Shadow

காணொளிகள்

KickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்

KickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்

Others, காணொளிகள்
சோனி YAY! எனும் குழந்தைகளுக்கான சேனலை, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா தமிழிலும் ஒளிபரப்பி வருகிறது. அந்தச் சேனலின் புகழ்பெற்ற குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கிக்’ஓ (KickO) என்ற கதாப்பாத்திரம், குழந்தைகளைக் காண முதல் முறையாகச் சென்னைக்கு வந்திருந்தது. கிக்’ஓ எனும் அந்தக் கதாப்பாத்திரம், தனது கிக்களுக்காகவும் (Kicks), அழகான நடன அசைவுகளுக்காகவும் பேர் பெற்றது. நவம்பர் 11, ஞாயிறு அன்று, பெசன்ட் நகரில், சென்னைக் குழந்தைகளுக்குத் தனது நடன அசைவுகளைச் சொல்லிக் கொடுத்து, குழந்தைகளுடன் விளையாடி அவர்களை மகிழ்வித்தது கிக்’ஓ. குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களும் குழந்தைகளாகி, கிக்’ஓ-வுடன் கை குலக்கிப் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது....
டெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்

டெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்

காணொளிகள், சமூகம்
தமிழகத்தைச் சூறையாடிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் அதிக உயிர் பலிகளையும், பொருளாதார சேதங்களையும் செய்துள்ளதை அடுத்து, அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில், தங்கவும் பொங்கவும் வழியின்றித் தவித்து வருகின்றனர். அறுந்து விழுந்த மின் கம்பங்கள்; அழிந்துபோன கால்நடைகள்; உடைந்துபோன ஓடுகள்; சிதிலமடைந்த குடிசைகள்; இடிந்துபோன வீடுகள்; சிதைந்துபோன செல்வங்கள் என விவசாய பூமியான டெல்டாவைச் சுரண்டியெடுத்துள்ளது கஜா புயல். சென்னையைப் போல் பெருநகரங்களில் மரபு சாரா மாதச் சம்பள வேலைகளைப் பணிபுரிபவர்கள், சென்னை வெள்ளத்திற்கு பிறகு இழந்தவற்றை கொஞ்சமேனும் மீட்டெடுத்ததைப் போல, பல வருடங்களாக வளர்த்த வாழை, தென்னை, வெளிநாடு போய் பல வருடங்கள் சம்பாதித்துச் சேர்த்த பொன் பொருட்களை முறையான மாதவருவாய் இல்லாத, எப்போதாவது சாகுபடி சமயத்தில் ஓரிரண்டு முறை பொருள் ஈட்டும் குடிமக்களால் மீட்டெடுக்க முடிவது அத்தனை சுலபம் அல்ல. ம...