32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைச் செய்தி

1069 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 49 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 49)
”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர். சினிமா

”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர்.

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா,  போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” மிகப்பிரமாண்டமான  ஆக்சன் மற்றும் VFX  காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான டிராமாவாக, 2024ல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் அடுத்த ஆளுமையாக  தற்போது ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்கர் விருதுகளை வென்ற […]

07/08/2023 Inbaaraja
கல்யாண் ராமின் மக்களை காக்கும் “டெவில்” நவம்பர் 24ல் வருகிறது சினிமா

கல்யாண் ராமின் மக்களை காக்கும் “டெவில்” நவம்பர் 24ல் வருகிறது

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் –  அவரின்  திரையுலக வாழ்க்கை பயணத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே  தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர்.  கடந்த  ஆண்டு  தெலுங்கு  திரையுலகில் ‘பிம்பிசாரா’  எனும்  படத்தின்  மூலம்  மிகப்பெரும்  வெற்றியைப்  பெற்ற கல்யாண் ராம்,  சுவராசியமான மற்றொரு படத்துடன் மீண்டும்  வருகை  தந்திருக்கிறார். மற்றொரு தனித்துவமான திரைக்கதை கொண்ட “டெவில்” திரைப்படம்  கல்யாண் ராம் நடிப்பில் உருவாகி, அவரின் ரசிகர்களையும் மக்களையும் குஷிப்படுத்த காத்துக் கொண்டு இருக்கிறது. கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் […]

06/08/2023 Inbaaraja
மீண்டும் மணிகண்டனுடன் இணைந்த ‘குட் நைட்’ தயாரிப்பாளர்கள் சினிமா

மீண்டும் மணிகண்டனுடன் இணைந்த ‘குட் நைட்’ தயாரிப்பாளர்கள்

பெரியஹீரோக்களின் படம் மட்டுமே  தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட். அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது. நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் படத்தை தயாரிக்கிறார்கள். இந்தப்படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் […]

06/08/2023 Inbaaraja
ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி”  பந்தம் சினிமா

ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி” பந்தம்

மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் முதன்முறையாக பாலிவுட்டின் முதன்மை நடிகரான ஷாருக்கானுக்கும் தென்னிந்திய ரசிகர்களுக்கும்  மிகப்பெரிய உறவை உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணம்  தென்னிந்திய கலாச்சார உடையான லுங்கியை முதன்மைப்படுத்தும் வகையில் பாடல் வரிகளும் நடனமும் அமைந்திருந்தது தான் என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்ப்பையும், தென்னிந்திய ரசிகர்களிடம் அது சென்றடைந்த வீச்சையும் பார்த்தோ என்னவோ மீண்டும் ஒரு முறை ஷாருக்கான் தன் படத்தின் […]

06/08/2023 Inbaaraja
‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  வெளியானது சினிமா

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது

தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி,  அனைவரையும் இருக்கை நுனியில் கட்டிப்போட்டு பயமுறுத்திய திரைப்படம் “டிமான்ட்டி காலனி”.  2015 ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம்  பாகம், 8 வருடங்களுக்குப்  பிறகு ‘டிமான்ட்டி காலனி 2’  என்ற பெயரில், மிகப்பிரமாண்ட பொருட்செலவில், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில்,  சிறப்பான VFX காட்சிகளுடன் உருவாகி வருகிறது.  இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, நடிகர் அருள்நிதி  நாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகை பிரியா பவானி சங்கர்  […]

05/08/2023 Inbaaraja
நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த நண்பன் குழுமத்தின் “நண்பன் என்டர்டெய்ன்மென்ட்” சினிமா

நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த நண்பன் குழுமத்தின் “நண்பன் என்டர்டெய்ன்மென்ட்”

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.   ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை  வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை […]

05/08/2023 Inbaaraja
“கொலை: மர்மத்தை உடைக்கும் கதபாத்திரம்” – விஜய் ஆண்டனி இது புதிது

“கொலை: மர்மத்தை உடைக்கும் கதபாத்திரம்” – விஜய் ஆண்டனி

உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விஜய் ஆண்டனி. நடிகர் விஜய் ஆண்டனி, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா […]

19/07/2023 Dinesh R
“ராயர் பரம்பரை” – முழு நீள நகைச்சுவைப் படம் சினிமா

“ராயர் பரம்பரை” – முழு நீள நகைச்சுவைப் படம்

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத். T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை” ஆகும். மேலும் இப்படத்தில் கஸ்தூரி, K.R.விஜயா, R.N.R.மனோகர், பாவா லக்‌ஷ்மணன், சேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் […]

01/07/2023 Dinesh R
“போர்(த்) தொழில்: நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்தது” – சரத்குமார் சினிமா

“போர்(த்) தொழில்: நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்தது” – சரத்குமார்

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ த்ரில்லர் படம் “போர்(த்) தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் அசோக் செல்வன், ”இது சக்ஸஸ் மீட் என்பதை விட […]

30/06/2023 Dinesh R
தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம் சினிமா

தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு […]

07/06/2023 Dinesh R
தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம் Trailer

தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு […]

07/06/2023 Dinesh R
சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை – சாமானியன் Vs சாமியார் OTT

சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை – சாமானியன் Vs சாமியார்

இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய கோர்ட் டிராமாவான “சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai)” திரைப்படத்தை, ஜூன் 7 முதல் உள்ளூர் மொழிகளில் காணலாம். இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் படைப்பான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ படத்தை சமீபத்தில் வெளியிட்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி […]

05/06/2023 Dinesh R
ஜெய்லர், டீசல், ஜல்சா – நடிகர் டி.குமரனின் அனுபவங்கள் சினிமா

ஜெய்லர், டீசல், ஜல்சா – நடிகர் டி.குமரனின் அனுபவங்கள்

திரைப்படங்களைப் பார்க்கும் போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்களை நமக்குத் தெரியாது. முன் பக்கம் உயர்த்தி, இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம் அடித்து சறுக்கி விழும் மோட்டார் சைக்கிளில் இருப்பவர் முகம் யாருடையது என்றோ எவருக்கும் தெரியாது. பிரபல கதாநாயகர்களை மிரட்டும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து பேசும் அந்த நடிகரின் முகமோ நமக்குத் தெரியாது. ஒரு படத்தின் பரபரப்புக்காகத் தேவைப்படும் இவர்களுக்குச் […]

25/05/2023 Dinesh R
பவித்ர் பிரபாகர் – சிலந்தியால் கடிப்படாத இந்திய ஸ்பைடர் மேன் அயல் சினிமா

பவித்ர் பிரபாகர் – சிலந்தியால் கடிப்படாத இந்திய ஸ்பைடர் மேன்

உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்திய ஸ்பைடர் மேனைக் காணும் ஆவலில் இந்திய ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்லனர். இப்படத்தில் முதல் இந்திய ஸ்பைடர் மேன் பவித்ர் பிரபாகர் அறிமுகமாகிறார். மேலும் அவருக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் கொடுக்கிறார் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில். ஸ்பைடர் மேனின் அசல் இந்தியப் பதிப்பை, ஷரத் தேவராஜன், சுரேஷ் சீதாராமன், ஜீவன் ஜே. காங் ஆகியோரால் ‘ஸ்பைடர் […]

24/05/2023 Dinesh R
விடுதலை பாகம் 1-100 மில்லியன் பார்வை நிமிடங்கள் OTT

விடுதலை பாகம் 1-100 மில்லியன் பார்வை நிமிடங்கள்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியான ”விடுதலை பாகம் 1” திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதிக்குமளவு, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 28, ஜீ5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமா ரசிகனின் […]

16/05/2023 Dinesh R