Shadow

காணொளிகள்

“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்

“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்

Songs, இது புதிது, காணொளிகள்
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இயக்குநர் கோபிசந்த் மலினேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில், நந்தமூரி பாலகிருஷ்ணா திரையில் தோன்றிராத, மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார்.இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணிக் குரல் ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது.'சரஸ்வதி புத்திர' ராம ஜோகையா சாஸ்திரியின் பாடல் வரிகளும், பாடகர் கரீமுல்லாவின் காந்த குரலும், 'ஜ...
சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

Songs, அயல் சினிமா, இது புதிது, காணொளிகள், சினிமா
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே.எஸ்.ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ வெகுஜன மக்களுக்கான திரைப்படம் என்பதால் இயக்குநர் பாபி கொல்லி, கூடுதல் கவனத்துடன் படைப்பை உருவாக்கி வருகிறார். இதுவரை யாரும் திரையில் கண்டிராத வகையில் தனது தேவதையைக...
“உச்சிமலை காத்தவராயன்” – சுயாதீன பாடல்

“உச்சிமலை காத்தவராயன்” – சுயாதீன பாடல்

Songs, காணொளிகள்
இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்தப் பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ''பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல..” எனத் தொடங்கும் இந்தப் பாடலில் நடிகர்கள் மா.கா.பா. ஆனந்த், ஆர்ஜே விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இந்தப் பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்த, இந்தக் குழு, வெகுஜன மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவுடன் இன்றும் ...
உச்சிமலை காத்தவராயன் – பட்டிமன்றத்தின் மூலம் பாடம் அறிமுகம்

உச்சிமலை காத்தவராயன் – பட்டிமன்றத்தின் மூலம் பாடம் அறிமுகம்

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகில் படைப்புகளை உருவாக்குவது எளிது. அதனை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவது கடினம். இந்நிலையில் நடிகர் ஆர்ஜே விஜய், மா.கா.பா ஆனந்த் மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் 'உச்சிமலை காத்தவராயன்' பாடலை அறிமுகப்படுத்துவதற்காக, திரையுலகப் பிரபலங்களுக்கு இடையே நடைபெற்ற பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவீ இசையில், இயக்குநர் டோங்லீ இயக்கத்தில், நடிகை ஆஷ்னா ஜாவேரி, மா.கா.பா. ஆனந்த் மற்றும் ஆர்ஜே விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'உச்சிமலை காத்தவராயன்' எனும் பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது. இதற்காக ரசிகர்களை ஆர்வமூட்டும் வகையில், திரைப் பிரபலங்களான நடிகர் மா.கா.பா. ஆனந்தும், நடிகர் ஆர்ஜே விஜயும் தனித்தனி அணியாகப் பிரிந்து பட்டிமன்றம் நடத்தினர். இதற்கு முன்னதாக ட்வீட்டரில் இருவரும் சுவராசியமான கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். நடிகை ஆஷ்...
‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்

Songs, அயல் சினிமா, காணொளிகள், சினிமா
கர்நாடகத்தைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவித் தயாராகியிருக்கும் படம் 'விஜயானந்த்' ஆகும். 'ட்ரங்க்' எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்குக் கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். 'ஸ்கெட்ச்' படப் புகழ் ரவி வர்மா சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். சுயசரிதை படைப்பாகத் த...
ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

Movie Posters, Teaser, காணொளிகள், கேலரி, சினிமா, திரைத் துளி
'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு 'ஹரோம் ஹரா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் தலைப்பிற்கான பிரத்தியேக காணொளியைப் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 'செஹரி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹரோம் ஹரா'. இதில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழங்குகிறார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, 'அக்டோபர் 31ஆம் தேதி அன...
ஆஹாவில் ஜீவா தொகுத்து வழங்கும் கேமிங் ஷோ | சர்க்கார் வித் ஜீவா

ஆஹாவில் ஜீவா தொகுத்து வழங்கும் கேமிங் ஷோ | சர்க்கார் வித் ஜீவா

Others, OTT, காணொளிகள், திரைத் துளி
ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரைத்தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவிகித பிரத்தியேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதளத் தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனைத் துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது.  இந்த விளை...