Shadow

சினிமா

ரோகிணி – மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்

ரோகிணி – மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்

சினிமா, திரைத் துளி, மற்றவை
பிக் பாஸ் சீசன் - 1 புகழ் ஆரவ் நடிக்க, 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.' எனும் படத்தை இயக்குகிறார் இயக்குநர் சரண். இப்படத்தில், டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார், பட்டாளம் சுந்தரிபாய் எனும் மிரட்டலான பாத்திரத்தில் நடிக்க, ரோகிணியோ காது கேட்காத வாய் பேச முடியாத பாத்திரத்தில் நடித்துள்ளார். ரோகிணி ஏற்று நடித்திருக்கும் லதாம்மா பாத்திரத்தைப் பற்றி இயக்குநர் சரண் குறிப்பிடுகையில், "ரோகிணி, ஆகச் சிறந்த நடிகைகளில் இவருக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு! அவரிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார். அவருடனான உரையாடல்கள், காட்சி விவரங்களைக் கூட அதன்பின் சைகை மொழியிலேயே என்னைச் சொல்லப் பணித்தார். கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருடன் பயிற்சிப் பட்டறையாக அது விரிவடைந்தது. படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி புரி...
கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

சினிமா, திரைச் செய்தி
4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். "காமெடியை எப்படிக் கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குநர் சாம் ஆண்டன். யோகி பாபு இரவு பகலாகத் தூங்கக் கூட நேரமே இல்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் இந்தப் படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய 'முகம்' இந்தப் படத்தைக் காப்பாற்றும்" என்றார் நடிகர் மனோபாலா. ட்ரெய்லரில் ஒரு காட்சி வரும். 'என் முகம் என்ன...
கிழக்கு கடற்கரை சாலையில் – 10 திரைகளுடன் பிவிஆர் சினிமாஸ்

கிழக்கு கடற்கரை சாலையில் – 10 திரைகளுடன் பிவிஆர் சினிமாஸ்

சினிமா
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான பிவிஆர் சினிமாஸ் உத்தண்டியில் உள்ள ஒரு மாலில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிப்ளெக்ஸைத் திறந்திருக்கிறது. வாடிக்கையாளர் மைய அணுகுமுறையின் விரிவாக்கமாக, இந்தப் புதிய மல்டிப்ளெக்ஸில் குழந்தைகளுக்கென்றே பிரத்தியேகமாக PVR Play House என்ற ஒரு புதிய திரையரங்கை வடிவமைத்திருக்கிறது. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கண்டிராத ஆடம்பர அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த மல்டிப்ளெக்ஸ். இந்த மல்டிப்ளெக்ஸ் உடன் சேர்த்து தமிழ்நாட்டில் 13 இடங்களில் 83 திரைகளும், தென்னிந்தியாவில் 43 இடங்களில் 268 திரைகளும் கொண்டு பிவிஆர் முதன்மையாக விளங்குகிறது. அழகிய கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த மல்டிப்ளெக்ஸ் 51,682 சதுர அடி பரப்பளவில் 1400 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில...
தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

சினிமா, திரைச் செய்தி
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தும்பா'. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடும். "நாங்கள் வசனம் எழுதும்போது, எந்தக் கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீனா எல்லோருமே அதன் சாராம்சம் குறையாமல் பேசியிருக்கிறார்கள். எங்கள் எல்லோருக்கும் இந்தப் படத்தின் மூலம் ஒரு புது முகவரி கிடைக்கும் என நம்புகிற...
கதிர், சூரி கலந்த சர்பத்

கதிர், சூரி கலந்த சர்பத்

சினிமா, திரைத் துளி
7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்'. அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில், 'சர்பத்' படத்தின் நாயகனாகப் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா ஃபேமிலி என்டெர்டெயின்மென்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமிரா மேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசையமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்...
‘ஒழுக்கம் வேண்டும் விஷால்!’ – அருண்பாண்டியன் சாடல்

‘ஒழுக்கம் வேண்டும் விஷால்!’ – அருண்பாண்டியன் சாடல்

சினிமா, திரைச் செய்தி
சினிமா உலகில் சிறிய படம், பெரிய படம் என்ற வேறுபாடு நட்சத்திரங்களையும் பட்ஜெட்டையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தின் வெற்றியைப் படத்தின் தரம் தான் தீர்மானிக்கிறது. அப்படியொரு தரமான படமாக தெளலத் படத்தைத் தயாரித்து இருக்கிறார் M.B.முகம்மது அலி. சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடித்துள்ளார். படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழு உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசியதாவது, "பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டும் பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும். இந்தப் படத்தின் தலைப்பு டெளலத். டெளலத் என்றால் உருது மொழியில் செல்வம் என்று பொர...
சிறகு விரித்த அரோல் கரோலியின் இசை

சிறகு விரித்த அரோல் கரோலியின் இசை

சினிமா, திரைத் துளி
பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் நிவாஸ் ஆதித்தன், "என்னுடைய ஃபிலிம் கேரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப் படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது” என்றார். டாக்டர் வித்யா, "23 வருசமா நான் மருத்துவரா இருக்கிறேன். ஆக்டிங் எனக்கு பெரிய பேஷன். எதாவது செஞ்சாகணும்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இந்தப் படத்துல ரொம்ப நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறேன். தயாரிப்பாளர் மாலா மணியன் மேடம் எங்களை தன் ஃபேமிலி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அதே மாதிரி தான் குட்டி ரேவதி மேடமும். இந்தப் படத்துல நடிச்சிருக்கோம் என்பதை விட எங்கள...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்யும் சிவாவிடமும் விக்கியிடமும், ஜிப்பா போட்ட ஒரு பணக்காரர் மூன்று டாஸ்குகளை முடித்தால், அவர்கள் எதிர்பார்க்கும் பணத்தைக் கொடுத்துக் கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என வாக்கு கொடுக்கிறார். அந்த மூன்று டாஸ்க்கள் என்ன, அதை எப்படி அவர்கள் முடிக்கின்றனரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. 'ப்ளாக் ஷீப்' யூ-ட்யூப் சேனலில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ள படக்குழு. படத்திலும் அதன் தொடர்ச்சியாக, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்ற யூ-ட்யூப் சேனல் நடத்துபவர்களாக பிரதான கதாபாத்திரம் இருவரையும் வடிவமைத்துள்ளனர். படத்தின் இடைவேளைக்கு முன்பு, ஓர் அமைச்சர் டாஸ்மாக் கடையை மூட உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு காட்சி வரும். அது வரை அமெச்சூர்களின் கன்னி முயற்சியில் வந்து சிக்கிக் கொண்டோம் என எரிச்சலுடன் நெளிய வைக்கிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் அடிக்கும் ஓபியையும், மொக்கையையும் மருந்துக்கும்...
சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளையர்கள் வங்கியைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓட, அவர்களை விரட்டுகின்றனர் கோவைக் காவல்துறையினர். கொள்ளையர்கள் R.S.புரத்திற்குள் நுழைய, அந்த ஏரியாவிற்குள் யாரும் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளிருப்பவர்கள் வெளியே வரமுடியாதளவும் சுற்றி வளைக்கிறது காவல்துறை. காவல்துறையின் பிடியில் குற்றவாளிகள் சிக்கினரா என்பதுதான் படத்தின் கதை. கொள்ளையர்கள் பணத்தைத் திருடும் வங்கி, ஒரு மாலின் (mall) மாடியில் இருக்கிறது. நான்கு பேரில் ஒருவன் கூட, வாகனத்தில் தப்பியோடத் தயார் நிலையில் காத்திருக்காமல் ஏன் அப்படியொரு சொதப்பலான திட்டத்தைத் தீட்டினர் எனத் தெரியவில்லை. காரில் இருவர் தான் ஏறுகின்றனர். போலீஸைத் தவிர்க்க அந்தக் கார், பார்க்கிங்கில் இறங்கியதும், மீதமுள்ள இருவர் அங்கு வந்து ஏறிக் கொள்கின்றனர். இப்படியான காட்சிகள், என்ன ஏது என உள்வாங்கிக் கொள்ளும் முன், தடதடவெனக் காட்சிகள் வேகமாய் ஓடுகிறது. திருடர்கள் ஓடுகி...
சிறகின் பயணம் டேக்-ஆஃப் ஆகியது

சிறகின் பயணம் டேக்-ஆஃப் ஆகியது

சினிமா, திரைத் துளி
ஒரு வரியிலே பெரு வலியைப் பெரும் மகிழ்வைக் கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், "தனிமைச் சிறகினிலே" என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நேற்றிலிருந்தே சிறகு சரியான திசையை நோக்கி பறக்கத் துவங்கி விட்டது. அந்தப் பறத்தலின் பயணம் அடுத்தக் கட்டத்தை அடையும் விதமாக படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அரோல் கரோலி இசைyaமைத்துள்ளார். படம் தாங்கி நிற்கும் கதைக்கு இசை உயிர் கொடுத்துள்ளது என்று தெரிகிறது. மெட்ராஸ், கபாலி, வடசெ...
தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என்ன செய்யும் என்ற முதல் பாகத்தின் கதைதான், கலகலப்பான இரண்டாம் பாகத்தின் கதையும். மேக்ஸ், ட்யூக், கிட்ஜெட், ஸ்னோ பால் என தி சேக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் படத்தில் வந்த பிரதான கதாபாத்திரங்கள் அப்படியே வருகின்றன. மேக்ஸையும், ட்யூக்கையும் வளர்க்கும் கேட்டிக்குக் கல்யாணமாகி, லியாம் எனும் குழந்தையும் பிறக்கிறது. கைக்குழந்தையான லியாமிடம் மேக்ஸ் படும்பாடு கொஞ்சம் நஞ்சமில்லை. பின், லியாம் கொஞ்சம் வளர்ந்ததும், அவர்களுக்குள் பிரிக்கவியலாப் பந்தம் உருவாகிறது. குழந்தைகளுக்கும், செல்லப்பிராணிகளுக்குமான உறவு மிகவும் அலாதியானவை. படம் முடிந்ததும், சில அழகான லைவ் ஃபூட்டேஜையும் போட்டு அசத்துகின்றனர். படத்தில் மொத்தம் மூன்று கிளைக்கதைகள். கேட்டி தனது குடும்பத்தோடு ஒரு பண்ணை வீட்டுக்குச் சுற்றுலா போக, பயந்தாங்கொள...
கேம் ஓவர் விமர்சனம்

கேம் ஓவர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் போராடும் தைரியத்தை இழந்தாலே, விளையாட்டு முடிந்துவிடும். அதன் பின்னான வாழ்க்கை உயிரிருந்தும், இருளுக்குள் சிக்கிய நரகமாகவே இருக்கும். ஸ்வப்னாவின் வாழ்க்கை அத்தகைய இருளில் மூழ்கிவிடுகிறது. 2018 ஆம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியில் செல்லும் ஸ்வப்னா, நண்பனால் துரோகம் இழைக்கப்பட்டு தன் தைரியத்தை இழந்து தனக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்கிறாள். கேம் ஓவர் என்ற நிலையில் இருந்து, எப்படி அவள் மீண்டும் வாழ்க்கைக்குள் புகுகிறாள் என்பதுததான் படத்தின் கதை. நயன்தாரா நடித்த மாயா (2015) படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன், இப்படத்தை இயக்கியுள்ளார். இது அவரது மூன்றாவது படம். எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நடிப்பில் உருவான இறவாக்காலம் இன்னும் வெளியாகாதது துரதிர்ஷ்டமான ஒரு விஷயம். முதற்படத்தில், அவர் எப்படி பார்வையாளர்களைக் கட்டிப் போட்டாரோ, அதே போலவே, இப்படத்திலும் கட்டிப் போட்டுள்ளார். ‘ர...
“விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை யோசித்தே எழுதினேன்” – சிந்துபாத் இயக்குநர்

“விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை யோசித்தே எழுதினேன்” – சிந்துபாத் இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜராஜன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று, “இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த சிந்துபாத்தின் பயணம் தொடங்கியது. இதனை இயக்குனர் அருண்குமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எங்கள் குழு மீது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முழு நம்பிக்கை வைத்தார். அதனை அனைவரின் ஒத்துழைப்புடன் காப்பாற்றி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறோம். விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகவும் கடினமாக உழைத்த படம் இது தான். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் க...
சிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா

சிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா

சினிமா, திரைச் செய்தி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “இயக்குநர் அருண் உடன் பணியாற்றும் போது ஒவ்வொரு பாடல்களையும் ஒரு எமோஷனை கனெக்ட் செய்திருப்பார். அது ரசிகனாகப் பார்க்கும்போது நன்றாக இருக்கும். இந்தப் படத்தின் பின்னணி இசையை நான் மிகவும் அனுபவித்து பணியாற்றினேன். எல்லாப் பாடல்களும் ரசித்து உருவாக்கியவை. என்னுடைய ட்விட்டரில் கூட அண்மையில் நான் இசையமைத்த படத்தில் சிந்துபாத் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்று ட்வீட் செய்திருந்தேன். சில ஆல்பங்களில் பணியாற்றும் போது...