32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 241 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 241)
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் விமர்சனம் சினிமா

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் விமர்சனம்

சிம்புதேவன் இயக்கம் என்ற எதிர்பார்ப்புடன் செல்பவர்களை ஏமாற்றாமல், தனது நேர்த்தியான திரைக்கதையால் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்துள்ளார் இயக்குநர். நேரத்துக்கும் விதிக்கும் தொடர்புள்ளதா என நாரதருக்கு ஒரு சின்ன சந்தேகம். உலகின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிஸியாகிட்டேன் எனச் சொல்லும் பிரம்மா, தன் வேலையெல்லாம் விட்டுவிட்டு சிவபெருமானிடம் அந்தக் கேள்வியைக் கொண்டு செல்கிறார். நேரத்துக்கும் விதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என நாரதருக்கு சிவபெருமான் ‘லைவ் ஷோ’ காட்டி விளக்குவதுதான் படத்தின் கதை. இசபெல்லாவை, அவளது திருமணத்தன்று கடத்த திட்டமிடுகிறான் […]

04/04/2014 Dinesh R
ஓல்ட் பாய் (2003) அயல் சினிமா

ஓல்ட் பாய் (2003)

‘பழிக்குப் பழி’ என்ற கதைக்கரு கொண்ட தென் கொரியத் திரைப்படம் இது. ஆனால், கண்ணுக்குக் கண், இரத்தத்திற்கு ரத்தம் என நாம் வழக்கமாக யூகிப்பது போன்ற கதையம்சம் கொண்ட படமில்லை. படம் மனிதனின் பழி வாங்கும் மனநிலையை மட்டும் பேசாமல், தான்வகுத்த சமூகக் கட்டுபாடுகளுக்குத் தன்னை எந்தளவுக்கு ஒப்படைத்துள்ளான் என்பதையும் நுணக்கமாகச் சித்தரிக்கிறது. ஒரு மனிதனைப் பதினைந்து வாருடங்கள் தனியாக ஓர் அறையில் அடைத்து வைத்தால் அவன் மனநிலை எப்படியிருக்கும்? ஓ-டேசு என்பவரை ஓரிரவு கடத்தி விடுகின்றனர். அவரது […]

02/04/2014 Dinesh R
பெரும் விருட்சத்தின் விழுது நான் – ‘பத்மபூஷன்’ கமல் சினிமா

பெரும் விருட்சத்தின் விழுது நான் – ‘பத்மபூஷன்’ கமல்

ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத் தந்தது. இத்தகைய விழாக்களை நடத்தவேண்டிய அவசியமென்ன என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது. எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டுமன்று. என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டுமொரு குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன். தேசிய கீதம் இசைத்த பொழுது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சத்தின் […]

31/03/2014 Dinesh R
49ஓ – மழைப் பாடல் சினிமா

49ஓ – மழைப் பாடல்

மழைதான் நம் வாழ்வின் ஆதாரம் என்பதைக் குறிக்கும் வகையில் 49ஓ படத்தின் பாடல் ஒன்று இசையமைப்பாளர் கே இசையில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில், “பொண்ணுங்களே இப்படித்தான்” என்ற பாடலைப் பாடிக் கவர்ந்த ஜெயமுர்த்தியின் குரலில், யுக பாரதியின் அருமையான வரிகளில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. திரையில் கவுண்டமணி விவசாயியாகத் தோன்றி மழை வேண்டிப் பாடும் இப்பாடல் (சிங்கிள் ட்ராக்), இந்த மாதம் இறுதியில் 31ஆம் தேதி, ரேடியோ மிர்ச்சியில் வெளிவர உள்ளது. விரைவில் இந்தப் படத்தின் […]

29/03/2014 Dinesh R
பாடகி கீர்த்திகா சினிமா

பாடகி கீர்த்திகா

நடிகர் உதயாவின் மனைவியும், ‘ரா ரா’ படத்தின் தயாரிப்பாளருமான கீர்த்திகா உதயா, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘இனம்’ படத்தின் நாயகிக்கு மூன்று மொழிகளில், பின்னணிக் குரல் ¬¬கொடுத்திருக்கிறார் கீர்த்திகா உதயா. இப்படத்திற்கு முன்னதாக விஜய் இயக்கத்தில் வெளிவந்தா ‘தாண்டவம் படத்திற்காக நடிகை லட்சுமி ராய்க்கும், ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள ‘நான்தாண்டா’ படத்திற்காக நாயகி அனைகாவிற்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தற்போது, ‘ஒரு கன்னியும் மூணு […]

27/03/2014 Dinesh R
விஞ்ஞானி வித்யா சினிமா

விஞ்ஞானி வித்யா

தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் நடிகர்களாக அறிமுகமாவது உண்டு. அந்த வகையில் நடிகைகள் அவ்வளவாக வருவது இல்லை. ஆனால் சமீபமாக பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் நடிகைகளாக அறிமுகம் ஆகிறார்கள். இயக்குநர் விஜய் இயக்கத்தில், Think Big ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘சைவம்’ படத்தின் மூலம் மிக முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகும் வித்யா ஒரு விஞ்ஞானி ஆவார் . ‘வித்யா நடிப்பின் மீதான தன்னுடைய அணுகு முறையில் மிகவும் கவனத்துடன் இருந்தார். திரை உலகின் நுணுக்கங்களைக் கற்றுக் […]

26/03/2014 Dinesh R
எக்ஸ்-மேன் 2014 சினிமா

எக்ஸ்-மேன் 2014

இந்த வருடத்தின் மிகப் பெரிய கோடைக்காலத் திரைப்படம் ‘கடந்த காலத்தின் எதிர் காலம்’. வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் X Men- Days of Future past தமிழில் ‘கடந்த காலத்தின் எதிர்காலம்’ என்ற பெயரில் மே மாதம் 23ஆம் தேதி வெளியிடப்படுகிறது . ஆங்கிலம் , ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடப்படும் இப்படம் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாகும் . சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் வெள்ளோட்டம் உலகமெங்கும் மிகப் […]

26/03/2014 Dinesh R
‘நண்பேன்டா’ அனிருத் சினிமா

‘நண்பேன்டா’ அனிருத்

யுவன் சந்திரசேகர் ஷெட்யூல் ரொம்ப டைட்டாக இருந்ததால், வடகறி படத்திலிருந்து ஒரே ஒரு மெலடியுடன் விலகிக் கொண்டுள்ளார். படத்தை விரைவாக முடிக்க வேண்டுமென்பதால், படத்தில் வேறு இசையமைப்பாளரை உபயோகிக்கவும் யுவன் முழுமனதுடன் சம்மதித்துள்ளார். இந்நிலையில் அனிருத், வடகறி படத்தில் இசையமைக்க 22 வயதாகும் தனது நண்பர் விவேக் சிவாவைப் பரிந்துரைத்துள்ளார். கிளாச்சிகல் மியூசிக் பயின்ற விவேக் சிவா, அனிருத் இசையமைத்த 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டம் உலகம், வேலை இல்லா பட்டதாரி போன்ற படங்களில் சவுண்ட் […]

24/03/2014 Dinesh R
‘பளபள’ சந்தானம் சினிமா

‘பளபள’ சந்தானம்

பி.வி.பி. சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் (Hand made films) தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் ரசிகர்களின் மத்தியிலும், திரையுலக பிரமுகர்கள் குறிப்பாக சந்தானத்தின் பரந்த கதாநாயகர்கள் நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் இருந்து வரும் பாராட்டு அவரை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த்திரையுலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து, அவர்களுக்கு நண்பனாகவே மாறி விட்ட சந்தானத்துக்கு அவர்களின் பாராட்டு மிகவும் ஊக்கம் தந்து இருக்கிறதாம். […]

24/03/2014 Dinesh R
பனிவிழும் நிலவு விமர்சனம் சினிமா

பனிவிழும் நிலவு விமர்சனம்

காதல், ஊடல், பின் இணைதல்தான் படத்தின் கதை. ‘ஆதியும் அந்தியும்’ படத்தின் இயக்குநர் கெளஷிக்கின் மற்றுமொரு படம். முதல் படத்திற்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? சைக்காலஜிக்கல் த்ரில்லரிலிருந்து எந்த சீரியஸ்னசும் இல்லாத ஜாலியான கதைக்குத் தாவியுள்ளார் கெளசிக். ஜம்போ என்கிற ஜம்புலிங்கமாக வெண்ணிறாடை மூர்த்தி நடித்துள்ளார். நல்லவேளையாக இவரைக் கல்லூரிப் பேராசிரியராக நடிக்க வைக்காமல் போனார் இயக்குநர். ஆனால் தன்னைச் சுற்றியுள்ள ஆண் மம்முட்டிகளால் (மண்வெட்டி) தனக்கு ஏதேனும் சேதாரமாகிவிடுமோ என்ற திகிலுடனுள்ள கதாப்பாத்திரம். படத்தின் முதற்பாதியைத் […]

23/03/2014 Dinesh R
முடி துறந்தார் நாசர்! சினிமா

முடி துறந்தார் நாசர்!

நடிப்பில் தனக்கென தனி ஒரு பாணியை வகுத்து வைத்துள்ள நாசர், தன்னுடைய கதாபாத்திரம் சோபிக்க எந்த விதமான முயற்சியும் மேற்கொள்வார் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு. இதோ மற்றொன்று. சமீபத்தில் இயக்குநர் விஜயின் ‘சைவம்’ படப்பிடிப்பின் போது, அவர் ஏற்று நடித்துள்ள ஒரு முதியவர் கதாபாத்திரத்துக்கு என்று பிரத்தியேகமாக சிகை அலங்காரத்தில் ஒரு மாற்றம் செய்ய வேண்டி இருந்தது. அவரது முன் தலையில் ஒரு பகுதியை சவரம் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை. இதனால் அவர் தற்போது […]

22/03/2014 Dinesh R
கேரள நாட்டிளம் பெண்களுடனே விமர்சனம் சினிமா

கேரள நாட்டிளம் பெண்களுடனே விமர்சனம்

டைட்டில் போடும் பொழுதே கொண்டாட்டம் தொடங்கி விடுகிறது. அந்தக் கொண்டாட்டத்தை படம் முடியும் பொழுதும் உணர விடுகிறது. கேரளப் பெண்ணைதான் மணக்க வேண்டுமென சொல்லிச் சொல்லி தன் மகனை வளர்க்கிறார் தமிழ்மணி. அவரது மனைவியோ, தமிழ்ப் பெண்ணை தான் மகன் மணக்க வேண்டும் என பிடிவாதமாக உள்ளார். அவர்களது மகன் உன்னி கிருஷ்ணன் எந்த மாநிலத்துப் பெண்ணை மணந்தார் என்பதுதான் படத்தின் கதை. கலைமாமணி பேராசிரியர். முனைவர். திரு. கு.ஞானசம்பந்தன் என அவர் பெற்ற விருது, செய்யும் […]

22/03/2014 Dinesh R
எடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை சினிமா

எடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை

கிரிக்கெட் நமது நாட்டில் மதத்தை போல் இன்றியமையாதது என்று கூறப்படுகிறது. அத்தகைய கிரிக்கெட் விளையாட்டை தமிழ் நாட்டுக்காக விளையாடிய லக்ஷ்மி ப்ரியா சந்திர மௌலி இப்போது ‘கள்ளப்படம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மனிதவள மேம்பாட்டுத் துறையில் மேற்படிப்பு முடித்த, தமிழ் பேசும் சென்னைவாசியான லக்ஷ்மி ப்ரியா ஆர்வத்தின் பேரில் தியேட்டர் பிளேஸ் (theatre plays) நடித்தும் வருகிறார். சமீபத்தில் ‘கள்ளப்படம்’ படப்பிடிப்பின் போது இயக்குநர் வடிவேல் ஒரு சில காட்சிகளுக்காக லக்ஷ்மி ப்ரியாவை ஒரு சில கிலோ […]

22/03/2014 Dinesh R
குக்கூ விமர்சனம் சினிமா

குக்கூ விமர்சனம்

எளிய மனிதர்களின் வாழ்க்கை பற்றிய படம் தமிழில் அரிதினும் அரிதாகவே வருகிறது. அப்படியொரு அரிதான படம் குக்கூ. பார்வையற்ற இருவருக்குள் மலரும் கலர்ஃபுல்லான காதல்தான் படத்தின் கரு. ‘அட்டகத்தி’ தினேஷ் தமிழாகக் கலக்கியுள்ளார். மூன்று மாதம் பார்வையற்றவர்களுடன் உடனிருந்து அவர்களது உடல்மொழியை அவதானித்து அப்படியே திரையில் பிரதிபலித்துள்ளார். இத்தகைய படத்தில் நடிப்பதைவிட வேறென்ன பேறு ஒரு நடிகருக்குக் கிடைத்துவிட முடியும்? சுதந்திரக்கொடியாக மாளவிகா. நமக்கு வேண்டப்பட்ட ஒரு நபர் போல், அவரை மிக நெருக்கமாக உணரச் செய்கிறது […]

21/03/2014 Dinesh R