Shadow

காணொளிகள்

தோனி வெளியிட்ட ‘எல் ஜி எம்’ – பட டீசர்

தோனி வெளியிட்ட ‘எல் ஜி எம்’ – பட டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் 'எல் ஜி எம்' படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ்த் தயாரிப்பு 'எல் ஜி எம் ( Lets Get Married)’. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி,...
தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்த...
இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்

இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர், 9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம், 10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் வரிசை படங்கள், இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் மகத்தான வெற்றியைக் கண்டது. ஸ்பைடர் மேனுக்கு நாடு முழுவதும் உள்ள தீவிரமான ரசிகர்களைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் அவரை அனைத்து இந்தியர்களுடனும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான ஒரு தனித்துவமான வழியைக் கையாண்டு, இதை ஒரு பான்-இந்தியா திரைப்படமாக விளம்பரப்படுத்தி வ...
இரட்டா – இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்

இரட்டா – இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள "இரட்டா" படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பல சஸ்பென்ஸ்களைக் கொண்டுள்ளது இந்த த்ரில்லர் படம். இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஜோஜு, இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் தமிழ் - மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜோஜு ஜார்ஜுக்குச் சொந்தமான 'அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ்', மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.ஏற்கெனவே மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜஜின் கேரியரில் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதை ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது. பல படங்களில், போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக அ...
Folk Marley Records – அந்தோணிதாசனின் ஆடியோ கம்பெனி

Folk Marley Records – அந்தோணிதாசனின் ஆடியோ கம்பெனி

Songs, காணொளிகள், சமூகம்
பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records)' என்னும் புதிய ஆடியோ கம்பெனியைத் தொடங்கியுள்ளார். நாட்டுப்புறக் கலைஞராகப் பாடகராகத் தென் தமிழகத்தில் அறியப்பட்டவர்கள் அந்தோணிதாசனும், ரீத்தா அந்தோணியும். தனது கடின உழைப்பால் அந்தோணிதாசன் இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். கரகாட்டக் கலைஞர், நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என தனது கலைப்பயணத்தை வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். தான் கடந்துவந்த பாதையை மறக்காமல் தன்னைப் போலவே திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் கலைஞர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலமாக வெளிச்சம் பெறாத கலைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கில்...
தி பார்க் | சென்னையில் சீன – ஜப்பானியப் பாரம்பரிய உணவுகள்

தி பார்க் | சென்னையில் சீன – ஜப்பானியப் பாரம்பரிய உணவுகள்

காணொளிகள், சமூகம்
‘தி பார்க், சென்னை (THE Park, Chennai)’ நட்சத்திர விடுதியில், 2002 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் 601 பல்வகை உணவுக்கூடம் (Multicuisine Restaurant), புத்தம் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. விரைவாகவும் இலகுவாகவும் ஜீரணமாகும் மதிய உணவாகட்டும் அல்லது நிதானமாக உண்டு களைப்பாற முற்படும் இரவு உணவாகட்டும், அனைத்திற்குமே ஏற்ற வகையில் உணவு வகையறாக்கள் இங்கே உண்டு. கலையும் கற்பனையும் கலந்த கலவையாக இங்குத் தயாரிக்கப்படும் உணவு வகைகள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பதோடு நாவின் சுவைக்கும் நல்விருந்தளிக்கும். ஆர்வமும் நேர்த்தியும் திறமையும் மட்டுமே துணையாகக் கொண்டு, Executive Chef, Ashutosh Nerlekar-உம், அவரது குழுவினரும், சைவ உணவினருக்கும், அசைவ உணவினருக்கும் அற்புதமான பிரத்தியேக மெனுவைத் தயாரித்துள்ளனர்.தற்போது, 601 இல், சீனப் பாரம்பரிய உணவான டிம் ஸம் (Dim Sum) மற்றும் ஜப்ப...
“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்

“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்

Songs, இது புதிது, காணொளிகள்
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இயக்குநர் கோபிசந்த் மலினேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில், நந்தமூரி பாலகிருஷ்ணா திரையில் தோன்றிராத, மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார்.இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணிக் குரல் ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது.'சரஸ்வதி புத்திர' ராம ஜோகையா சாஸ்திரியின் பாடல் வரிகளும், பாடகர் கரீமுல்லாவின் காந்த குரலும், 'ஜ...
சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

Songs, அயல் சினிமா, இது புதிது, காணொளிகள், சினிமா
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே.எஸ்.ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ வெகுஜன மக்களுக்கான திரைப்படம் என்பதால் இயக்குநர் பாபி கொல்லி, கூடுதல் கவனத்துடன் படைப்பை உருவாக்கி வருகிறார். இதுவரை யாரும் திரையில் கண்டிராத வகையில் தனது தேவதையைக...