Shadow

திரைச் செய்தி

 “சைந்தவ்” – உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சி

 “சைந்தவ்” – உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சி

சினிமா, திரைச் செய்தி
Hit 1, 2,3 திரைப்பட வரிசை மூலம் புகழ் பெற்ற இயக்குநரான சைலேஷ் கொளனு இயக்கத்தில், ஷியாம் சிங்க ராய் படத்தைத் தயாரித்த  வெங்கட் போயனப்பள்ளியின் தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்  வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி சர்மா, சாரா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் “சைந்தவ்”.முதன்முதலாக வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படம், நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் 75வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. “சைந்தவ்” திரைப்படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் மிகப் பெரும் பொருட்செலவில் எந்தவொரு சமரசமும் இன்றி உருவாக்கி வருகிறது.சமீபத்தில் “சைந்தவ்” படத்தின் உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சியை 8 முக்கிய நடிகர்களை உள்ளடக்கி கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் 16 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, முடித்து வெற்றிகரமாக திரு...
“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு

“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
ஜவான்” படத்தின்  மீதான  எதிர்பார்ப்பு  உச்சம்  தொட்டிருக்கும்  இந்த வேளையில் “வந்த இடம்” பாடல்,  விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர் வெளியீடு, #AskSRK நிகழ்வு, SRK UNIVERSEன் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 52 நகரங்களில் வெளியிடல் கொண்டாட்டம் , வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிட்டது ஆகியவற்றின் மூலம் “ஜவான்” படத்தை லைம் லைட்டிலேயே வைத்திருக்கும் படக்குழுவினர் தற்போது அடுத்த அஸ்திரத்துடன் வந்துள்ளனர்.Ask SRK நிகழ்வின் போது ஷாருக்கானிடம் ‘ஜவான்’ படத்தில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்று கேள்வி எழுப்பிய போது அவர் “ஹைய்யோடா” என்னும் ரொமாண்டிக் பாடல் தான் இப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக அமைந்துள்ளது என்று பதிலளித்திருந்தார். அப்பொழுது  இருந்தே அப்பாடல் மீதான ஃபீவர் ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டது.தற்போது  “ஹைய்யோடா” பாடலின் டீசரை வெளியிட்டிருக...
ரவிதேஜாவின் ” டைகர் நாகேஸ்வரராவ் ” டீசர் ஆகஸ்ட் 17 அன்று வெளியீடு

ரவிதேஜாவின் ” டைகர் நாகேஸ்வரராவ் ” டீசர் ஆகஸ்ட் 17 அன்று வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
டோலிவுட்டில் மாஸ் மகாராஜாவாக இருந்து வரும் ரவி தேஜாவின் நடிப்பில் முதன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது  “டைகர் நாகேஸ்வரராவ்” திரைப்படம் . நுபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள்.  வம்சி இப்படத்தினை இயக்குகிறார்.  “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” மற்றும் ”கார்த்திகேயா – 2” படங்களைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மேலும்  தேஜ் நாராயண் அகர்வால் இப்படத்தை  வழங்க , மயங்க் சிங்கானியா இணைத் தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார். மேலும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ஒரு தனித்துவமான முறையில் அமைந்திருந்ததாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் தீவிரமடைந்து உள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவ...
‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது.

‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது.

சினிமா, திரைச் செய்தி
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரிகான் தயாரித்திருக்கும் திரைப்படம் “ஜவான்”.  வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.  இதனையடுத்து திரைப்படம் தொடர்பாக விளம்பரப்படுத்துதலில் இறங்கி இருக்கும் தயாரிப்புக் குழுவினர் திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு விசயங்களாக வெளிவிட்டு, “ஜவான்” திரைப்படத்தினை என்றென்றைக்குமான பேசு பொருளாக மாற்றி வருகின்றனர் என்றே சொல்லலாம்.முதலில் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது,  முன்னோட்ட வீடியோ யூ டியூப்பில் சாதனையை சத்தமில்லாமல் படைக்க, அதே சூட்டோடு தமிழில் “வந்த இடம்” என்று தொடங்கும் பாடலை வெளியிட்டனர்.  சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் கிட் அடித்ததை நினைவில் கொண்டு, வந்த இடம் பாடலிலும் லுங்கி அணிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்...
பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

சினிமா, திரைச் செய்தி
சென்ற ஆண்டு சிபிராஜ் நடிப்பில்,  டபுள் மீனிங் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியான “மாயோன்” திரைப்படம் திரைப் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.  நல்ல கதையம்சத்துடன் பொழுதுபோக்கிற்கான விசயங்களை உள்ளடக்கி இருந்த காரணத்தால் குடும்பம் குடும்பமாக  இப்படத்தைப் பார்க்க பொதுமக்கள் வந்தனர். மேலும் 47-வது கனடா டொரண்டோ திரைப்பட விழாவில் புராண இதிகாசப் பிரிவில் “மாயோன்” திரைப்படம் விருதினையும் வென்றது. படத்திற்கு இசையானி இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் பெரும் பலமாக அமைந்திருந்தன.விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்  கதை, அதைக் காட்சிப்படுத்திய அழகியல் போன்ற காரணங்களுக்காகவும் அதன் உள்ளடக்கத்திற்காகவும் ,  புராண இதிகாச த்ரில்லர் வகைத் திரைப்படம் என்கின்ற புதுமையான வகைமைக்காகவும் இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தனித்துவமான...
“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

சினிமா, திரைச் செய்தி
 ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரி கான் தயாரிப்பில் “ஜவான்” திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. ’ஜவான்’  தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய  மொழிகளில்  செப்டம்பர்  7ஆம்  தேதியன்று  உலகம் முழுவதும்  திரையரங்குகளில்  வெளியாகிறது.செப்டம்டர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே படம் குறித்தான வேறு வேறு தகவல்களும், பாடல்களும்,  முன்னோட்ட வீடியோக்களும் வெளியாகி  உலகமெங்கும் இருக்கும் ஷாருக்கான் யூனிவர்ஸ் ரசிகர்களையும் பொதுமக்களையும்  படம் குறித்தான எதிர்பார்ப்புக்குள் விழ வைத்திருக்கிறது.’வந்த இடம்’ பாடல் வெளியாகி அதில் மீண்டும் இடம் பெற்ற லுங்கி தொடர்பான காட்சிகள் பெரும் பரப்புரையைப் பெற்றதோடு இசைப் பாடல்கள் வரிசையில்  ‘வந்த இடம்’ பாடல் முதல் இடத்தையும் பிடித்தது.. அதைத் தொடர்ந்து SRK UNI...
விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா,  ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்க, இவர்களோடு ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும்  இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இ...
52 நகரங்களில் SRK யுனிவர்ஸின் வித்தியாசமான கொண்டாட்டம்.

52 நகரங்களில் SRK யுனிவர்ஸின் வித்தியாசமான கொண்டாட்டம்.

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பாலிவுட்டின் கிங் கான், “ஷாருக்கான்” நடிப்பில்  உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ்  எண்டர்டெய்ன்மென்ட் வழங்க,  அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.  கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.  இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்  செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.  சமீபத்தில் வெளியான 'வந்த எடம்' பாடல் மற்றும் ப்ரிவ்யூ படத்தின் மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.அதே நேரம் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளிவந்து  10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஷாருக்கானின் ரசிகர்கள் பட்டாளமும், ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகர் மன்றமுமான SRK யுனிவர்ஸ், இந்த இரண்டு பெரிய மைல்கற்களைக் கொண்டாட ஒரு தனித்துவ...
ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘அடியே’  இசை மற்றும்  முன்னோட்டம் வெளியீடு

ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘அடியே’  இசை மற்றும்  முன்னோட்டம் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் 'அடியே'  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  நேற்று மாலை சென்னை பி.வி.ஆர். சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌'திட்டம் இரண்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும்  இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.  மல்டிவெர்ஸ்  என்ற  எண்ணத்தை மையப்படுத்தி ரொமான்ட...
”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்

”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பாலிவுட் உலகின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் நம் ஊர் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க,  கெளரி கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்'  திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி இருக்கிறது. ஜவான் திரைப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு செய்திகளும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.  இந்நிலையில்  ஜவான் படம் தொடர்பாக இதுவரை வந்த செய்திகளுக்கு முத்தாய்ப்பாக நடிகர் ஷாருக்கான் இன்று சமூக ஊடகத்தில், புத்தம் புதிய போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான கவுண்டவுனை துவக்கி வைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று திரையரங்குகளில்  பிரமாண்டமாக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.இப்படத்தின் முந்தைய அறிவிப்புகள், எப்படி  ரசிகர்களிடம்  பொதுமக்களிடம் கவன ஈர்ப்பு பெற்றதோ, அதைவிட ஷாருக்கான் வெளியிட்டிருக்கும் ஜவான் தொ...
”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர்.

”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர்.

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா,  போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” மிகப்பிரமாண்டமான  ஆக்சன் மற்றும் VFX  காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான டிராமாவாக, 2024ல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் அடுத்த ஆளுமையாக  தற்போது ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.ஆஸ்கர் விருதுகளை வென்ற Moonlight (2016), Three Billboards Outside Ebbing மற்றும் Missouri (2017)  போன்ற பல ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்ததோடு, ஹாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் நிக் துர்லோவ்.ஹாலிவுட் பிரபலமான நிக் துர்லோவ் இணைந்திருப்பதால், விருஷபா படத்தின் தரம் இந்திய அளவை த...
கல்யாண் ராமின் மக்களை காக்கும் “டெவில்” நவம்பர் 24ல் வருகிறது

கல்யாண் ராமின் மக்களை காக்கும் “டெவில்” நவம்பர் 24ல் வருகிறது

சினிமா, திரைச் செய்தி
நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் -  அவரின்  திரையுலக வாழ்க்கை பயணத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே  தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர்.  கடந்த  ஆண்டு  தெலுங்கு  திரையுலகில் 'பிம்பிசாரா'  எனும்  படத்தின்  மூலம்  மிகப்பெரும்  வெற்றியைப்  பெற்ற கல்யாண் ராம்,  சுவராசியமான மற்றொரு படத்துடன் மீண்டும்  வருகை  தந்திருக்கிறார்.மற்றொரு தனித்துவமான திரைக்கதை கொண்ட “டெவில்” திரைப்படம்  கல்யாண் ராம் நடிப்பில் உருவாகி, அவரின் ரசிகர்களையும் மக்களையும் குஷிப்படுத்த காத்துக் கொண்டு இருக்கிறது. கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில்  இப்படத்திற்கு 'டெவில்' என பெயரிட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.  மேலும்  இத்திரைப்படம், பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் செயல்பட்ட ரகசிய உளவாளி  ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.'டெவில்' படத்...
மீண்டும் மணிகண்டனுடன் இணைந்த ‘குட் நைட்’ தயாரிப்பாளர்கள்

மீண்டும் மணிகண்டனுடன் இணைந்த ‘குட் நைட்’ தயாரிப்பாளர்கள்

சினிமா, திரைச் செய்தி
பெரியஹீரோக்களின் படம் மட்டுமே  தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட்.அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது. நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் படத்தை தயாரிக்கிறார்கள்.இந்தப்படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் குட்நைட்  மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக  நடிக்கிறார். கண்ணாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் என ...
ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி”  பந்தம்

ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி” பந்தம்

சினிமா, திரைச் செய்தி
மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் முதன்முறையாக பாலிவுட்டின் முதன்மை நடிகரான ஷாருக்கானுக்கும் தென்னிந்திய ரசிகர்களுக்கும்  மிகப்பெரிய உறவை உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணம்  தென்னிந்திய கலாச்சார உடையான லுங்கியை முதன்மைப்படுத்தும் வகையில் பாடல் வரிகளும் நடனமும் அமைந்திருந்தது தான் என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்ப்பையும், தென்னிந்திய ரசிகர்களிடம் அது சென்றடைந்த வீச்சையும் பார்த்தோ என்னவோ மீண்டும் ஒரு முறை ஷாருக்கான் தன் படத்தின் பாடலில் லுங்கியை கையில் எடுத்திருக்கிறார்.ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, கெளரி கான் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஜவான்”.  இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதிய...
‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  வெளியானது

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது

சினிமா, திரைச் செய்தி
தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி,  அனைவரையும் இருக்கை நுனியில் கட்டிப்போட்டு பயமுறுத்திய திரைப்படம் “டிமான்ட்டி காலனி”.  2015 ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம்  பாகம், 8 வருடங்களுக்குப்  பிறகு 'டிமான்ட்டி காலனி 2'  என்ற பெயரில், மிகப்பிரமாண்ட பொருட்செலவில், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில்,  சிறப்பான VFX காட்சிகளுடன் உருவாகி வருகிறது.  இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, நடிகர் அருள்நிதி  நாயகனாக நடித்துள்ளார்.மேலும் நடிகை பிரியா பவானி சங்கர்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமர...