Shadow

காணொளிகள்

இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ

இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல், நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார் இயக்குநர் அருண்காந்த். இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கவில்லை என்கிற போதிலும், எழுத்து - இயக்கத்துடன் இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார். நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். இவர் துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகியாகப் புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடி...
KickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்

KickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்

Others, காணொளிகள்
சோனி YAY! எனும் குழந்தைகளுக்கான சேனலை, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா தமிழிலும் ஒளிபரப்பி வருகிறது. அந்தச் சேனலின் புகழ்பெற்ற குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கிக்’ஓ (KickO) என்ற கதாப்பாத்திரம், குழந்தைகளைக் காண முதல் முறையாகச் சென்னைக்கு வந்திருந்தது. கிக்’ஓ எனும் அந்தக் கதாப்பாத்திரம், தனது கிக்களுக்காகவும் (Kicks), அழகான நடன அசைவுகளுக்காகவும் பேர் பெற்றது. நவம்பர் 11, ஞாயிறு அன்று, பெசன்ட் நகரில், சென்னைக் குழந்தைகளுக்குத் தனது நடன அசைவுகளைச் சொல்லிக் கொடுத்து, குழந்தைகளுடன் விளையாடி அவர்களை மகிழ்வித்தது கிக்’ஓ. குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களும் குழந்தைகளாகி, கிக்’ஓ-வுடன் கை குலக்கிப் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது....