32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 242 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 242)
யாசகன் விமர்சனம் சினிமா

யாசகன் விமர்சனம்

படத்தில் யாரும் யாரிடமும் எந்த யாசகமும் பெறவில்லை. பின் படத்திற்கு ஏன் இந்தத் தலைப்பு எனத் தெரியவில்லை. அனைவருக்கும் தேடிச் சென்று உதவிச் செய்யும் நாயகன், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் கேட்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை. கொஞ்சம் தாடியுடன் அதிகம் சிரிக்காத சூர்யாவாக நடித்துள்ளார் நாயகன் மகேஷ். வேலைக்கு இன்ட்டர்வியூக்குச் செல்லும் பொழுதுகூட, அவரது உடையிலும் முகத்திலும் பெரிய மாறுதல் ஏற்படுவதில்லை. சிரிக்கும் ஒன்றிரண்டு காட்சிகளில்கூட சோர்வாகவே காணப்படுகிறார். ‘அங்காடித் […]

21/03/2014 Dinesh R
விஜய் சேதுபதியின் மெல்லிசை சினிமா

விஜய் சேதுபதியின் மெல்லிசை

வித்தியாசமான கதைக்களங்களில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி , சமீபத்தில் தான் கேட்டு வியந்த கதை என்று எல்லோரிடமும் பாராட்டும் ‘மெல்லிசை’ படத்தின் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி. இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இவர் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘நவீனமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலைச் சொல்லும் கதை. இந்த நகரத்தை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.  இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். […]

19/03/2014 Dinesh R
‘சிலந்தி’ வில்லனின் “மது மாது சூது” சினிமா

‘சிலந்தி’ வில்லனின் “மது மாது சூது”

“சிலந்தி” படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் சந்துரு. இவர் ராஜஷந்ரு (Rajashanthru) என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருப்பதுடன். “மது மாது சூது (Madhu Maadhu Soodhu)” என்ற படத்தைத் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகிகளாக பெங்களூரைச் சேர்ந்த மாடல் சந்தனா மற்றும் சென்னையைச் சேர்ந்த விக்னேஷா அறிமுகமாகிறார்கள் மற்றும் நிறைய புதுமுக நடிகை, நடிகர்கள் அறிமுகமாகிறார்கள் இப்படத்தைப் பற்றி ராஜஷந்ரு, “போதைக்கு அடிமையான ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. […]

17/03/2014 Dinesh R
காதல் சொல்ல ஆசை விமர்சனம் சினிமா

காதல் சொல்ல ஆசை விமர்சனம்

நாயகன் தன் காதலை நாயகியிடம் சொன்னானா என்பதுதான் படத்தின் கதை. வாழையடி வாழையாக மகேஷின் குடும்பத்தினர் போலீஸ் வேலையில் இருக்கிறார்கள். மகேஷிற்கு அவ்வேலையில் விருப்பமில்லாததால் வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடுகிறான். காதலுக்காக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அடியாளாகச் சேருகிறான். மமேஷாக அஷோக் நடித்துள்ளார். நன்றாக நடித்திருந்தாலும் அவரது முந்தைய படங்கள் போல் இதுவும் அவருக்கு பெயர் வாங்கித் தருவது கடினம்தான். சுசித்ராவாக வாஸ்னா அகமத் நடித்துள்ளார். நாயகன் வில்லனிடமிருந்து தன்னைக் காப்பாற்றியதும் காதலிக்கத் தொடங்குகிறார். பார்த்துப் […]

16/03/2014 Dinesh R
ஒரு மோதல் ஒரு காதல் விமர்சனம் சினிமா

ஒரு மோதல் ஒரு காதல் விமர்சனம்

நாயகனின் முதல் காதல் ஏமாற்றத்திலும், அடுத்த காதல் கல்யாணத்திலும் முடிகிறது. நாயகனாக விவேக் ராஜகோபால். எந்தக் கவலையுமற்ற ஜாலியாக சுத்திச் சுத்தி வரும் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். பெரும்பாலான காட்சிகளில் சிரித்தவண்ணமே உள்ளார். ஆனால் அந்த உற்சாகம் பார்வையாளர்களுக்கு ஏற்படவில்லை என்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறையே! அதேபோல் முதல் காதலி காவல் நிலையத்தில் வைத்து ஏமாற்றிவிட, நாயகன் செம சோகமாகிவிடுகிறார். எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாத நாயகன் நிஜமாகத்தான் காதலித்திருப்பாரா என சந்தேகம் நமக்கு தீரும் […]

15/03/2014 Dinesh R
ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் சினிமா

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்

1965 இல் வெளியான ஒரு படம் இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்குமா? இன்னும் 50 வருடங்களுக்குப் பின் வெளியானாலும் கண்டிப்பாக பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் எவர்-க்ரீன் என்ட்டர்டெயினர்களில் இப்படமும் ஒன்று. நெய்தல் நாட்டு மருத்துவர் மணிமாறனையும் அவருடன் பலரையும், அந்நாட்டு கொடுங்கோல் சர்வாதிகாரி கன்னித் தீவில் அடிமைகளாக விற்றுவிடுகிறார். மணிமாறனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி நெய்தல் நாட்டு சர்வதிகாரியை எதிர்த்து வெற்றி பெற்றனரா என்பதுதான் படத்தின் கதை. சர்வதிகாரம், அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலை […]

15/03/2014 Dinesh R
கமலின் உத்தமனும் மனோரஞ்சனும் சினிமா

கமலின் உத்தமனும் மனோரஞ்சனும்

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் பாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார். மனோரஞ்சனைக் கண்டெடுத்த நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குநராக K.பாலசந்தர் அவர்களும் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக திரு.K.விஸ்வநாத்தும், 8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாறும், 21ஆம் நூற்றாண்டுக் கமலின் ரகசியக் காதலியாக ஆண்ட்ரியா ஜெரமியாவும் நடிக்கின்றனர். முத்தரசன் […]

15/03/2014 Dinesh R
ஆதியும் அந்தமும் விமர்சனம் சினிமா

ஆதியும் அந்தமும் விமர்சனம்

ஒரு பிரச்சனையின் அந்தத்தை படத்தின் முதற்பாதியிலும், அதன் ஆதியை படத்தின் இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். டாக்டர் கரண் உதகமண்டலத்திற்கு ஒரு மெடிக்கல் ரிசர்ச் ஃபெளண்டேஷனில் பணியில் சேர வருகிறார். அவர் தங்கும் அறையில், தினம் இரவு 1 மணிக்கு ஒரு பெண்ணின் உருவம் வந்து அவரை அலைகழிக்கிறது. யார் அந்தப் பெண், ஏன் எதற்காக அலைக்கழிக்கிறாள் என்பதுதான் படத்தின் கதை. இடைவேளை வரையிலான படம் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் போகிறது. L.V.கணேசனின் பின்னணி இசையும் D.S.வாசனின் ஒளிப்பதிவும் படத்தின் […]

14/03/2014 Dinesh R
“விஷால் கருப்பு மனிதன்தான!?” சினிமா

“விஷால் கருப்பு மனிதன்தான!?”

“விஷால் நடிக்கணும்னு ரொம்ப விருப்பப்பட்டது என் மனைவிதான். ‘அவன் இவன்’ பார்த்த பிறகு.. நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். நீ ரொம்ப நல்ல நடிக்கிறன்னு அவன்கிட்ட சொன்னேன். ஸ்டெப் பை ஸ்டெபாக அவன் கோலை (goal) அச்சீவ் பண்றான். அனைவரிடமும் நட்பாகப் பழகுகிறான். இவன் எல்லோரையும் லைக் பண்றான். இவனை மத்தவங்களுக்குப் பிடிக்குது. ரொம்ப சந்தோஷமான அப்பாவாக உணர்கிறேன். ‘நான் சிகப்பு மனிதன்’ என படம் பண்றேன்னு சொன்னான். “நீ எப்படி சிகப்பு மனிதன்? நீ கருப்பு மனிதன்தான?” […]

13/03/2014 Dinesh R
“என்னைப் பழிவாங்குகிறார் விஷால்” – இயக்குநர் பாலா சினிமா

“என்னைப் பழிவாங்குகிறார் விஷால்” – இயக்குநர் பாலா

‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார் விஷால். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் அதீத துக்கமோ, மகிழ்ச்சியோ, பயமோ ஏற்பட்டால் தூங்கி விழுந்து விடுவார் விஷால். “எனக்கு இந்த நோயோடு சீரியஸ்னஸ் தெரியும். ஏன்னா என்னுடைய அசிஸ்டென்ட்க்கு இந்தப் பிரச்சனை இருந்தது. போய் பேப்பர் எடுத்துட்டு வரச் சொல்லி அனுப்பினா.. அங்க போய் தூங்கிடுவான். டிஸ்கஷன்ல இருக்கும் பொழுது தூங்கிடுவான். இதனால அவன் ஒரு ஆக்ஸ்டென்ட்ல மாட்டி, 2 மாசம் […]

13/03/2014 Dinesh R
“லக்ஷ்மி மேனனைப் பாதுகாக்கும் விஷால்” – விஷ்ணு குற்றச்சாட்டு சினிமா

“லக்ஷ்மி மேனனைப் பாதுகாக்கும் விஷால்” – விஷ்ணு குற்றச்சாட்டு

“’பாண்டிய நாடு’ படத்தில் விக்ராந்துக்கும் விஷாலுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாயிருந்தது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் லட்சுமி மேனனை மட்டும் மீண்டும் நடிக்க வச்சிருக்கார். விக்ராந்தை ஏன் கூப்பிடலைன்னு தெரியலை. அவர் ரொம்ப வருத்தப்பட்டார். சரி கவலைப்படாத.. அனைவருக்கும் முன் கேட்டுடலாம் சொல்லி இப்போ நான் கேட்டுட்டேன். விஷால் இதற்கு பதில் சொல்வார்னு எதிர்பார்க்கிறேன். ‘பாண்டிய நாடு’ ஷூட்டிங்கின் பொழுது, எனக்கும் ஷூட் போயிட்டிருந்தது. என்னால செட்டுக்குப் போய் லட்சுமி மேனனைப் பார்க்க முடியலை. இந்தப் படத்திலாவது எப்படியாவது […]

13/03/2014 Dinesh R
டிஜிட்டல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ சினிமா

டிஜிட்டல் ‘ஆயிரத்தில் ஒருவன்’

திவ்யா பிலிம்ஸ் உரிமையாளராகிய சொக்கலிங்கம் ஆகிய நான் என்னை ஊக்குவித்த அனைத்து பத்தரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, ‘கர்ணன்’ என்ற மாபெரும் மகாபாரதக் காவியத்தினை ‘ரெஸ்டோரேஷன்’ மற்றும் ‘டிஐ – டிடிஎஸ்’ (Restoration, DI & DTS) எனும் நவீன தொழில்நுட்பத்தினை இன்றைய இளைஞர்களுக்கு தேவைப்படும் வகையில் செய்ததின் வாயிலாக, அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதற்கு முக்கிய காரணம் பத்திரிகை நண்பர்களும், […]

12/03/2014 Dinesh R
முதல்வரின் வாழ்த்துச் செய்தி சினிமா

முதல்வரின் வாழ்த்துச் செய்தி

‘திவ்யா பில்ம்ஸ்’ திரு.G.சொக்கநாதன் அவர்களுக்கு, திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வியல் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். எனவேதான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆய்வாளர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல; தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் பாடங்கள் என்று போற்றுகின்றனர். புரட்சித் தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் […]

12/03/2014 Dinesh R
மதயானைகளால் அழிக்க முடியாத சிங்கம் சினிமா

மதயானைகளால் அழிக்க முடியாத சிங்கம்

‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தில், அழிக்க முடியாத சிங்கமாக நடிக்கிறார் சத்யா. இவர் ஆர்யாவின் தம்பி. ஏற்கெனவே ‘புத்தகம்’ படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். எனினும் இந்தப் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டு நடித்திருக்கிறாராம். ஜாலியான நபராக முதற்பாதியில் வருபவர் இரண்டாம் பாதியில் காவல்துறை அதிகாரியாக முறுக்கேறி வருகிறார். இந்தப் படம், சத்யாவிற்குள் இருக்கும் நடிகனை அடையாளம் காட்டும் என நம்பிக்கை தெரிவித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.தங்கசாமி. ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ என தனது முதற்படத்தின் பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் கே.எஸ்.தங்கசாமி. […]

12/03/2014 Dinesh R
குக்கூ – கோடையில் மழை போல்! சினிமா

குக்கூ – கோடையில் மழை போல்!

ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் நெக்ஸ்ட் பிக்ஃபிலிம் இணைந்து தயாரித்து இருக்கும் ‘குக்கூ’ என்ற திரைப்படத்திற்கு தணிக்கைதுறை ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அட்டகத்தி புகழ் தினேஷ் புதுமுகம் மாளவிகா இணைந்து நடித்திற்கும் திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர் ராஜூமுருகன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், P.K.வர்மா ஒளிப்பதிவில், சண்முகம் வேலுசாமி படத்தொகுப்பில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. தணிக்கைத்துறை அதிகாரிகளால் பாராட்டப்பட்ட இத்திரைப்படம் ‘கோடையில மழ போல’ மார்ச் 21 – ஆம் தேதி திரைக்கு வருகிறது.

12/03/2014 Dinesh R