Shadow

சினிமா

‘சிந்துபாத்’ பற்றி விஜய் சேதுபதி

‘சிந்துபாத்’ பற்றி விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, “பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குநர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு அவர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம், என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினேன். ஆனால் திரையுலகில் யாரும் அவரை நம்பவில்லை. பிறகு நானே அழைத்து சேதுபதி பட வாய்ப்பைக் கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உரு...
சசிகுமாருக்கு மும்பையில் கிடைத்த நெகிழ்ச்சி

சசிகுமாருக்கு மும்பையில் கிடைத்த நெகிழ்ச்சி

சினிமா, திரைத் துளி
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் "தயாரிப்பு எண் 3" மும்பையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமான இதில் சமீபத்தில் இணைந்த சரத்குமார் பங்கு பெறும் மிக முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நடிகர் சசிகுமார் மீது மும்பை வாழ் தமிழ் மக்கள் காட்டிய நிபந்தனையற்ற அன்பு அவரை வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து இயக்குநர் என்.வி.நிர்மல் குமார் கூறும்போது, "சசிகுமார் மும்பையின் நெரிசல் மிகுந்த சாலைகளில் சில ரவுடிகளை துரத்திக் கொண்டு ஓடி, அடிப்பது போன்ற ஆக்‌ஷன் காட்சிகளை நாங்கள் படமாக்கிக் கொண்டிருந்தோம். பொது மக்களுக்குத் தெரியாத வண்ணம் மறைக்கப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி முழுக் காட்சியைப் படம்பிடிக்க முடிவு செய்தோம். இருப்பினும், இந்த சூழ்நிலையானது தலைகீழாக மாறியது. இது ஓர் உண்மையான மோதல் என...
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சங்கரதாஸ் அணி

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சங்கரதாஸ் அணி

சினிமா, திரைச் செய்தி
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது. "ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம். ...
ஜீவி – விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே!

ஜீவி – விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே!

சினிமா, திரைத் துளி
பார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, 'மைண்ட் கேம்ஸ்' அடிப்படையிலான த்ரில்லர் படங்களுக்கு எப்போழுதுமே ஒரு விசேஷ எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உண்டு. ஜீவி, அத்தகையதொரு படமாக இருக்குமென அப்படத்தின் ட்ரெய்லர் கட்டியம் கூறுகிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்துக்கு 'U' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இயக்குநர் வி.ஜே.கோபிநாத், "ஒரு அறிமுக இயக்குநரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக, தங்கள் துறைகளில் புகழ்பெற்ற பிரபலங்களாக இருக்கும் இந்த உறுப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி. விஞ்ஞானம் மற்றும் மாயவித்தைகளுக்கு இடையே மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதை வலியுறுத்தும் ஒரு த்ரில்லர் படத்தைத் தர முயற்சி ச...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்

சினிமா, திரைத் துளி
பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரைப் பற்றிப் புகழ்ந்து சொல்ல அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் 'பக்கத்து வீட்டுப் பையன் (Boy Next Door)'. அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படுவர். ஆனால் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே 'நம்ம வீட்டு பசங்க' என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கார்த்திக் வேணுகோபாலன், "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள்...
சுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும்

சுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும்

சினிமா, திரைத் துளி
"ஜூன் 14ஆம் தேதி அன்று, உலகமெங்கும் வெளியாகும் 'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குநர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்தப் படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்று விளக்கினார். "அவர்கள் வெறும் இயக்குநர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், அவர்களின் நுணுக்கமான நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். ஸ்கிரிப்ட்டில் நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர்கள், அவர்களை இயக்கும்போது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் இ...
மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

சினிமா, திரைத் துளி
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், இதையெடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.ஜா கதாநாயகியாக பிரபல இயக்குநரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க இருக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப் படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால், படம் அவ்வ...
500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி

500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி

சினிமா, திரைத் துளி
2019இல் யூடியூப் தளத்தை 'பிளாக் ஹோல்' பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் 'ரௌடி பேபி' என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மைத் தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் 'Bohemian Rapsody', 'A Star is Born' மற்றும் 'Gully boy' போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது 'மாரி 2'வின் 'ரௌடி பேபி' தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மேற்கோள் அல்ல, 'Rowdy Baby Song reaction', 'Rowdy baby Cover' (Instrumental & Vocals), Talking Tom version மற்றும் நிறைய விஷயங்களை இணையத்தில் பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 'Song reaction' பற்றிக் குறிப்பிடுவது நம் நாட்டில் உள்ளவர்களைப் பற்றியது மட்டுமல்ல, கொரியா, ரஷ்யா மற்றும் தொலைதூர ந...
கொலைகாரன் விமர்சனம்

கொலைகாரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு த்ரில்லருக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது. அர்ஜுனும், விஜய் ஆண்டனியும் இணைந்திருக்கும் முதற்படம் என்பது எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. ஒரு கொலை ஒன்று நடக்கிறது. ஒருவர் கொலைக்குப் பொறுப்பேற்று காவல்துறையில் சரணடைகிறார். அவர் தான் அந்தக் கொலையைப் பண்ணினாரா, ஏன் சரணடைந்தார் என்ற காவல்துறையின் விசாரணைதான் படத்தின் கதை. புலனாய்வு மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரி கார்த்திகேயனாக அர்ஜுன் நடித்துள்ளார். தான் தான் கொலையாளி என ஒருவர் சரணடைந்த பின்பும், வழக்கில் ஏதோ இடறுவதாக அதை நூல் பிடித்து முடிக்க நினைக்கும் அவரது தீவிரம் ரசிக்க வைக்கிறது. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும், அர்ஜுனின் பாத்திரமே முதன்மை நாயகனாக மனதில் பதிகிறது. சமய சந்தர்ப்பங்களால் நல்லவன் ஒருவன், ஒரு கொலையைச் செய்துவிட்டாலும், அவனைச் சட்டப்படி தண்டிப்பதா அல்லது மனசாட்சிபடி விட்டுவிடுவதா ...
மீண்டும் மேக்ஸின் லூட்டி – தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்

மீண்டும் மேக்ஸின் லூட்டி – தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘இல்லுமினேஷ்ன் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில், 2016 இல் வெளிவந்த, தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் எனும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. செல்லப் பிராணிகள், தன்னை வளர்க்கும் குடும்பத்தினரோடு எப்படி உணர்வுபூர்வமாகக் கலந்து கொள்கின்றன என்பதுதான் இந்தப் பாகத்தின் பிரதான கரு. முதற்பாகத்தை இயக்கிய க்றிஸ் ரெனாட் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். வளர்ப்பவருடன் புது பண்ணை வீட்டிற்குச் செல்லும் மேக்ஸும், அவன் நண்பர்களும், தங்கள் பயத்தைக் கடந்து எப்படி ஹீரோவாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. படத்திற்கு அலிக்சான்ட்ரூ டெஸ்ப்லா இசையமைத்துள்ளார். உலகமெங்கும் யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட, இப்படத்தைத் தமிழகத்தில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது....
ஜீவன் நடிக்கும் அசரீரி

ஜீவன் நடிக்கும் அசரீரி

சினிமா, திரைத் துளி
அறிமுக இயக்குநர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் 'அசரீரி' எனும் அறிவியல் புனைவு படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, "டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராணக் குறிப்புகளைக் கூடத் தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன். இயக்குநர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளைக் கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குநர் திரையில் கொண்டு வருவார் என்பது தான். அந்த வகையில், ஜி.கே. ஒரு விதிவிலக்கானவர். அவர் ஏற்கெனவே தனது திறமையை 'அசரீரி' என்ற அதே தலைப்பில் உருவான குறும்ப...
எம்ஐபி: மென் இன் ப்ளாக் (2019)

எம்ஐபி: மென் இன் ப்ளாக் (2019)

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
Men in Black (1997), Men in Black 2 (2002), Men in Black 3 (2012) ஆகிய மூன்றுமே வேற்றுக் கிரக உயிரினங்களுடன் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும் நகைச்சுவையும் ஒருங்கே அமையப்பெற்ற வெற்றித் திரைப்படங்கள். அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகமான Men in Black: International, ஜூன் 14 ஆம் ட்ஹேதி அன்று வெளியாகிறது. வில் ஸ்மித்தும், டாமி லீ ஜோன்ஸும் முதல் மூன்று பாகங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில், அவெஞ்சர்ஸ் புகழ் மார்வெல் ஹீரோவான தோர் பாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வோர்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் லியம் நீசனும் (விருதகிரியின் மூலமான Taken படத்தின் நாயகன்), டெசா தாம்ப்சனும் (அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்தில் தோர் இவரேற்ற பாத்திரமான வால்க்ரீயைத் தான் ஆஸ்கார்டின் ராணியாக்குவார்) நடித்துள்ளனர். இப்படங்களின் அடிப்படை கதைக்கரு என்னவென்றால், வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்களும், மனித இனத்துடன்...
NGK விமர்சனம்

NGK விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால குமரனுக்கு உரக்கடை முதலாளிகளால் பிரச்சனை எழுகிறது. அச்சிக்கலில் இருந்து எம்.எல்.ஏ.வின் உதவியோடு தப்பித்த குமரன், அரசியல் எனும் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து, அதன் மூலம் நல்லது செய்ய நினைக்கிறான். அரசியலைச் சுத்தம் செய்தானா அல்லது அரசியலால் அசுத்தம் அடைந்தானா என்பதுதான் படத்தின் கதை. கட்சியின் அடிமட்ட தொண்டன் கிரியாக நடித்துள்ள பாலா சிங், கறை வேட்டியின் மகத்துவம் பற்றி குமரனுக்கு எடுக்கும் பாடம் மிகவும் அசத்தல். 'செல்வராகவன் இஸ் பேக்' எனத் துள்ளத் தொடங்கிய மனம், இரண்டாம் பாதியில் அப்படியே சொய்ங் எனத் துவண்டு விடுகிறது. குறிப்பாக, கீதா குமாரியாக நடித்திருக்கும் சாய் பல்லவி, தன் கணவன் குமரன் மீது சந்தேகப்படும் காட்சிகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள அதீதமான மனோசக்தி தேவைப்படுகிறது. ஏன் எடிட்டிங்கில் அந்தக் காட்சிகளை எல்லாம் தூக்காமல் விட்டார்களோ? மிகச் ...
‘கடலைப் போட பொண்ணு வேணுமா?’ – யோகிபாபு

‘கடலைப் போட பொண்ணு வேணுமா?’ – யோகிபாபு

சினிமா, திரைத் துளி
R.G.மீடியா சார்பாக D.ராபின்சன் தயாரித்துள்ள "கடல போட ஒரு பொண்ணு வேணும்" எனும் படம். இப்படத்தை வேகமாக எடுத்து முடித்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது, "யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப் படம் காட்டும். யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப் பெண்களை அவர் கடலைப் போட்டு உஷார் பண்ணுவார். கடலைப்போட்டு கடலைப்போட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம் கடலைப்போட பெண் தேடும் ஹீரோ அசார் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் இடங்களில் எல்லாம் சிரிப்பால் நம் வயிறு பிதுங்கும். முழுக்க முழுக்க மக்களை ஜாலியாக எண்டெர்டெயின்மெண்ட் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிற படம் இது. நிச்சயம் இந்தப் படம் கமர்ஷியலாக பெரிய வெற்றி பெறும். அதற்கான எல்லாச் சாத்தியங்களையும் படத்தில் கையாண்டிருக்கிறோம்" என்றார் இயக்...
சிம்புதேவனின் ‘கசட தபற’

சிம்புதேவனின் ‘கசட தபற’

சினிமா, திரைத் துளி
‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் பார்த்ததும் அது ஆன்தாலஜி (Anthology) வகை படமாக இருக்குமோ என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. அதை மறுக்கும் இயக்குநர் சிம்புதேவன், "எங்கள் திரைப்படமானது இந்த வகையைச் சார்ந்ததாக இருக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆன்தாலஜி என்பது ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பு. ஆனால் கசட தபற ஒரு கதை, ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு படம்" என்றார். மேலும் படத்தைப் பற்றிக் கூறும்போது, "ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் என ஒவ்வொருவருமே நடிப்பில் தனித்துவமான ஸ்டைலைக் கொண்டிருப்பவர்கள். கூடுதலாக, இவர்கள் யாருமே அவசர அவசரமாக எந்தப் படங்களையும் ஒப்புக் கொள்வதில்லை. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கடுமையான...