32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரை விமர்சனம்

1250 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 6 / 84
செய்திகள் வரிசை (பக்கம் 6)
சாவீ விமர்சனம் | Saavee review சினிமா

சாவீ விமர்சனம் | Saavee review

‘சாவு வீடு’ என்பதன் சுருக்கமாகச் சாவீ எனத் தலைப்பிட்டுள்ளனர். ‘சாவு வீட்டுக்கு டிக்கெட் கொடுங்க’, ‘சாவு வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்’ எனப் பார்வையாளர்களால் கேட்கவோ, சொல்லவோ முடியாதெனச் சில திரையரங்கத்தில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகச் ‘சாவீ’ எனத் தலைப்பை மாற்றி வெளியிடுகின்றனர். நாயகன் ஜூடின் இளைய தாய்மாமன் ஆரோக்யராஜ் இறந்து விடுகிறார். அவரது பிணம் காணாமல் போகிறது. ஆரோக்யராஜின் உடல் என்னானது என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது. ஆய்வாளர் சக்கரவர்த்தியாக ஆதேஷ் பாலா நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரம் […]

05/12/2025 Dinesh R
அங்கம்மாள் விமர்சனம் | Angammal review சினிமா

அங்கம்மாள் விமர்சனம் | Angammal review

சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’ ஆகும். விபின் ராதாகிருஷ்ணன் இயக்க, கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் படத்தில் அங்கம்மாள் என்ற மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீதா கைலாசம். கீதா கைலாசத்துக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பரணி, இளைய மகன் சரண் ஆவர். அடிப்படையில் ரொம்பவே பிடிவாத குணத்தை உடைய கீதா கைலாசம் அழுத்தமான, தீர்க்கமான பெண்மணி. […]

02/12/2025 Dinesh R
Indian Penal Law (IPL) விமர்சனம் சினிமா

Indian Penal Law (IPL) விமர்சனம்

ரேசிங் ஸ்டார் TTF வாசனை முதன்மை நாயகனாக முன்னிறுத்தி, உண்மைச் சம்பவங்களின் இன்ஸ்பயராகப்பட்டு உருவாகியுள்ளது IPL திரைப்படம். எளிய குடும்பப் பின்னணி கொண்டவர் கிஷோர். மனைவி அபிராமி, ஒரு தங்கை ஒரு மகள் என வாழ்ந்து வரும் அவர் கால் டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டி வருகிறார். அவரது தங்கை வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் போது, டெலிவரி பையனான TTF வாசன் மீது காதல் கொள்கிறார். TTF வாசனும், “பொண்ணு நல்லாயிருக்காளே!” எனக் காதலிக்கத் […]

02/12/2025 Dinesh R
தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review அயல் சினிமா

தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review

என்றுமே மென் சோக காதல் கதைகள், மனதைப் பாதிக்கும் காதல் கதைகள் தான் காலம் கடந்து நிற்கும். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மூன்று படங்களுமே காதல் கதைகள்தான். முந்தைய இரண்டு காதல் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்திருக்கின்றன. அந்தக் கூட்டணியின் மூன்றாவது படைப்பான “தேரே இஷ்க் மே” படத்தில், க்ரித்தி சனோன் நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதைப்படி, தனுஷ் எப்போதும் கோபத்திலேயே இருக்கும் இளைஞன். வன்முறை […]

30/11/2025 Dinesh R
ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review சினிமா

ரிவால்வர் ரீட்டா விமர்சனம் | Revolver Rita review

டிராகுலா பாண்டியன் எனும் பெரிய ரெளடி, ரீட்டாவின் வீட்டில் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். டிராகுலா பாண்டியனின் பிணத்தைக் கைப்பற்ற நினைக்கும் மார்டின் குழு, டிராகுலா பாண்டியனின் தலைக்காகக் காத்திருக்கும் ஆந்திர ரெட்டி, தந்தைக்காக எதையும் எந்த எல்லைக்கும் போய்ச் செய்யும் அவரது மகன் டிராகுலா பாபி, ரீட்டாவைப் பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் ஒரு காவலதிகாரி ஆகியோரிடமிருந்து ரீட்டா எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. சீட்டாவாகப் பேசிக் கொண்டே இருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் தொல்லை […]

28/11/2025 Dinesh R
ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapaadanum review இது புதிது

ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapaadanum review

திருமலை புரொடக்ஷன் தயாரிப்பில், சுகவனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ ஆகும். கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் ஓர் உலக சினிமாவாக உருவாகியுள்ளது இந்தப் படம். சிறுவயதில் கிணற்றில் விழுந்த தன் மகன் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை ஒண்டிமுனிக்கு நேர்ந்து விடுகிறார் நல்லபாடன். ஆனால் இரு பண்ணாடிகளின் அதிகார மோதலால் பல வருடங்களாக அந்த ஒண்டிமுனி கோவில் திருவிழா நடக்காமலே இருக்கிறது. காலம் உருண்டோட அந்த மகன் இளைஞனாகிப் […]

25/11/2025 Dinesh R
மாஸ்க் விமர்சனம் | Mask review இது புதிது

மாஸ்க் விமர்சனம் | Mask review

பிளடி பெக்கர், கிஸ் தோல்விக்குப் பிறகு கவின் நடிப்பில் வெளியாகியுள்ள படம். ஆண்ட்ரியா ஜெரெமையா, ருஹானி ஷர்மா நடிக்க, அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஆண்ட்ரியாவும் தயாரித்திருக்கிறார். நாயகன் கவின் ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ். வேவு பார்ப்பது, தகவல்களைத் திரட்டி தருவது உட்பட எல்லா வேலைகளையும் ஒரு சின்ன குழுவை வைத்துப் பார்த்து வருகிறார். செய்கிற வேலையில் காசு தான் முக்கியம் எனக் கறாராக இருக்கும் கவின், பெண்கள் விஷயத்தில் […]

21/11/2025 Dinesh R
SISU: Road to Revenge விமர்சனம் அயல் சினிமா

SISU: Road to Revenge விமர்சனம்

ஃபின்னிஷ் மொழியில், சிசு (SISU) என்றால், தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் முயன்று கொண்டிருப்பது என்பது போல் பொருள்படும். மன உறுதி, நெஞ்சுரம், முடிக்கவே முடியாத அசாத்தியமான செயல்களை முடிக்கக் கூடிய விடாமுயற்சி என்பனவும் சிசு எனும் சொல்லுக்கான அர்த்தங்களாகக் கொள்ளலாம். ஆட்டாமி கோர்பி, அத்தகைய ‘சிசு’வைத் தனக்குள்ளே கொண்டவர். அவர் போரால், குடும்பம் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகத் தனித்து விடப்பட்டவர். சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கரேலியாவில் தன் குடும்பம் வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார். அம்மர […]

21/11/2025 Dinesh R
தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga review இது புதிது

தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga review

சென்னைக் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருவர் கொல்லப்படுகிறார். அவ்வழக்கை விசாரிக்கும் மகுடபதி, கிடைக்கும் துப்புகளைக் கொண்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் செல்கிறார். அங்கே நடந்த ஒரு சிறுமியின் மரணத்திற்கும், கொலை வழக்கிற்கும், அக்குடியிருப்பைக் கட்டிய கோடீஸ்வரரான வரதராஜனுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகிக்கிறார் மகுடபதி. ஆனால் வரதராஜனும் கொல்லப்பட, நடக்கும் யாவற்றிற்கும் யார் காரணமென விரிகிறது படம். ஆட்டிசச் சிறுமியாக நடித்துள்ள பேபி அனிகா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கனத்தைக் கூட்ட உதவியுள்ளார். ஆசிரியை மீராவாக […]

21/11/2025 Dinesh R
யெல்லோ விமர்சனம் | Yellow review சினிமா

யெல்லோ விமர்சனம் | Yellow review

தமிழ் சினிமாவில் வன்முறை படங்களே மேலோங்கி இருக்கும் சூழலில் அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே வெளியாகும் மென்மையான ஃபீல் குட் படங்கள் ரசிகர்கள் மனதை வருடிச் செல்வதோடு மிகப்பெரிய வெற்றியையும் பெறுகின்றன. மிகச் சமீபத்திய உதாரணங்களாக லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களைச் சொல்லலாம். அந்த வகையில் ஒரு பெண்ணின் உணர்வுகளை மையப்படுத்தி இந்தியில் வெளியான குயின் படத்தை போல தமிழில் வெளியாகியிருக்கும் படம் தான் “யெல்லோ”வாகும். பிக் பாஸ் பிரபலம் “அராத்தி” பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக […]

21/11/2025 Dinesh R
இரவின் விழிகள் விமர்சனம் | Iravin Vizhikal review இது புதிது

இரவின் விழிகள் விமர்சனம் | Iravin Vizhikal review

பார்வையாளர்களை ஈர்க்கவும், அதன் மூலம் புகழ் பெறவும், எதையாவது கன்டென்ட்டாக்கி வீடியோ போட்டுத் தொடர்ந்து லைம்லைட்டிலேயே இருக்க நினைக்கும் யூட்யூபர், எக்ஸ், இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்களைச் சாடியுள்ளார். ஒரு விஷயத்தின் உண்மை நிலையைப் பற்றி எதுவும் அறியாமலே ஒரு கருத்தை மிக வலுவாகப் பொதுச் சமூகத்தில் விதைத்து விட முடிகிறது இந்த சோஷியல் மீடியா செலிபிரட்டிகளால். அதனால் தவறே இழைக்காதவர்கள் வீண் பழி சுமக்க வேண்டி வருகிறது. இத்தகையவர்களைத் தேடிக் கொல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அவன் முதலில் […]

21/11/2025 Dinesh R
கிறிஸ்டினா கதிர்வேலன் விமர்சனம் | Christina Kathirvelan review சினிமா

கிறிஸ்டினா கதிர்வேலன் விமர்சனம் | Christina Kathirvelan review

கும்பகோணம் நிலப்பரப்பில் நடக்கும் கதை. கதையின் நாயகன் கெளசிக், நாயகி பிரதீபா இருவருக்கும் ஒருவர் மீது ஒவருக்கு சின்னதாக ஈர்ப்பு இருக்கிறது. ஆனாலும் இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பிரதீபா, தமது குடும்பச் சூழலுக்கு காதல் செட்டாகாது என முடிவு செய்து நாயகனை விட்டு விலகி வேறு ஒருவரைத் திருமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார். இச்சூழலில் கெளசிக்கின் நண்பனுக்கும், பிரதீபாவின் நண்பிக்கும் காதல் திருமணம் நடக்கிறது. இந்தக் காதல் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்வதில் ஒரு குளறுபடி ஏற்பட்டுவிடுகிறது. […]

09/11/2025 Dinesh R
ஆர்யன் விமர்சனம் | Aryan review சினிமா

ஆர்யன் விமர்சனம் | Aryan review

விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷாலே தயாரிக்க உருவாகியுள்ள படம் ஆர்யனாகும். ராட்சசன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலில் நெறியாளராக இருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரைப் பேட்டி எடுக்கிறார். அப்போது அங்கு பார்வையாளராக வரும் செல்வராகவன், துப்பாக்கியை எடுத்து நீட்டி மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்புகிறார். அத்துடன் தான் ஒரு […]

02/11/2025 Dinesh R
மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review இது புதிது

மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review

தமிழ் சினிமாவில் புதுவிதமான களங்களில், கான்செப்ட்களில் திரைப்படங்கள் வெளிவருவது கொஞ்சம் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் கொரியன் திரைப்படங்களிலும், சீரீஸ்களிலும் பல பேன்டஸி கான்செப்ட்கள் இன்றும் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு ஃபேன்டஸி கான்செப்ட்டில் உருவாகி இருக்கும் படம் தான் “மெஸஞ்ஜர்” ஆகும். ரமேஷ் இளங்காமணி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, ஃபாத்திமா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் ஃபேண்டஸி கான்செப்டில் உருவாகியிருக்கும் ஒரு காதல் திரைப்படமாகும். […]

31/10/2025 Dinesh R
பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review இது புதிது

பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review

இந்திய அணிக்குத் தேர்வான மணத்தி P. கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையைக் கருவாக எடுத்துக் கொண்டு தன்னோட வலிகளையும் ஏக்கங்களையும் இணைத்து பைசனை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். அவரது முந்தைய படங்கள் பேசிய அரசியலையும் கைவிடாமல், படத்தின் பின்னணியாக வெங்கடேச பண்ணையார் – பசுபதி பாண்டியன் பகையின் பின்னணியில், கபடியில் சாதிக்க நினைக்கும் கபடி வீரனின் சமூகச் சூழலையும் மனநிலையையும் பதிந்துள்ளார். கபடி என்றால் வனத்தி கிட்டான்க்கு உயிர். அவனது திறமையைக் கண்டு ஊக்குவித்துத் தொடர்ந்து […]

19/10/2025 Dinesh R