காணொளிகள்

கண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு
இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள "கண்டுபிடி" என்கிற ஆல்பம் பாடல் வெளியானது. இதில் நாயகன், நாயகியாக கார்த்திக் முனிஸ், சுமா பூஜாரி நடித்துள்ளனர்.
இதன் அறிமுக நாயகன் கார்த்திக் முனிஸ் சிவாகாசியைச் சேர்ந்தவர். இவர் அடுத்து ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். அந்தத் திரைப்படத்தையும் இசையமைப்பாளர் எம்சி ரிக்கோவே இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை ஆல்பத்தில் நடித்துள்ள நாயகனைப் பற்றி இயக்குநர் எம்சி ரிக்கோ, "கார்த்திக் முனிஸ் நடிப்பில் மிகுந்த ஆர்வமும் திறமையும் உள்ளவர். அவரின் மூன்று வருட சினிமா முயற்சியில் முதன்முதலாக அவர் என்னுடைய இயக்கத்தில் நாயகனாக அறிமுகமானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் இயக்கும் திரைப்படத்திலும் அவரே நாயகனாக நடிக்கவுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம் இப்பொழுது படம் ஆரம்ப கட்ட வேலையில் உள்ளத...

மழை சாரல் – இசை ஆல்பம்
மேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டென்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன .
இப்பொழுது, "மழை சாரல்" எனும் புது ஆல்பமாக வந்திருக்கிறது.
இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார்.
'காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே' என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க மாண்டேஜ் முறையில் பாடல் ஒலிக்கிறது. படம் பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் காதலுக்கு வேறொரு தளத்தில் வேறொரு வகையில் பொழிப்புரை எழுதுகின்றன.
ஏற்கெனவே ராஜேஷ் ராமலிங்கம் என்ற பெயரில் ஒரு படத்திற்கு பாடல்களை உருவாக்கி எஸ்.ஜானகியைப் பாட வைத்தவர் , இப்போது யாதவ் ராமலிங்கம் எனப் ...

ஆட்டிசம் 2019
ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, AVTISM: Think Different என்ற கருத்தரங்கை நிடத்தினார்கள்.
ராதிகா செளந்தரராஜன், நித்யா மோகன், உஷா ராமாகிருஷ்ணன், விவேக் மிஸ்ரா, ரேமா ரகு ஆகிய மருத்துவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. அதில் குறிப்பாக, ‘Neuromodulation for challenging behaviours” என்ற தலைப்பில், TMS சிகிச்சை முறை பற்றி மருத்துவர் விவேக் மிஸ்ரா விளக்கியது ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவல்லது.
TMS – Transcranial Magnetic Stimulation
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தலையில் கருவி பொறுத்தி, மூளையின் புரணியில் (Cortex) மின்காந்தப் புலத்தால் தூண்டுவதுதான் இச்சிகிச்சை முறையாகும். இதனால் குழந்தைகளின் anxiety அளவு குறைவதோடு, அவர்களின் intrapersonal skills-ஸும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில், மன அழுத்தத்த...













