDB)-இன் ‘டாப் தமிழ் வெப் சீரிஸ்’ பட்டியலில் இடம் பெற்ற 7-எபிசோட் கொண்ட ஜீ5 தொடரான, நடிகர் விமல் நடித்த “விலங்கு” இடம்பெற்றுள்ளது. இத்தளத்தின் சமீபத்திய வெளியீடுகளான ஏப்ரல் 2022 இல் பிரீமியர் செய்யப்பட்ட ‘அனந்தம்’ மற்றும் ‘கார்மேகம்’ வெளியான நாளிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் ப்ரியாவின் ‘அனந்தம்’ அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது, பார்வையாளர்கள் இதன் சென்டிமென்ட் கலந்த உணர்வுபூர்வமான கதையினைக் கொண்டாடி வருகிறார்கள். உண்மையில், […]

01/05/2022 Dinesh R
விட்னஸ் – தூய்மைப் பணியாளர்கள் மையப்படுத்திய படம் சினிமா

விட்னஸ் – தூய்மைப் பணியாளர்கள் மையப்படுத்திய படம்

நாம் கண்டும், காணாது கடந்து போகும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வைப் பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் ஒன்று தான் இதுவும். இதற்கு முன் பலமுறை நடந்திருந்தாலும் ஒரு சிறிய அதிர்வைக் கூட இது ஏற்படுத்தியதில்லை. ஆனால் இம்முறை, பல்வேறு காரணங்களால் இதை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக நடக்கும் […]

01/05/2022 Dinesh R
காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம் சினிமா

காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

சிறு வயதிலேயே ராசி கெட்டவர் என்ற பிம்பத்தைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட விஜய்சேதுபதிக்கு இரு காதல் ஒரே நேரத்தில் மலர்கிறது. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாவம் என இருவரையுமே காதலிக்கிறார். இவர், இரண்டு ட்ராக்கிலும் ட்ரெயின் ஓட்டுவது காதலிகளுக்குத் தெரிய வர, அடுத்தடுத்து என்னாகிறது என்பதைக் கலகலப்பாகச் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். காத்துவாக்குல ரெண்டு காதலையும் சமாளிக்கும் இடங்களில் விஜய்சேதுபதி காதல் சேதுபதியாகக் கோலேச்சுகிறார். அவர் நடனமாடச் சிரமப்படும் போதும் அவர் மேல் […]

29/04/2022 Dinesh R
பயணிகள் கவனிக்கவும் விமர்சனம் OTT

பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

விக்ருதி எனும் மலையாளப் படத்தைத் தமிழில், ‘பயணிகள் கவனிக்கவும்’ என மீள் உருவாக்கம் செய்துள்ளனர். விக்ருதி என்ற மலையாளச் சொல்லிற்கு சில்மிஷம் எனப் பொருள் கொள்ளலாம். சோர்வில் தன்னை மறந்து தூங்கும் எழிலனைக் குடிக்காரர் எனக் கருதும் ஆண்டனி, தூங்கிக் கொண்டிருக்கும் நபரைப் புகைப்படமெடுத்து, போதையில் கிடக்கிறாரென மீம்ஸ் உருவாக்கி சமூக ஊடகத்தில் உலாவ விடுகிறார். ஆண்டனியின் சில்மிஷம், வாய் பேசவும் காது கேட்கவும் இயலாத எழிலனையும், அவனது குடும்பத்தையும் எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. […]

28/04/2022 Dinesh R
பயணிகள் கவனிக்கவும் – எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மரியாதை சினிமா

பயணிகள் கவனிக்கவும் – எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மரியாதை

‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா, இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசைச் சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள். இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான ‘பயணிகள் […]

25/04/2022 Dinesh R