Shadow

திரைச் செய்தி

ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி”  பந்தம்

ஜவானிலும் தொடரும் ”ஷாருக்கான் – லுங்கி” பந்தம்

சினிமா, திரைச் செய்தி
மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் முதன்முறையாக பாலிவுட்டின் முதன்மை நடிகரான ஷாருக்கானுக்கும் தென்னிந்திய ரசிகர்களுக்கும்  மிகப்பெரிய உறவை உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணம்  தென்னிந்திய கலாச்சார உடையான லுங்கியை முதன்மைப்படுத்தும் வகையில் பாடல் வரிகளும் நடனமும் அமைந்திருந்தது தான் என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்ப்பையும், தென்னிந்திய ரசிகர்களிடம் அது சென்றடைந்த வீச்சையும் பார்த்தோ என்னவோ மீண்டும் ஒரு முறை ஷாருக்கான் தன் படத்தின் பாடலில் லுங்கியை கையில் எடுத்திருக்கிறார்.ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, கெளரி கான் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஜவான்”.  இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதிய...
‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  வெளியானது

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது

சினிமா, திரைச் செய்தி
தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி,  அனைவரையும் இருக்கை நுனியில் கட்டிப்போட்டு பயமுறுத்திய திரைப்படம் “டிமான்ட்டி காலனி”.  2015 ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம்  பாகம், 8 வருடங்களுக்குப்  பிறகு 'டிமான்ட்டி காலனி 2'  என்ற பெயரில், மிகப்பிரமாண்ட பொருட்செலவில், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில்,  சிறப்பான VFX காட்சிகளுடன் உருவாகி வருகிறது.  இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, நடிகர் அருள்நிதி  நாயகனாக நடித்துள்ளார்.மேலும் நடிகை பிரியா பவானி சங்கர்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமர...
நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த நண்பன் குழுமத்தின் “நண்பன் என்டர்டெய்ன்மென்ட்”

நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த நண்பன் குழுமத்தின் “நண்பன் என்டர்டெய்ன்மென்ட்”

சினிமா, திரைச் செய்தி
நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்'ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை  வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை ராஜேஷ் வைத்யா, பியானோ இசை மேதை லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேடை நகைச்சுவை கலைஞர்களான பாலா-குரேஷி இணை, மேடையேறி தங்களது அதிரடியான பகடித்தனமான பேச்சால் பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்நிகழ்வையடுத்து நண்பன் குழுமத்தின் இணை நிறுவனரும், தொழிலதிபருமான நண்பன் மணிவண்ணன் விழாவிற...
“கொலை: மர்மத்தை உடைக்கும் கதபாத்திரம்” – விஜய் ஆண்டனி

“கொலை: மர்மத்தை உடைக்கும் கதபாத்திரம்” – விஜய் ஆண்டனி

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விஜய் ஆண்டனி. நடிகர் விஜய் ஆண்டனி, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கேரியரில் ஒருமுறையாவது இது போன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பைக் ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன். அதுமட்டுமின்றி, படத்தில் வரும் ஒ...
“ராயர் பரம்பரை” – முழு நீள நகைச்சுவைப் படம்

“ராயர் பரம்பரை” – முழு நீள நகைச்சுவைப் படம்

சினிமா, திரைச் செய்தி
சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத். T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை” ஆகும். மேலும் இப்படத்தில் கஸ்தூரி, K.R.விஜயா, R.N.R.மனோகர், பாவா லக்‌ஷ்மணன், சேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே. ராஜன், “இது ஒரு நல்ல படம் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறைய செலவு செய்திருக்கிறார்கள். இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக ...
“போர்(த்) தொழில்: நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்தது” – சரத்குமார்

“போர்(த்) தொழில்: நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்தது” – சரத்குமார்

சினிமா, திரைச் செய்தி
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ த்ரில்லர் படம் “போர்(த்) தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் அசோக் செல்வன், ''இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தைத் தங்கள் படமாகக் கொண்டாடினார்கள். ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக் காட்டினோம். யாராவது ட்விஸ்ட்டை உடைத்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட ட்விஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள். உங்கள் எல்லோருக்க...
தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம்

தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம்

சினிமா, திரைச் செய்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இயக்க...
தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்த...
சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை – சாமானியன் Vs சாமியார்

சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை – சாமானியன் Vs சாமியார்

OTT, சினிமா, திரைச் செய்தி
இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய கோர்ட் டிராமாவான "சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai)" திரைப்படத்தை, ஜூன் 7 முதல் உள்ளூர் மொழிகளில் காணலாம். இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் படைப்பான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ படத்தை சமீபத்தில் வெளியிட்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், P.C. சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வை எண்ணிக்கையில் சாதனை படைத்தது. ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்காக இப்படத்தை வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறத...
ஜெய்லர், டீசல், ஜல்சா – நடிகர் டி.குமரனின் அனுபவங்கள்

ஜெய்லர், டீசல், ஜல்சா – நடிகர் டி.குமரனின் அனுபவங்கள்

சினிமா, திரைச் செய்தி
திரைப்படங்களைப் பார்க்கும் போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்களை நமக்குத் தெரியாது. முன் பக்கம் உயர்த்தி, இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம் அடித்து சறுக்கி விழும் மோட்டார் சைக்கிளில் இருப்பவர் முகம் யாருடையது என்றோ எவருக்கும் தெரியாது. பிரபல கதாநாயகர்களை மிரட்டும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து பேசும் அந்த நடிகரின் முகமோ நமக்குத் தெரியாது. ஒரு படத்தின் பரபரப்புக்காகத் தேவைப்படும் இவர்களுக்குச் சரியான அடையாளமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இந்த வரிசையில் உள்ளவர் தான் நடிகர் டி. குமரன். இவரது வாழ்க்கையை அறிந்தால் அவரை நொடிப்பொழுதுகளில் கடந்து போகும் ஒருவராக நினைக்க முடியாது.நூற்றுக்கணக்கான படங்களில் இப்படிச் சில நிமிடங்களில் பிரபலங்களுடன் நடித்துள்ளவர் இவர். அது மட்டுமல்ல பாண்டிச்சேரி...
பவித்ர் பிரபாகர் – சிலந்தியால் கடிப்படாத இந்திய ஸ்பைடர் மேன்

பவித்ர் பிரபாகர் – சிலந்தியால் கடிப்படாத இந்திய ஸ்பைடர் மேன்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்திய ஸ்பைடர் மேனைக் காணும் ஆவலில் இந்திய ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்லனர். இப்படத்தில் முதல் இந்திய ஸ்பைடர் மேன் பவித்ர் பிரபாகர் அறிமுகமாகிறார். மேலும் அவருக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் கொடுக்கிறார் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில். ஸ்பைடர் மேனின் அசல் இந்தியப் பதிப்பை, ஷரத் தேவராஜன், சுரேஷ் சீதாராமன், ஜீவன் ஜே. காங் ஆகியோரால் ‘ஸ்பைடர் மேன்: இந்தியா காமிக் புத்தக’த்தில் ஜனவரி 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்திய ஸ்பைடர் மேன் முதல் முறையாகப் பெரிய திரையில் தோன்றுகிறார். மல்டிவெர்ஸில், பவித்ர் பிரபாகர் மற்ற ஸ்பைடர் மேன்களில் இருந்து எப்படி வித்தியாசமானவர் என்பதைத் தெளிவுப்படுத்தினார் இயக்குநர் கெம்ப் பவர்ஸ். அவர், “பவித்ரின் சக்திகள் மந்திரத்தி...
விடுதலை பாகம் 1-100 மில்லியன் பார்வை நிமிடங்கள்

விடுதலை பாகம் 1-100 மில்லியன் பார்வை நிமிடங்கள்

OTT, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியான ”விடுதலை பாகம் 1” திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதிக்குமளவு, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 28, ஜீ5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை உயர்த்துவதுடன், தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெற்றிமாறன். அந்த வகையில் அவரது புதிய திரைப்படமான 'விடுதலை பாகம் 1' சமூகத்திற்கு அவசியமான படைப்பாகவும், ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாகவும் அமைந்துள்ளது. இதுவரையிலும் காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி முதன்...
இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
கண்ணன் ரவி க்ரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்". மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகர் இளவரசு, “இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள். விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராகப் பணி செய்வது மிகக் கடினம் இருவருக்கும் மிகப் பெரிய வாழ்த்துகள். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்குத் தெரியும். தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கான காரணங்களையும் இந்தப் படத்தில் பேசியுள்ளனர். ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். கண்டிப்பாக இந்தப்...
விரூபாக்‌ஷா – மிஸ்டிக் ஹாரர் த்ரில்லர்

விரூபாக்‌ஷா – மிஸ்டிக் ஹாரர் த்ரில்லர்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் 5 ஆம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'விரூபாக்‌ஷா’. இந்தத் திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, 'காந்தாரா' புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். தமிழ்ப் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ...
ராம் சரணின் வசீகரமும் தனித்துவமும்

ராம் சரணின் வசீகரமும் தனித்துவமும்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில், ஆஸ்கர் விருதினைப் பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண் - உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்தக் காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை இந்த வேனிட்டி ஃபேர் எனும் யூட்யூப் சேனலில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொளி என்ற சாதனையும் படைத்திருக்கிறது. உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருப்பதால் உலக நட்சத்திரமாக ஜொலிக்கும் ராம்சரண் மற்றும் அவரது அன்பும் அழகும் நிறைந்த மனைவி உபாசனா என இருவரும் வாழ்க்கையின் மிகச் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றான ஆஸ்கர் விருதிற்கு கலந்து கொள்ளும் தருணங்கள், இந்தக் காணொளியில் இடம் பிடித்திருக்கிறது. ஆஸ்கர் விருது நிகழ்வில் அவரது நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான 'நாட்டு நாட்டு..' எனும் பாடலுக்காக ஆஸ்கர் விருத...