
மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review
தமிழ் சினிமாவில் புதுவிதமான களங்களில், கான்செப்ட்களில் திரைப்படங்கள் வெளிவருவது கொஞ்சம் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் கொரியன் திரைப்படங்களிலும், சீரீஸ்களிலும் பல பேன்டஸி கான்செப்ட்கள் இன்றும் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு ஃபேன்டஸி கான்செப்ட்டில் உருவாகி இருக்கும் படம் தான் “மெஸஞ்ஜர்” ஆகும். ரமேஷ் இளங்காமணி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, ஃபாத்திமா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் ஃபேண்டஸி கான்செப்டில் உருவாகியிருக்கும் ஒரு காதல் திரைப்படமாகும்.
காதல் தோல்வியில் இருக்கும் சக்திவேலன், அதில் இருந்து வெளிவர முடியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தற்கொலை செய்து கொள்ளாதீங்க என ஒரு மெசேஜ் வருகிறது. அனிதா என்ற பெண் அனுப்பியிருக்கும் அந்த மெசேஜை படித்து மேலும் அவரிடம் பேச, அனிதா ...















