Shadow

காணொளிகள்

தி ரிங்கஸ் ஆஃப் பவர் – ட்ரெய்லர்

தி ரிங்கஸ் ஆஃப் பவர் – ட்ரெய்லர்

OTT, Trailer, Web Series, காணொளிகள்
மத்திய பூமியின் விரிவாக்கத்தையும், டோல்கீனின் புகழ்பெற்ற மற்றும் அனைவராலும் விரும்பப்படும் கதாபாத்திரங்கள் எப்படி முரண்பாடுகளைக் கடந்து அதிக தூரம் பயணித்ததையும், மத்திய பூமிக்கு வரும் தீங்குகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதையும், இரண்டு நிமிடம் மற்றும் 36 வினாடிகள் கொண்ட இந்தப் புதிய டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்புதிய தொடரில் தீங்குக்கு எதிராக விதியின் சோதனைக்கு எப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் உள்ளாகின்றன என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பல சீசன் சித்திரத்தின் முதல் இரண்டு எபிசோடுகள் ப்ரைம் வீடியோவில் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உலகம் முழுவதும் செப்டம்பர் 2 வெள்ளியன்று (நேர மண்டலம் சார்ந்தது) வெளியாகும் மற்றும் வாரந்தோறும் புதிய எபிசோடுகள் கிடைக்கும்....
சீதா ராமம் – காஷ்மீரும் தனிமையும் காதலும்

சீதா ராமம் – காஷ்மீரும் தனிமையும் காதலும்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
நடிகர் துல்கர் சல்மான், நடிகை ராஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 'சீதா ராமம்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பட...
ஜோதி திரைப்படம் –  அரசாங்கத்துக்கு ஒரு மனு

ஜோதி திரைப்படம் – அரசாங்கத்துக்கு ஒரு மனு

Press Meet, காணொளிகள், சினிமா
"குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "ஜோதி" படத்தை, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த அரசாங்கத்திற்கு வைக்கும் ஒரு கோரிக்கை மனுவாகப் பார்க்கிறேன்" என்றார் படத்தின் தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி. SPR ஸ்டுடியோஸ் சார்பாகத் தயாரிப்பட்டிருக்கும் இப்படம் ஜூலை 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ஜீவி நாயகன் வெற்றியும், திரெளப்தி நாயகி ஷீலா ராஜ்குமாரும் இப்படத்தில் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ...
கார்த்திகேயா 2 – மாய சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்லும் படம்

கார்த்திகேயா 2 – மாய சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்லும் படம்

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
பீப்பள் மீடியா ஃபேக்டரியும், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸும் இணைந்து வழங்கும் ‘கார்த்திகேயா 2’ திரைப்படம், 2014 ஆம் ஆண்டு வெளியான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இது தெலுங்கு மொழியில் வரவிருக்கும் (5 மொழிகளில் டப் செய்யப்படுகிறது) ஒரு சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தினை இயக்குநர் சண்டூ மொண்டேட்டி எழுதி இயக்கியுள்ளார். T.G. விஸ்வ பிரசாத்தும் அபிஷேக் அகர்வாலும் இணைந்து தயாரிக்கின்றனர். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவா ஹர்ஷா, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் கட்டமனேனியின் ஒளிப்பதிவு செய்ய, கால பைரவா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திகேயா மீண்டும் வந்துவிட்டார். முன்னிருந்ததை விட சிறப்பான முறையில் திரும்பியுள்ளார். இந்த முறை எல்லாம் மனுஸ்மிருதியின் படி நடக்கும். தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதிரக்ஷிதஹ் தஸ்...
சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்களப் பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்ப...
“எல்லாமே ஜாலி தான்” – கனா காணும் காலங்கள்

“எல்லாமே ஜாலி தான்” – கனா காணும் காலங்கள்

Songs, காணொளிகள்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் “கனா காணும் காலங்கள்” தொடருக்காக, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆன்த்தம் பாடல், சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசோடுகளுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. தலைமுறை தாண்டி ரசிகர்களை அசத்தி வரும், “கனா காணும் காலங்கள்” தொடரின் புதிய சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடர் அதன் ரசிகர்களுக்கு ஓர் ஆச்சரியமான இசை விருந்தை அளித்துள்ளது. இத்தொடருக்காக மகிழ்ச்சியான, வேடிக்கை நிறைந்த பள்ளி நினைவுகள் போற்றும் ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் தீம் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு சிறந்த இசை இயக்குநர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார், பிரபல...
வீட்டுக்கு வருகிறது கலகலப்பான விசேஷம்

வீட்டுக்கு வருகிறது கலகலப்பான விசேஷம்

Trailer, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஜீ5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ்க் குடும்பப் பொழுதுபோக்கு படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல் வெளியிடுகிறது. 'பதாய் ஹோ' எனும் ப்ளாக்பஸ்டர் ஹிந்தித் திரைப்படத்தின் அதிகாரபூர்வமான தழுவலான இப்படத்தில், ஆர்ஜே பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் NJ சரவணனுடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு நடுத்தர வயது தம்பதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் போது, அது அவர்களின் வளர்ந்த மகன்களை சங்கடப்படுத்துகிறது. இந்தக் குழப்பங்களைக் கடந்து அந்தக் குடும்பத்தில் எப்படி சிரிப்பு மலர்கிறது எனும் கதை, உறவுகளின் அழகை வலியுறுத்துவதன் மூலம் நகைச்சுவை மற்றும் இதயத்தைத் தொடும் உணர்ச்சிகளின் மிகுதியாக இப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் குடும்பத்தினர் மற்றும் ந...
‘மாய கங்கா..’ பாடல் | பனாரஸ்

‘மாய கங்கா..’ பாடல் | பனாரஸ்

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
'கே ஜி எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான், கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனைத் தமிழ்த் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார். கன்னடத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்’. இந்தப் படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தp படத்தை என் ...